தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

ஆஸி. குடிவரவு அமைச்சர் மொரிசனுக்கு ஒரு கடிதம்!

ஐ.நா விசாரணை! சாட்சியாளரை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:41.47 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பவர்கள் எவரும் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 6 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
இந்தக் கோரிக்கை உள்ளிட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர்ää அதன் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள்; மற்றும் இலங்கை அரசாங்க பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச ஜூரிகள் குழு, சர்வதேச மன்னிப்புச்சபை,  மனித உரிமைகளுக்கான ஆசிய பேரவை,  சிவிக்கஸ் அமைப்பு, புறக்கணிப்புகளுக்கு எதிரான சர்வதேச இயக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை என்பன இந்தக்கடிதத்தை அனுப்பியுள்ளன.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை காப்பாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.
பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் உறவைக்கொண்டுள்ள மனித உரிமைக்காப்பாளர்கள் மீதே இந்த இலக்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு தகவல்களை வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மனித உரிமை காப்பாளர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளி;ப்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்று கூறியுள்ளமையை குறித்த 6 மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோதும் இந்த அச்சுறுத்தல்களை அவரால் நேரடியாக உணரமுடிந்தது.
சிங்கள நாளிதழான திவயின குறித்த அரசசார்ப்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாட்டை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது.
எனவே தங்களுக்குள்ள கடமைகளின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவோர் அச்சுறுத்தலுக்கும் பழிதீர்க்கப்படுவதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் அந்த நாடு சிவில் மற்றும் அரசியல் ரீதியான உரிமைக்காப்பாளர்களை பாதுகாக்கும் கடமையை சட்டரீதியாக கொண்டுள்ளது.
இது அரசாங்கத்துக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. அரசாங்க சார்ப்பற்றவர்களுக்கும் பொருந்தும்.
எனவே ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவோருக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிதீர்த்தல்கள் என்பவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று 6 சர்வதேச அமைப்புக்களும் தமது கடிதத்தில் கோரியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdex4.html
ஆஸி. குடிவரவு அமைச்சர் மொரிசனுக்கு ஒரு கடிதம்!
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:51.27 AM GMT ]
அன்பின் அமைச்சர் மொரிசன் ஐயா, வணக்கம்!.  நீங்கள் தற்போது இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவது மிகவும் வேதனைக்கு உரிய விடயமாக உள்ளது. உங்களது செயற்பாடுகள் ஒருபக்கம் வரவேற்கதக்கது. இன்னொரு பக்கம் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது .
அப்பாவி அகதிகள் பலர் நடுக்கடலில் மரணித்துள்ளார்கள், சிலர் கடல் கொள்ளையர்கள்ளல் அநியாயமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள், சிலர் தரகர்களின் பொய்யான வாக்குறுதியை நம்பி இன்று அநாதரவாக உள்ளார்கள், என்ற நோக்குடன் நீங்கள் செய்யும் சில விடயங்கள் இன்று அகதிகள் மத்தியில் உங்கள் மீது பெரும் கோபத்தை ஏற்ப்படுதுயுள்ளது.
அதேநேரம் நீங்கள் சிறுவர்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் விதம் இன்று சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ள வேண்டுமா என்ற பாரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
ஐயா நீங்கள் ஒன்றை மிகவும் அவதானமாக புரிந்து கொள்ள வேண்டும் ஏன் இலங்கை தமிழர்கள் அகதிகளாக புலம் பெயர்கின்றார்களா என்பது இன்று உலகறிந்த உண்மையாக உள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணமாகத்தான் அவர்கள் சொந்த நாட்டை விட்டு சொந்தங்களை விட்டு அனாதைகள் போல் இன்று நாடு நாடாக அகதி எனும் நாமத்துடன் இருக்கின்றனர்.
நீங்கள் பல தடவை இலங்ககைக்கு சென்று இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தங்கள் பல செய்துள்ளிர்கள். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். உங்களுடைய இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் ஒரு தரகரையாவது கைது செய்துள்ளதா?
இல்லை, நடவடிக்கை தான் எடுத்துள்ளதா? நீங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு செய்கின்ற ஒவ்வொரு உதவியும் உங்களுடைய நாட்டுக்கு மேலும் பல படகுகளை அனுப்புவதற்கு நீங்களே வழி வகிக்கின்றமைதான் உண்மை.
இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கை ஒரு பாரிய மனித உரிமை மீறலை செய்து உள்ளது என்பது பற்றி பல நாடுகள் தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கும் போதும் நீங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
அது நீங்கள் நல்ல ஒரு மனித நேயம் மிக்க நாடாக இருந்து அப்பாவி சிறுபான்மையினருக்கு செய்யும் பாரிய துரோகமாக உள்ளது.
அதை நீங்கள் விளங்கிக் கொள்வதாக இருந்தால் எமது வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் புரியும் ஏன் எதற்காக இந்த சிறுபான்மை இனத்தவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது என்பது.
இந்த வரலாறுகளை நான் உங்களுக்கு சொல்லி விளங்கப்படுத்துவதை விட உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன். காரணம் சர்வதேச நாடுகள் பல இன்று சிறுபான்மை மக்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும் எனற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
நீங்கள் பல தரப்பட்ட சட்டங்களை போட்டிருக்கின்றீர்கள், பல மில்லியன் கணக்கில் பணத்தை வீண் விரயம் செய்கின்றீர்கள், இவற்றுக்கு மாறாக நீங்கள் ஏன் சம்பந்தப்பட்ட அகதிகளாகிய எங்களுடன் பேசி ஒரு தீர்வுக்கு வரலாம் தானே.
நாங்கள் உங்களிடம் கேட்டபோது உங்களது நாட்டை அல்ல உங்களது நாட்டில் நாங்களும் வாழ்வதற்கு சிறு சந்தர்ப்பம் தாருங்கள் என்றுதான் கேட்ட்கின்றோம்.
இந்த புதுச் சட்டம் காரணமாக நீங்கள் உங்களுடைய நாட்டுக்கு கெட்ட பெயரையே சம்பாதிக்க வேண்டி உள்ளது. எந்த நாட்டிலாவது முகாமில் இருந்து விடுதலை செய்து அவர்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்பையும் பறித்து படிப்பதற்க்கான வாய்ப்பையும் தடுத்து வைத்துள்ளார்களா?  அவர்களை ஏன் முடக்கி வைத்துள்ளீர்கள் இது சரியா? அகதி சட்டத்துக்கு அமைவாகவா இதை செய்கின்றீர்கள், அகதி சட்டத்தில் இப்படி ஒரு சட்டம் இருக்கின்றதா?
இதன் காரணமாக பல பிரச்சினைகள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றும் உள்ளது, இதற்க்கு காரணம் நீங்கள்தான்.
ஏன் உங்களுக்கு விளங்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை, அகதிகளுக்கு அவர்களுடைய அடிப்படை வசதிகளை கொடுத்தால் அவர்கள் ஏன் இப்படியான தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள் தானே.
இன்னும் ஒன்றை பார்த்தால் நீங்கள் கொடுக்கும் 14 நாள் தொகை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் தொழில் செய்வதற்க்கான அனுமதி வழங்கினால் உங்களுடைய நாட்டுக்கு வருமானம் தான் அதிகாரிக்கும் தொழில் செய்தால் வரி பணம் கட்ட வேண்டும். ஆகவே இவர்கள் மூலமாக நாட்டின் வருமானத்தையும் அதிகரிக்கலாம்.
இன்னும் ஒரு பக்கம் அப்பாவி அகதிகளை வைத்து கொள்ளை லாபம் தேடும் வர்த்தகர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமையும்.
மிகவும் மனித நேயமிக்க இந்த நாட்டுக்கு இந்த அகதிகள் விடயத்தில் ஒரு களங்கம் ஏற்ப்படுவதை எம்மால் ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே நீங்கள் எமது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.
அதிலும் முக்கியமாக உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் நீங்கள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து எடுக்கும் எந்த விதமான நடவடிக்கையும் உங்களுக்கு வெற்றி அளிக்காது.
உங்களால் முடிந்தால் உங்களது நாட்டுக்கு அகதியாக வந்த எம்மை வைத்து இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டால் வெற்றி பெற சிறிய வாய்ப்பு உள்ளது என்பது எனது சிறிய வேண்டுகோளாக உள்ளது.
இதை பார்க்கும் போது வாசகர்கள் என்னை தப்பா நினைக்க வேண்டாம். நான் எதற்காக இதை முன் வைத்ததற்கான காரணம், இனிமேலும் எமது சமூகம் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட ஆட்கடத்தல் பொதுவாக சொல்லப் போனால் இதுவும் ஒரு தமிழ் இன அழிப்புத்தான். ஆகவே இப்படியான இன அழிப்புக்கு துணை போகக் கூடாது என்பதற்க்காகத் தான் இதை முன் வைத்துள்ளேன்.
தப்பாக இருந்தால் கடந்த காலங்களில் எனக்கு கொலை மிரட்டல் செய்வது போல் செய்யாமல் என்னை நேரடியாக அழைத்து பேசுங்கள் என்ற இந்த கருத்தையும் முன்வைக்க விரும்புகின்றேன்.
இவற்றை எல்லாம் எமது உறவுகளுக்காகவே நான் எழுதுகின்றேன் என்பதே உண்மை நிலைப்பாடு.
மேற்படி விடயங்களை ஆராயும் போது தர்க்க ரீதியாகவும் நியாய பூர்வமாகவும் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இதை நான் மட்டக்களப்பு மண்ணில் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாக் கூறவில்லை.
இந்த அகதிகளில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். எமது இந்த அகதிக் கொள்கையில் சிறிய மாற்றத்தை ஏற்ப்படுத்தி எமக்கு மறு வாழ்வு வழங்கும்படி வேண்டி நிற்கிறேன்.
சசி
shashi.batti@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdex5.html

Geen opmerkingen:

Een reactie posten