[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 01:31.07 AM GMT ]
காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வன்முறைகள் அதிகம் இடம்பெறும் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தியேனும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரியுள்ளார்.
அண்மைய நாட்களில் கட்சிக் காரியாலங்கள் மீது தாக்குதல்கள்ää அச்சுறுத்தல்கள், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் பதிவான பிரதேசங்களில் காவல்துறை ரோந்து சேவைகளை அதிகரித்தல், மேலதிக காவல்துறை உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தல், காவல்துறை முறைப்பாட்டு பிரிவிற்கு அதிகளாவன அதிகாரிகளை ஈடுபடுத்தல் போன்றந நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
தேர்தல் கடமைகளுக்காக காவல்துறையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணம் போதுமானதல்ல என்றால் கூடுதலான பணத்தை வழங்கத் தயார்.
பிபிலை, படல்கும்புர, மொனராகல் மற்றும் வியலுவ பிரதேசங்களில் அதிகளவான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdexy.html
புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ் விமானத்தின் பாகங்கள் மாயம்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 01:53.51 AM GMT ]
விமானப்படையினருக்கு சொந்தமான அன்டனோவ்-32 ரக விமானம் பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது.
2000ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வில்பத்து வனப்பிரதேசத்திலிருந்து ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த இராணுவ, விமான மற்றும் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் அனுராதபுர உயர் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு இலக்கான விமானத்தின் பாகங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம், அனுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறனெனினும் இந்த விமானத்தின் பாகங்களும், ஆவணங்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் நேற்று முன்தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி வரையில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுததுக்கொள்ளப்பட உள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலி உறுப்பினர்களான ஜெகன் மற்றும் சிவலிங்கம் ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் கேமா சுவர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdexz.html
வடக்கில் தொடரும் நிலப்பறிப்பு, இராணுவ பிரசன்னம் - மோடியிடம் முறைப்பாடு
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:02.28 AM GMT ]
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர்.
இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக்கோரிக்கையை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அகதிகள், இலங்கை திரும்பினால் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக மாவை கூறினார்.
நிலப்பறிப்பு, இராணுவ பிரசன்னம் மற்றும் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் காரணமாக பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் மோடியின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இந்திய பிரதமருடன் அரை மணித்தியால பேச்சுவார்த்தைக்கே நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அது ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாக அவர் கூறினார்
இதேவேளை இந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம் சமூகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி சமூகம் என்பவற்றுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று மோடி இதன்போது தமக்கு அறிவுரை கூறியதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdex0.html
Geen opmerkingen:
Een reactie posten