இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், சர்வதேச எல்லையை கடந்து இலங்கை எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள் வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் நலனை மட்டுமே கருதும் தமிழக மீனவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் நலனை நினைத்து பார்ப்பதில்லை.
இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
ஒருவேளை அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ?
1876ம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தம். இதை ஆங்கிலேய அரசே ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும், 1924ம் ஆண்டு முதல் கச்சத்தீவு தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி தமிழக அரசு அதனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே தமது அரசு விரும்புவதாக மோடி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.newindianews.com/view.php?204604m22034mDfd4eaSmOld4cb0M6AKeddcAIMQedbcbJlOI3e421DmY3e03cA40Q23
|
Geen opmerkingen:
Een reactie posten