அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முறைமையானது சித்திரவதைக்கு ஒத்த சூழ்நிலையை கொண்டிருப்பதாக அகதிகள் தொடர்பான பிரதான மனோதத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். அகதிகள் தொடர்பில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றிவரும் பீட்டர் யங்க் என்பவரே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
த கார்டியன் அவுஸ்திரேலியாவுக்கு செவ்வி வழங்கிய அவர், இந்த முகாம்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என்பதை கண்டறிய முடிகிறது என குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்பவர்கள் சட்டவிரோதிகள் என கருதப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகள் நவுரு மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய இடங்களில் தடுத்துவைக்கப்படுகின்றனர்.
இந்த இடங்களில் நீண்டகாலமாக அகதிகள் தடுத்துவைக்கப்படும் போது அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்றும் பீட்டர் யங்க் குறிப்பிட்டுள்ளார். பிந்திய உத்தியோகபூர்வ தகவல்களின் படி ஜுலை 31 வரை பப்புவா நிவுகினி - மானஸ் தீவில் ஆயிரத்து 127 அகதிகளும் நவுருவில் ஆயிரத்து 146 அகதிகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். 355 பேர் இந்த இடங்களில் இருந்து தமது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர் என அறியப்படுகிறது. |
Geen opmerkingen:
Een reactie posten