[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 11:49.57 AM GMT ]
இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி ஆரம்பித்த போராட்டத்தை அவர்கள் இடையில் கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலில் இல்லாது போயுள்ள ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மக்களை அணி திரட்டும் நோக்கில் இந்த முதலாம் முன்னணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
முதலாம் முன்னணியின் செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் அமைப்பின் அறிமுகத்திற்கான முதலாவது கூட்டத்தில் வெளியிடப்படும் எனவும் கெலும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சரும் ஜே.வி.பியின் முன்னாள் அரசியல் சபை உறுப்பினருமான சந்திரசேன விஜேசிங்க, சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகம ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnqy.html
புதிய அரசியலமைப்புச் சட்டம்- அரசாங்கம் தீர்மானம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 12:04.45 PM GMT ]
தேசிய சுதந்திர முன்னணியின் 12 அம்ச திட்டத்திற்கு அரசாங்கம் இணங்கியமை தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான சட்ட வல்லுநர்கள் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை தயாரித்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnqz.html
தேசிய சுதந்திர முன்னணி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது- ஐ.தே.கட்சி
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 01:12.44 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள தேசிய சுதந்திர முன்னணி மொனராகலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுகிறது.
இதன் மூலம் தேசிய சுதந்திர முன்னணி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது.
இந்த தந்திரம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?.
அதேவேளை அரசியலமைப்பை திருத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய சுதந்திர முன்னணியிடம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நம்ப முடியாது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க வேண்டும்.
தேசிய சுதந்திர முன்னணி அண்மைய காலமாக அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்ததுடன் அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை என குற்றம் சுமத்தி வந்தது.
அத்துடன் அரசாங்கத்தில் ஊழல் இருப்பதாகவும் சரியான பாதையில் நாட்டை வழி நடத்தவில்லை எனவும் அந்த கட்சி கூறியது.
இது மக்களை ஏமாற்றும் முயற்சி எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்து வந்ததாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை - அத்தநாயக்க
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க கூடிய ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கை கொண்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் பணியாற்றும் நம்பிக்கையை கொண்டிருப்பதாகவும் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் எனவும் அதன் இறுதி மூச்சு அடுத்த ஆண்டிற்குள் முடிந்து விடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnq1.html
பெளத்த துறவிகளிடம் தொடரும் திமிர்த்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 02:13.38 PM GMT ] [ valampurii.com ]
நாரதரின் நிலைமையில் நம்மிலும் பலர் இருக்கின்றனர். எதிலும் பிரச்சினையை ஏற்படுத்துவதில் அவர்களுக்கு அலாதிப்பிரியம்.
இவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்தி தங்களைப் பிரபலப்படுத்த முற்படுபவர்கள் அழிவுக்கான திட்டமிடலையே செய்கின்றனர். இத்தகையவர்கள் சமயம், அரசியல் என பல் துறைகளிலும் காணப்படுவர்.
அந்தவகையில் எங்கள் நாட்டை எடுத்துக் கொண்டால் அரசியலிலும் சமயங்களிலும் இத்தகையவர்கள் இருப்பதைக் காணமுடியும். அதிலும் எங்கள் நாட்டில் ஒரு குறிப்பிட்ட பெளத்த பிக்குகள் நடந்து கொள்ளும் முறை கண்டு இதயம் கருகிக் கொள்கிறது.
கெளதம புத்தபிரானின் வாழ்க்கை முறை, அவரின் போதனைகள் என்பவற்றைப் பின்பற்றுவதற்காகத் துறவு பூண்ட பெளத்த பிக்குகள் இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டவர்கள்.
ஆளும் வர்க்கம் இன ரீதியில் செயற்பட்டாலும் பெளத்த துறவிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்தி நாட்டின் சுபீட்சத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டியவர்கள்.
மற்றவர்கள் விரும்பிக் கொடுப்பதை ஏற்று உண்டு மக்கள் பணி செய்வதை தம் கடமையாகக் கொண்டவர்களே பௌத்த பிக்குகள்.
உண்மையில் பௌத்த பிக்குகள் அணிகின்ற மஞ்சள் ஆடை என்பது கூட, ஒரு பற்றற்ற வாழ்வை எடுத்தியம்புவதாகும்.
அன்பு, தியானம், அகிம்சை என்பவற்றின் ஊடாக தர்மத்தை நிலைநாட்டுவதற்கான பணியில் ஈடுபட வேண்டிய பெளத்த துறவிகளில் சிலர் நடந்து கொள்கின்ற முறைகளைப் பார்க்கும் போது, கெளதம புத்த பிரானின் போதனைகளுக்கு என்னாயிற்று என்று கேட்கும் அளவிலேயே நிலைமையுள்ளது.
பெளத்த பிக்குகளின் இத்தகைய போக்கு எதற்கானது? புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆட்பட்டவர்களாக இருப்பதன் ஊடாக, இந்த நாட்டில் அழிவை ஏற்படுத்த முடியுமே அன்றி வேறு எதனையும் அவர்களால் செய்துவிட முடியாது.
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டில் நிலைவி வரும் இனவாத நோயின் பின்னணியில் பெளத்த பிக்குகளின் பேரினவாத சிந்தனைகள், மதவாத திமிர்த்தனங்கள் இருந்துள்ளன என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
இத்தகைய நிலைமை தொடருமேயானால் இலங்கையின் எதிர்கால அமைதி என்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.
எனவே பெளத்த பிக்குகள் சிலர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் தொடர்பில் பெளத்த பீடங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
அதேசமயம் ஆட்சியாளர்களும் பெளத்தத்தின் பெயரால் மெளனம் காக்காமல் நாட்டில் அமைதியை குலைக்கும் பெளத்த பிக்குகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெளத்த துறவிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் பெளத்த துறவியாகுவது புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றுதல் என்பதற்கல்லாமல், மதவாதத்தை, இனவாதத்தை, மொழிப்பேதமையை ஏற்படுத்துவதற்கானது என்ற நினைப்பு இளம் பெளத்தர்களிடம் ஏற்படும்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் இறைவன், சமயம், நம்பிக்கை என்ற ஆன்மிக நலனுக்கு இத்தகைய சம்பவங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதும் இவற்றின் விளைவாக இந்த நாட்டில் குழப்பங்கள் தொடர்வதற்கான சூழ்நிலையே காணப்படும் என்பதும் கருத்தில், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnq2.html
Geen opmerkingen:
Een reactie posten