தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

கஞ்சா போதைப்பொருளுடன் இலங்கை அகதிகள் கைது - நாகப்பட்டினம் மீனவர்களுக்கு விளக்கமறியல்!

மகிந்தவை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி. - நாமல் ராஜபக்ஷவின் செயல் அருவருக்கத்தக்கது: ஐ.தே.கட்சி
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:47.45 AM GMT ]
நீண்டகால சாதக நிலைமை தமது கட்சிக்கு கிடைக்கும் என்று எண்ணி வரும் ஜே.வி.பி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஊடகங்களிடம் உறுதியாக தமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு வரும் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சரத் பொன்சேகா, ஷிராணி பண்டாரநாயக்க, மாதுளுவாவே சோபித தேரர் இவர்களில் எவருக்கும் ஜே.வி.பி ஆதரவு வழங்காது என அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் ஜே.வி.பியின் இந்த தீர்மானத்தை அறிவித்து விட்டு மறுநாள் அதிகாலை அனுராகுமார திஸாநாயக்க 70 லட்சம் ரூபா பெறுமதியான தனது டொயோட்டா கெப் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தை எதிர்நோக்கினார்.
அதேவேளை ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.டி. லால்காந்த நேற்று வெளியான பத்திரிகை ஒன்றிடம் அனுரகுமார வெளியிட்டிருந்த கருத்து நிகரான கருத்தை வெளியிட்டிருந்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதை விரும்பாதது போல் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது இருப்பது நிறைவேற்று அதிகாரம் இல்லை எனவும் அது அரைகுறை நிறைவேற்று அதிகாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு நாடாளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவதாகும் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜே.வி.பி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒழிப்பதற்கும் பொது வேட்பாளருக்கும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் சகல சூறையாடல்களுக்கு அனுசரணை வழங்கி, தோல்வியான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் இலங்கையின் பணத்தை சுருட்டி வரும் சீனாவின் அழுத்தமே ஜே.வி.பியின் இந்த தீர்மானத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சீனா, ஜே.வி.பியின் செலவுகளுக்கு எனக் கூறி அந்த கட்சியின் இன்றைய தலைவருக்கு நிதியுதவியை வழங்கி வருகிறது. இதனால் சீனாவின் அழுத்தங்களை மீறி ஜே.வி.பியின் தலைவர்களுக்கு செயற்பட முடியாது என அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாமல் ராஜபக்ஷவின் செயல் அருவருக்கத்தக்கது: ஐ.தே.கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோரின் செயல் அருவருக்கத்தக்கது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோர் கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலைகள் சிலவற்றுக்கு சென்று றகர் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாடகர் தனது பாடலுக்கான இசையை கையடக்க தொலைபேசி மூலம் ஒளிப்பரப்பி பாடியுள்ளார்.
பாடலில் அடங்கியுள்ள வார்த்தைகளான எனது ஸ்வீட் மெனிகா உம்மா தருங்கள் என்ற வரிகளை மாணவிகள் முன்னால் பாடியது அருவருக்கத்தக்கது.
பாடசாலைகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்ய அக்கறை காட்டுபவர்கள் மற்றும் நாடகங்களை நடத்துபவர்கள் கூட பாடசாலைகளுக்குள் செல்வதற்கு கல்வியமைச்சின் அனுமதியை பெற வேண்டியது அவசியம்.
பாடசாலைகளின் ஒழுக்கத்தை பாதுகாக்கவே இந்த சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளுக்குள் பாடகருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சென்றமையானது பாடசாலையின் ஒழுக்கத்தை மீறும் செயல்.
இதற்கு இடமளித்த பாடசாலைகளின் அதிபர்களின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றோம்.
இந்த றகர் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் நடைபெற்ற பாடசாலைகளின் பெயர் பலகைகளை ஒளிப்பதிவு செய்ய ஊடகவியலாளர்களுக்கு பாடசாலை அதிகாரிகள் அனுமதி வழங்காது அவர்கள் திட்டியுள்ளனர். இதனையும் நாங்கள் கண்டிக்கின்றோம் எனவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep5.html
கடன்பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் கொள்ளை! கோத்தபாயவின் புதிய வழிமுறை
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:52.31 AM GMT ]
கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பாரிய தொகையொன்றைக் கொள்ளையடிப்பது தொடர்பில் கோத்தபய ராஜபக்ஷவின் கவனம் திரும்பியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த புதிய வழிமுறை தொடர்பில் தற்போது தொடர்ச்சியான கலந்தரையாடல்களை நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை காலமும் தனக்குக் கீழ் இருந்த பாதுகாப்பு அமைச்சின் ஆயுதக் கொள்வனவு, நகர அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றின் மூலமாகவே பெருந்தொகைப் பணம் கோத்தபாயவினால் கொள்ளையடிக்கப்பட்டு வந்த்து.
எனினும் ஆயுதக் கொள்வனவு மூலமான கமிஷன் யுத்தம் முடிவுற்றதன் காரணமாக பெருமளவில் குறைந்து போயுள்ளது. இதனை சமாளிக்க கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்களின் பணத்தை நேரடியாக கொள்ளையடிக்கும் வழிமுறையொன்றை அவர் வகுத்துள்ளார்.
இதன் பிரகாரம் ஆண்டொன்றுக்கு நூறு கோடி வீதம் முன்னூறு கோடி ருபாவுக்கான கடன்பத்திரங்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான நிதி சேகரிப்பு என்ற போர்வையில் திரட்டப்படும் இந்த நிதிக்கான உத்தரவாதம் திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை அப்படியே ஏப்பம் விட்டு, வழக்கம் போன்று இராணுவத்தினரைக் கொண்டு நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொள்ளலாம் என்று கோத்தபாய ராஜபக்ஷ திட்டமிடுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep6.html
ஆளுங்கட்சியின் செல்வாக்கில் கடும் சரிவு! காப்பாற்றும் தீவிர முயற்சியில் சுதந்திரக் கட்சி
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:52.50 AM GMT ]
ஆளுங்கட்சியின் செல்வாக்கில் சடுதியாக ஏற்பட்டுள்ள கடும் சரிவு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆளுங்கட்சியின் செல்வாக்கைப் பாதுகாத்து, அடுத்த தேர்தல்களில் தொடர்ந்தும் வெற்றியைப் பெறுவதற்கான வழிகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக ஆளுங்கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் போக்குகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள்ளேயே அண்மைக்காலமாக அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் மட்டுமன்றி ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களும் அரசாங்கத்துக்கு எதிராக பகிரங்கமாக கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, விமல் வீரவங்ச, சம்பிக்க ரணவக்க, ரெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா போன்றோரும் பந்துல யாலேகம, அதுரலிய ரத்ன தேரர், நந்தன குணதிலக, அசல ஜாகொட போன்ற அரசியல்வாதிகளும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகவே ஆளுங்கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், இது அரசாங்கத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் கவலையடைந்துள்ளனர்.
எனவே அரசாங்கத்துக்கெதிராக கருத்து வெளியிடும் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கருத்து தற்போது ஜனாதிபதிக்கு நெருக்கடியாக மாறத் தொடங்கியுள்ளது.
இதற்கான கையெழுத்து வேட்டையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க போன்றோர் இதற்கான நடவடிக்கைகயில் முன்னிலை வகிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep7.html
கஞ்சா போதைப்பொருளுடன் இலங்கை அகதிகள் கைது - நாகப்பட்டினம் மீனவர்களுக்கு விளக்கமறியல்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 10:07.16 AM GMT ]
தமிழகத்தில் மூன்று இலங்கை தமிழ் அகதிகள் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 44 கிலோ கிராம் கஞ்சாவுடன் மதுரையில் கைது செய்யப்பட்டதாக மதுரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 44 லட்சம் ரூபா என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இந்த கஞ்சாவை மண்டபம் கரையில் இருந்து இலங்கை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தேனி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கஞ்சா போதைப்பொருள் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பு
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறைக்கு வடக்கில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்த இந்திய மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினம் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceqy.html

Geen opmerkingen:

Een reactie posten