வரட்சிப் பிரதேசங்களில் தண்ணீர் விற்பனை!- ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸிற்குப் பதிலாக மிஹின் லங்காவில் அழைத்துச் செல்லும் பயணிகள்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 10:07.48 AM GMT ]
இலங்கையில் நிலவும் வரட்சி காரணமாக வடமத்திய, வடமாகாணத்தின் சில பிரதேசங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் இப்பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களும் வற்றிய நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கும் நீரின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள அரசாங்கம், தற்போது வரட்சிப் பிரதேசங்களில் தண்ணீர் விற்பனையை ஆரம்பித்துள்ளது. லீட்டர் ஒன்றுக்கு 4 ரூபா முதல் ஆறு ரூபா வரை தண்ணீர் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.
இதற்கென அரச ஆதரவுடன் முகவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் ஊடாக அரசாங்கம் கமிஷன் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீரை வழங்கவேண்டிய பொறுப்பில் உள்ள அரசாங்கம், இவ்வாறான பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் இல் பயணிக்க டிக்கட் வாங்கும் பயணிகள் மிஹின் லங்காவில் அழைத்து செல்லப்படுகின்றனர்: பயணிகள் குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்ய பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும் பயணிகள் மிஹின் லங்கா விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய விமானச் சீட்டுக்களை கொள்வனவு செய்த பயணிகள் மிஹின் லங்கா விமானம் மூலமாக பாங்கொக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் யூ.எல்.404 என்ற ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் விமானத்தில் பாங்கொக் நோக்கி பயணம் செய்ய பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்த பயணிகளே இந்த அசௌகரியத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
எம்.ஜெ2.404 மிஹின் லங்கா விமானத்தில் பயணம் செய்யுமாறு விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மிஹின் லங்கா விமானத்தில் இருக்கைகள் சிறியதாக இருப்பதால், தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceqz.html
மருதானையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களை அச்சுறுத்திய வன்முறை கும்பல்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 11:14.34 AM GMT ]
மருதானை டீன் வீதியில் உள்ள இடம்மொன்றில் அரசசார்பற்ற நிறுவனம் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், அதில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில ராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் பிக்குமார் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், கூட்டம் நடக்கும் இடத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துடன், கூட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறை கும்பல் கூட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை கடும் சொற்களால் திட்டியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும் குழப்பதை ஏற்படுத்திய கும்பலை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளச் சாராய உற்பத்தியாளரிடம் இலஞ்சம் பெற்ற மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கைது
மதுவரி திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவின் பொறுப்பதிகாரி 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடும் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரி 5 லட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்டுள்ளார்.
இதில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அந்த அதிகாரி ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளார். மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாவை இன்று பெற்று கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதனடிப்படையில், தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் உணவகத்திற்குள் வைத்து 50 ஆயிரம் ரூபாவை இன்று மதியம் பெற முயற்சித்த போது அதிகாரிகள் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceq3.html
Geen opmerkingen:
Een reactie posten