தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

அகதிகளை துன்புறுத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்கிறது: சட்டத்தரணிகள்!

தமிழகத்தில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகள்- இலங்கையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மாற்றம் இல்லை: இந்தியா
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:29.39 PM GMT ]
இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியான கட்டுரை காரணமாக தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் ஒருமித்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்திய பிரதமருக்கு எழுதும் கடிதங்களை காதல் கடிதங்கள் என்ற வகையில் இந்தக்கட்டுரை வரையப்பட்டிருந்தது.
ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவுமே மோடிக்கு கடிதங்களை எழுதினார் என்று திராவிட முன்னேற்றக்கழக பேச்சாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கு சார்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்திய முஸ்லிம் லீக்கும் இலங்கையின் கட்டுரையை கண்டித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர்களான ஞானதேசிகன், ஜி.கே வாசன் ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வைகோ ஆகியோரும் அரசியல் பேதங்களை மறந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மாற்றம் இல்லை: இந்தியா
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு பேச்சாளர் சயீட் அக்பருடீன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின்போது இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தது.
எனினும் விசாரணை ஆணைக்குழு விடய பந்திக்காக தமது எதிர்ப்பை வெளியிட்டது.
இந்தநிலையில் சில ஊடகங்கள், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்குழு இந்தியாவில் இருந்து விசாரணையை மேற்கொள்ள இந்தியா வீசா வழங்க மறுத்துள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
எனினும் இந்த தகவல்கள், இந்தியாவில் இருந்தோ, ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தோ வெளியாகவில்லை. எனவே அது தொடர்பில் கருத்து எதனையும் வெளியிட தேவையில்லை என்று அக்பருதீன் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் கோரிக்கையை விடுத்தால் அந்தவேளையில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிடமுடியும்.
இந்தநிலையில் இந்தியா, இலங்கைக்கு எதிரான யோசனையின் அடிப்படையிலேயே முடிவை எடுக்கும் என்றும் அக்பருதீன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq6.html
சமூக ஒருமைப்பாட்டுக்கு எதிரானோர் தண்டிக்கப்படுவர்!- இராணுவம்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:37.57 PM GMT ]
சமூகங்களுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டை குலைத்து குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை இராணுவம் எச்சரித்துள்ளது.
சமூகத்தின் சில பிரிவினர் சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி உட்பட்ட வழிகளில் சமூகங்களை குழப்பி விடும் செய்திகளை பரப்பிவருகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் வன்முறைகளை மேம்படுத்தும் வகையில் இந்த செய்திகள் அமைந்துள்ளன.
இந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை. எனவே சமூக ஒருமைப்பாட்டை கருதி அதனை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfq7.html

அகதிகளை துன்புறுத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்கிறது: சட்டத்தரணிகள்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:43.13 PM GMT ]
நடுக்கடலில் இலங்கை அகதிகளை தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பியதன் மூலம் தொடர்வதாக அகதிகளின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
157 இலங்கை அகதிகளின் சட்டத்தரணிகள் இது தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
அகதிகளை நவுறு தீவுக்கு மாற்றியமையானது மேல்நீதிமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை என்று குறிப்பிட்டனர்.
குறித்த 157 இலங்கை அகதிகளும் நேற்று இரவு மூன்று விமானங்கள் மூலம் இரகசியமாக நவுரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் தமது கட்சிகாரர்களுக்கு நீதிமன்ற ஆணையின்படி அரசாங்கம் தேவையான வசதிகளை செய்துக்கொடுக்க வேண்டும் என்று அகதிகளின் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இதேவேளை அகதிகள் நௌரு தீவுகளில் குடியமர்த்;தப்படவுள்ளனர்.
இதன்போது அவர்கள் அகதிகளாக அடையாளம் காணப்பட்டாலும் அவுஸ்திரேலியாவுக்கோ அல்லது இந்தியாவுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்று குடிவரவுத்துறை அமைச்சர் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேற்று குறித்த அகதிகளில் நான்கு பேருடன் தொலைபேசியில் பேச அனுமதி வழங்கப்பட்டதாக அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfry.html

Geen opmerkingen:

Een reactie posten