தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

தலைவர்களை காப்பாற்ற முனைந்தார்கள்: செய்தியின் 2ம் பாகம் !

முதலாம் பாகத்தை தவறவிட்டு இருந்தால் இங்கே கிளிக்செய்து  வாசிக்கவும்

இவ்வாறு வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, இலங்கை இராணுவம் வேண்டும் என்றே மன்னார் , பூனகரி போன்ற பகுதிகளை கைப்பற்றியது. இதற்கு காரணமும் உண்டு. மன்னார் பக்கமாக புலிகள் சென்றால் அவர்கள் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிடுவார்கள் என்பது தான் அது. அதற்காகவே அவர்கள் மன்னார் பகத்தை முதலில் கைப்பற்றினார்கள். இதேவேளை அமெரிக்காவில் உள்ள முக்கிய நபர் ஒருவருக்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து, பேக்ஸ் கடிதம் வந்தது. இதனை அவர் நோர்வே நாட்டிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தார். அதில் ஹிலரி கிளிங்ரன் அவர்கள் குறிப்பிட்ட விடையம் மிகவும் ரகசியமாக இதுவரை பேணப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் தாம் காயப்பட்டவர்களை ஏற்ற என ஒரு படகை அனுப்புகிறோம்.
அதில் வேண்டும் என்றால் சில தலைவர்களும் ஏறலாம் என்பது ஆகும். புலிகளை அமெரிக்கா தடைசெய்துள்ளது. அத்தோடு புலிகளுக்கு ஆயுதம் வாங்கச் சென்ற கனேடியர்களையும் கைதுசெய்த அமெரிக்கா எவ்வாறு இதற்கு உதவும் என்று, அந்தவேளையில் பலஸ்தீன அமைப்பின் முன் நாள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக யாசீர் அராஃபாத்தின் மெய்பாதுகாப்பாளர்களில் ஒருவர் , அமெரிக்கா பாலஸ்தீனத்தில் சமாதானம் புரிந்த காலகட்டத்தின் ஒரு அதிகாரியை தெரிந்து வைத்திருந்தார். அந்த அமெரிக்க அதிகாரிக்கு பல செல்வாக்கும் பல தொடர்புகளும் உள்ளது. அவரை தொடர்புகொண்ட அராஃபாத்தின் மெய்பாதுகாப்பாளர்,அமெரிக்கா உதவுமா ? இது உண்மை தானா என்று கேட்டார். அமெரிக்க அரசின் மற்றும் சி.ஐ.ஏ எதனை விரும்புகிறது என்று என்னால் அறிய முடியும் என்று கூறி அவர் தொலைபேசியை துண்டித்தார்.
மறுபடியும் 2 தினங்கள் கழித்து அவர் தொடர்புகொண்டு கூறிய வார்த்தை, இல்லை இல்லை, அமெரிக்காவை இந்த விடையத்தில் நம்பவேண்டாம் என்று தான். இதனால் இச்செய்தி புலம்பெயர் நாட்டில் உள்ள முக்கிய புலிகளின் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதேவேளை முள்ளிவாய்க்காலில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமைக்கு, ஹிலரி கிளிங்ரன் அனுப்பிய கடிதத்தை அனுப்பினார்கள் அமெரிக்காவில் உள்ள சிலர். இதன் காரணமாக மேற்கு உலகம், தமக்கு உதவவுள்ளதாக புலிகளின் உயர்மட்ட தலைவர்களில் சிலர் நினைத்தார்கள். ஆனால் தேசிய தலைவர் இதனை ஒருபோதும் நம்பவே இல்லை. முற்றுகையிட்டுள்ள இராணுவத்தின் ஒரு பக்கத்தை உடைக்க முடியுமா என்று ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தார் அவர். அமெரிக்காவில் உள்ள சிலர் கொடுத்த ஆலோசனைக்கு அமைவாக தேசிய தலைவர் அவர்களை சுற்றியுள்ள வட்டத்தின் சட்டலைட் தொலைபேசி இலக்கங்கள் உடனடியாக மாற்றப்படுகிறது.
பழைய இலக்கங்களை எடுத்து எறிந்துவிட்டு புதிய இலக்கத்திலான செய்மதி தொலைபேசிகளை அவர்கள் பாவிக்க ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக பழைய தொடர்பில் உள்ள எவராலும் , புலிகளின் உயர் மட்ட தலைவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை தோன்றியது. ஸ்கைப் தொடர்புகளை பேணிவந்தவர்கள் மட்டுமே தொடர்புகொள்ள கூடிய நிலை ஏற்பட்டது. பாலஸ்தீனத்தின் கிழக்கு கரையில் அவர்கள் பாவிக்கும் அதி தீவிர தாக்குதல் படகு ஒன்றை(இப்படகில் அதி நவீன ராடர் கருவி, மற்றும் தாக்குதல் விமானத்தை கண்டறியும் சாதனும் இருந்ததோடு, பல மைல் தொலைவுக்கு செல்லும் திறனும் கொண்டது) பாவித்து புலிகளின் அதி உயர் தலைவர்களை வெளியேற்ற சிலர் முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறித்த இந்த தாக்குதல் படகை, சர்வதேச செஞ்சிலுவைச் சக்கத்தின் நிழலில் இயங்கும் ஒரு கப்பலில் ஏற்றி அதனை மாலை தீவுக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. மாலை தீவில் இருந்து இலங்கை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளது. ஆனால் சுமார் 2000 குட்டி தீவுகளை உள்ளடக்கிய மாலை தீவில், பல நூறு தீவுகளில் மனிதர்கள் வசிப்பது இல்லை.
இப்படியான ஒரு தீவில் தாக்குதல் படகு ஒன்றை கொண்டு சென்று, அங்கிருந்து முள்ளிவாய்க்கால் வரை செல்ல திட்டம் தீட்டப்பட்டது. இலங்கைக்கு அப்பால் உல்ல பல பண் திட்டிகளில், இதற்காக எரிபொருட்களை இறக்கி வைக்க ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள். மாலை தீவில் இருந்து ஒரு மண் திட்டிக்கு வந்து எரி பொருளை நிரப்பி, பின்னர் மீண்டும் ஒரு இடத்தில் எரிபொருளை நிரப்பிய பின்னரே, முள்ளிவாய்க்கால் கடல் பரப்பிற்குள் பிரவேசிக்க முடியும். இத்தாக்குதல் படகு கரையை நெருங்கும் வேளை, புலிகளிடம் எஞ்சியிருந்த சில தாக்குதல் படகுகளையும் கடலில் இறக்கி சமகாலத்தில் தாக்குதல் நடத்தி, கடல் பாதுகாப்பை உடைத்து வெளியேறவே திட்டம் போடப்பட்டது. ஆனல் இத்திட்டத்தில் ஈடுபட்ட பல நபர்களுக்கு தலைவரின் தொடர்பில் உள்ள நபர்களிடம் தொடர்பு கிடைக்காமல் போனது.
அமெரிக்காவின் சதி வலையில் இன்றுவரை விழுந்து கிடக்கும் ருத்திரா போன்ற சிலரால் புலிகளின் தலைமைக்கு பிழையான தகவல்கள் சொல்லப்பட்டது. பாலஸ்தீன இயக்கம் புலிகளுக்கு உதவ உள்ள செய்தி அமெரிக்காவால் கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் வேண்டும் என்றே ஒரு செய்தியை கிளப்பிவிட்டார்கள். அது என்னவென்றால், அமெரிக்கா உங்களை மீட்க்கவுள்ளது. ஆனால் அமெரிக்காவின் சில அதிகாரிகளே இதனைச் செய்வார்கல். இருப்பினும் அமெரிக்க உளவு நிறுவனத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களிடம் புலிகள் பலகாலமாக பாவிக்கும் சட்டலைட் தொலைபேசிகளின் இலக்கம் இருக்கும். அவர்கள் அதனை வைத்தே அவர்கள் இருப்பிடங்களை கண்டு பிடித்துவிடுவார்கள் என்பது தான். இதன் காரணமாகவே புலிகள் திடீரேன தமது தொடர்புகளை துண்டித்து, புது இலக்கங்களை பாவிக்க ஆரம்பித்தார்கள். இதனால் பெரும் இடைவெளி ஏற்பட்டது. ஒரு வெற்றிடம் என்று கூடச் சொல்லலாம்.
அந்தவேளையில் கூட தமிழர்கள் இரண்டாகப் பிரிந்தார்கள். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை கூட , அமெரிக்கா உதவும் , இல்லை உதவாது என்று விவாதித்தார்களே தவிர பாலஸ்தீன அமைப்புக்கு உதவவில்லை. யாசிர் அராஃபாத்தின் மெய்பாதுகாப்பாளர் மேற்கொண்ட திட்டம் இறுதியில் கைவிடப்பட்டது. அப்படிச் சொல்வதை விட , வேறு வழியின்றி அவர்கள் அதனை கைவிட்டார்கள் என்பதே உண்மையாகும். ஏன் எனில் தமிழர்களுக்கு இடையே பெரும் முரன்பாடு இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். தமிழர்கள் கூட செய்ய நினைக்காத ஒரு காப்பாற்றும் தாக்குதல் திட்டத்தை வகுத்த மெய்பாதுகாப்பாளருக்கு வயது தற்போது 79. புலிகளின் சில தலைவர்கள் தப்பியிருந்தால், போராட்டத்தை ஒரு 10 வருடம் கழித்தாவது மீண்டும் ஆரம்பித்து இருக்கலாம் என்பது இவர் கருத்தாக உள்ளது. அமெரிக்காவில் மறைந்துள்ள சில தமிழர்கள் புலிகளின் அழிவுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு முக்கிய காரணியாக உள்ளார்கள். அவர்கள் யார் யார் என்ற பட்டியலும் விரைவில் அதிர்வில் செய்தியாக வெளியாகும்.
http://www.athirvu.com/newsdetail/657.html


புலிகளின் தலைமையை காப்பாற்ற முயன்ற அராஃபத்தின் பாதுகாவலர்கள் !

[ Jul 30, 2014 06:25:03 PM | வாசித்தோர் : 91135 ]
பாலஸ்தீன விடுதலை இயக்கங்களோடு இன்றுவரை தொடர்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய, உறுப்பினர் ஒருவரின் தகவலுக்கு அமைய இச்செய்தி எழுதப்படுகிறது. பாலஸ்தீன இயக்கத்தின் முன்னோடியான அமரர் யாசீர் அராஃபாத்தின் மெய்ப் பாதுகாப்பளர்கள் சிலர், தமிழர்கள் கூட செய்ய நினைக்காத காரியத்தை செய்ய துணிந்தார்கள். ஒரு போராட்ட இயக்கம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, புலிகளின் தலைமையை அவர்கள், முள்ளிவாய்க்காலில் இருந்து காப்பாற்ற முனைந்தார்கள். அங்கே என்ன நடந்தது ? இது சற்று நீண்ட செய்தி என்பதனால் 2 பாகங்களாகப் பிரித்துளோம். 2ம் பாகம் நாளை(31) வெளியாகும் !
வன்னியில் இறுதியுத்தம் நடைபெற்றவேளை, விமான தாக்குதல் காரணமாகவே இராணுவத்தினர் அதிக அளவில் முன்னேறுகிறார்கள் என்று உணர்ந்துகொண்ட புலிகள் அதனை சமாளிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தேவை என்பதனை புரிந்துகொண்டார்கள். இதனை வாங்கி வன்னிக்கு கொண்டு வரும் பொறுப்பில் ஒரு பகுதியை சாள்ஸ் அன்ரணி(தேசியதலைவரின் புதல்வர்) பொறுப்பேற்றார். இந்தவேளையில் தான் நரித்தனமாக மீண்டும் புலிகளுக்கு உதவுவதுபோல நடித்து, கே.பி அவ்வியக்கத்தினுள் ஊடுருவுகிறார். கே.பியை மட்டும் நம்பி இருக்காமல், வேறு சிலர் ஊடாகவும் விமான எதிர்வு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய புலிகள் திட்டம் தீட்டினார்கள். அந்தவேளை தான், தமது பழைய உறவுகளை தூசுதட்ட அவர்கள்ஆரம்பித்தார்கள்.
ஐரோப்பாவில் உள்ள சில நபர்கள் ஊடாக, புலிகள் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் உதவியை நாடியது. தற்போது அவ்வியக்கமானது பல துண்டுகளாக உடைந்து வேறு வேறு பெயர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தேசிய தலைவராக விளங்கிய யாசிர் ஆராஃபாத் இறக்க முன்னர், அவ்வியக்கமானது பெரும் கட்டுக்கோப்பில் இருந்தது. ஈழ விடுதலைக்கு பல வழிகளில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடக்கமே அவர்கள் உதவி வந்துள்ளார்கள் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பாலஸ்தீனத்தில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முடியுமா என்று அவ்வியக்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களோடு பேச்சுவார்தை நடைபெற்றது.
இந்த வேளையில் புலிகள் இயக்கம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், எந்த நிலையில் உள்ளார்கள் என்பது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு விளக்கப்பட்டது. புலிகளின் பாரிய பின்னடைவு குறித்து பாலஸ்தீன இயக்கம் கவலைகொண்டு இருந்தது. யாசீர் அராபாத் இளமைப் பருவத்தில் போராட ஆரம்பித்த நாள் முதல், அவருடன் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள் பலர், பின்னர் அவரது போராட்டத்தில் இணைந்து அவரது மெய்ப் பாதுகாவலர்களாகவும் மாறினார்கள். அவர்களின் 3 மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்கள். அவர்களுக்கு தேசிய தலைவர் பிரபாகரனை நன்கு தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக புலிகள், பலம்பெற்று ஒரு பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முதல் அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இப்படியாக 1 ஆண்டு கழிந்தது. இந்தவேளையில் தான்(2009) அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டின்(Secretary of state) தலைவியான ஹிலரி கிளிங்ரனிடம் இருந்து புலிகளுக்கு ஒரு பேக்ஸ்(FAX) வந்தது அமெரிக்காவில் உள்ள ருத்திரகுமாரன் மேலும் சிலர் இணைந்து அமெரிக்காவின் உதவியை நாடியதாலும் மேலும் அமெரிக்காவில் உள்ள பெரும் ஈழத் தமிழ் செல்வந்தரான ராஜ் ராஜரட்னம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்த ஹிலரி கிளிங்ரனுக்கு பெரும் நிதி உதவிசெய்திருந்தார். இதனால் அமெரிக்க அரசியலில் உள்ள சில முக்கிய புள்ளிகள் தாம், உதவ உள்ளது போல நாடகம் ஆடியுள்ளார்கள். கடல்கரை ஓரமாக வந்தால், பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தமது கப்பல் சிலரை மீட்க்கும் என்று அவர்கள் கூறியவேளை, இது அனைத்தும் பொய் !
அமெரிக்கா புலிகளை அழிக்கவே திட்டம் தீட்டியுள்ளது என்று, முதலில் உண்மையை போட்டு உடைத்தது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இருந்த முன் நாள் உறுப்பினர்கள் தான். ஒரு சிறிய விடுதலை இயக்கம் எவ்வாறு வளர்சியடைந்து ஒரு நாட்டு இராணுவம் போல உருவாகலாம் என்பதற்கு நல்ல உதாரணம் புலிகள் தான். இவர்களை பின் பற்றி பல அமைப்புகள் பிற்காலத்தில் முஸ்லிம் நாடுகளில் உருவாகலாம். எனவே புலிகள் அழிக்கப்படவேண்டிவர்கள் என்ற அமெரிக்காவின் கருத்தில் மாற்றம் இல்லை. இவர்கள் தற்போது நடிக்கிறார்கள் என்று பாலஸ்தீன முக்கியஸ்தர்கள் எவ்வளோ எடுத்துச் சொன்னார்கள். ஆனால் தற்போது நாடு கடந்த அரசின் பிரதமர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ருத்திரா போன்றவர்கள் கண்மூடித் தனமாக அமெரிக்காவை நம்பினார்கள்.. இதனால் பாலஸ்தீன இயக்கத்தில் உள்ள சிலர் தாமே புலிகளின் தலைமை காப்பாற்ற முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டம் ஒன்றை தீட்டினார்கள்.... (நாளை தொடரும் 31.07.2014)
http://www.athirvu.com/newsdetail/627.html

Geen opmerkingen:

Een reactie posten