தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

கியூ பிரிவினால் பெண் உட்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கைது (செய்தித் துளிகள்)!

எல்லா அம்மாக்களையும் இழிவுபடுத்தினதாக தானே அர்த்தம்!- இலங்கையைக் கண்டித்து உயிரைவிடத் துணிந்த அதிமுக நிர்வாகி
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 02:47.03 AM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை அரசு வெளியிட்ட கட்டுரை ஏற்படுத்திய காயம் ஒருபக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்காக உயிரையும்விட துணிந்துவிட்டார் விஜயலெட்சுமி.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதமருக்கு ஜெயலலிதா எழுதும் கடிதத்தை, கொச்சைப்படுத்தி தனது அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையத்தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தது இலங்கை.
இலங்கையின் இந்தச் செயலைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ராஜபக்சவின் உருவப்படங்கள் கொளுத்தப்பட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில், இலங்கை அரசை கண்டித்து உயிரைவிட துணிந்துவிட்டார் சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி விஜயலெட்சுமி.
இப்போது அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்.
உயிரைவிடத் துணிந்த விஜயலெட்சுமிக்கு மனித உயிரின் மதிப்பையும் போராட்ட குணத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா.
இந்த நிலையில் விஜயலெட்சுமியிடைய மகள் அருளாம்பாள் ஜூனியர் விகடனுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அண்ணன் ஒருத்தர், ஒரு தம்பி, அப்புறம் நான்... மொத்தம் மூணு பிள்ளைங்கதான் எங்க வீட்ல. என் சின்ன வயசுலயே அப்பா இறந்து போயிட்டார். அதற்குப் பிறகு அம்மாதான் கூலி வேலைக்குப் போய் எங்களை வளத்தாங்க.
அம்மா ஒருத்தரின் வருமானத்தை நம்பிதான் குடும்பம் ஓடிகிட்டு இருந்துச்சு. அப்புறம் அண்ணன் எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போயிட்டாரு. தம்பியும் ஆறாவதோட படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போயிட்டான். நானும் குடும்பச் சூழலால பத்தாம் வகுப்போட படிக்கிறதை நிறுத்திட்டேன். எங்களைப் படிக்க வைக்க முடியலையேங்குற குறை அம்மாவுக்கு எப்பவுமே இருக்கும்.
சின்ன வயசுல இருந்தே அம்மா அ.தி.மு.க-வுல தான் இருக்காங்க. புரட்சித் தலைவி அம்மாவுடைய திட்டங்களைப் பத்தி பேசிகிட்டே இருப்பாங்க. டி.வி பார்த்துகிட்டு இருந்த போது, இலங்கை அரசு இணையத்தளத்துல அம்மாவைப் பத்தி தப்பா எழுதிருக்காங்கன்னு செய்தி ஓடவே, அம்மாவுக்கு ஒண்ணுமே புரியல. என்ன நினைச்சாங்களோ... 12 மணிக்கு மேல இலங்கை அரசைக் கண்டிச்சு லெட்டர் எழுதி வெச்சிட்டு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுட்டாங்க.
காலையில ஒரு அசைவும் இல்லாம மயக்கமா கிடந்திருக்காங்க. பக்கத்துலேயே லெட்டர் இருந்துருக்கு. உடனே 108-க்கு போன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்.
இன்னைக்கு நாங்க மூணு பேரும் உயிரோட இருக்கோம்னா அதுக்கு எங்க அம்மாதான் காரணம். ஆனா, புரட்சித் தலைவி அம்மாவுக்காக உயிரையும்விட துணிவாங்கன்னு இப்பதாங்க தெரியுது'' என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.
விஜயலெட்சுமி தெரிவித்ததாவது,
''நான் மட்டுமில்ல... எங்க அம்மா அப்பா, தம்பி எங்க குடும்பமே அ.தி.மு.க-தான், நானும் சின்ன வயசுல இருந்தே அ.தி.மு.க-வுல தான் இருக்கேன்.
இப்போ ஒரு பத்து வருஷமாதான் 16-வது வார்டு அம்மா பேரவை இணைச்செயலாளர், 16-வது வட்டக் கழக துணைச்செயலாளர் பொறுப்புகள்ல இருந்து வர்றேன்.
தமிழக மீனவர்களுக்கான அவங்க போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறது இலங்கை. இதை எப்படி எங்களை மாதிரி தொண்டர்களால ஏத்துக்க முடியும்?
ஒரு உன்னதமான தலைவரை இப்படி எழுதுறாங்கனா, அது தமிழ்நாட்டுல இருக்கும் அத்தனை அம்மாக்களையும் அவமானப்படுத்துறதுக்கு சமம்தானே? அதைத் தாங்கிக்க முடியாமத்தான் இப்படி செஞ்சுட்டேன்.
 'எது நடந்தாலும் எதிர்த்து நின்று போராடும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளணுமே தவிர, கோழைத்தனமான தற்கொலை முயற்சியை கையில் எடுக்கக் கூடாது’ என்று அம்மாவே எனக்கு தன்னம்பிக்கை அளிக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இனி, அம்மா வழியில்தான் போராடுவேன்'' என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcex0.html
கியூ பிரிவினால் பெண் உட்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கைது (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 02:51.25 AM GMT ]
தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் பெண் ஒருவர் உட்பட்ட இரண்டு இலங்கை அகதிகளை நேற்று கைது செய்துள்ளனர்.
திசையான்விலாய் என்ற இடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகேந்திரன் என்ற 44 வயதான ஆணும், 42 வயதான விஜயா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின்போது இவர்கள் இருவரும் கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கை அகதிகளே என்று தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட ஆண், படகுகள் மூலம் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பவர்கள் என்ற சந்தேகத்தையும் தமிழக காவல்துறை எழுப்பியுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே உவரி, இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளமை தெரியவந்தது.
குறித்த இடங்களில் இருந்து கண்ணாடி இழை படகுகள் மூலம் ஆழ்கடலில் தரித்துள்ள பெரிய கப்பல்களை இலகுவில் அடைந்துவிட முடியும் என்று தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்
கைது இந்தியாவின் பெங்களூரிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்த நபர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
250 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுகளை இந்த நபர் தனது மடிக் கணனி பையில் மறைத்து வைத்திருந்தாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்கத்தின் பெறுமதி 25 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியை சேர்ந்த 28 வயதான அரிசி வியாபாரி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcex1.html

Geen opmerkingen:

Een reactie posten