[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 02:31.21 AM GMT ]
ஜே.வி.பி.யின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச, தற்போது ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர். வீடமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்பி்ல் இருப்பவர்.
இவற்றுக்கு மேலதிகமாக ஆளுங்கட்சிக்குள் ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவின் செல்லப்பிள்ளை. அரசாங்கத்திற்குள் ஜனாதிபதிக்கு பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவதற்காகவே ராவண பலகாய என்றொரு கடும்போக்குவாத அமைப்பை உருவாக்கி, ஆளுங்கட்சியின் ஏவல் அடியாளாக இருப்பவர்.
இந்நிலையில் அண்மைக்காலமாக அரசாங்கம் தவறான வழியில் செல்வதாகவும், அதன் காரணமாக தாம் அமைச்சுப் பதவியை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச பாரிய அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
ஆளுங்கட்சியின் சார்பிலும் அதற்கான ஆதரவு வழங்கப்பட்டதுடன், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டிலும் விமல் வீரவன்ச உண்மையாகவே ஆளுங்கட்சியை விட்டு விலகப் போவதாக அமைச்சர் கெஹலிய உறுதிப்படுத்தினார்.
நிலைமை இவ்வாறிருக்க கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போன்று நேற்றுடன் அமைச்சர் விமல் வீரவன்சவின் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது. ஆளுங்கட்சிக்கும், விமலின் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த நாடகம் சுபமாக அரங்கேற்றப்பட்டது.
இதில் உள்ள கேவலம் என்னவென்றால் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாகாண சபைகளுக்கான அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற தமது கோரி்க்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதால் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பிலிம் காட்டிக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, நேற்றுடன் அந்தர்பல்டி அடித்து, ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் மட்டும் அவரது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcew7.html
உப்புலின் பாதுகாப்பை உடனடியாக உறுதிசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 02:41.10 AM GMT ]
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
அத்துடன் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சின் செயலாளர் நந்தா மல்லவராச்சியை எதிர்வரும் 8ம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் எதிர் நடவடிக்கைகளை கண்டித்து உப்புல் ஜெயசூரிய கருத்துக் கூறியமையை அடுத்து அவர் வாகனத்தில் பயணம் செய்யும் போது அடையாளம் தெரியாதோர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதாக முறையிடப்பட்டது.
எனினும் பொலிஸார் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனையடுத்தே சட்டத்தரணிகள் சங்க தலைவர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcexy.html
இணையத்தின் ஊடாக சாட்சியமளிப்பதே கொழும்பில் கூடியவர்களின் நோக்கமாம்?
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 02:42.54 AM GMT ]
சாட்சியமளிப்பதற்காக 2 லட்சம் ரூபாவை வழங்குவதாகவும் குறித்த அமைப்புக்கள் உறுதியளித்தாக முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த அரச சார்பற்ற அமைப்புக்கள் ஏன் தமது முன்னணியை மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக மற்றும் மதங்களுக்கு நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வுக்கு அழைக்கவில்லை என்று முன்னணியின் ஆலோசகர் அன்குலுகலே ஸ்ரீ ஜினாநந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அரசாங்கத்தின் அனுசரணையின்றி வெளிநாட்டு அமைப்புக்கள் கூட்டங்களை நடத்த முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோவும் குறித்த நிகழ்வில் பங்கேற்றதாக ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcexz.html
Geen opmerkingen:
Een reactie posten