தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

தமிழர்களுக்கு நீதி கிடைக்க மோடி நடவடிக்கையை ஆரம்பித்து விட்டார்: சம்பந்தன்!


இலங்கை வரும் பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி கோத்தபாயவையும் சந்திப்பார்- ஜனாதிபதியின் ஆலோசகராக கொழம்பகே
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 11:26.21 AM GMT ]
பாகிஸ்தான்  விமானப்படைத் தளபதி மார்ஷல் தாஹிர் ரபிக் புட் இலங்கைக்கு உத்தியோக பூர்வமாக இன்று வருகிறார்.
இவர் மூன்று நாள் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய விமானத் தளங்களைப் பார்வையிடுவாரென விமானப் படையின் பதில் ஊடகப் பேச்சாளர் பி.என்.டி. கொஸ்தா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று இலங்கை வரும் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியை எமது விமானப் படைத் தளபதி எயா மார்ஷல் கோலித குணதிலக்க தமது பாரியார் சகிதம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பார்.
இலங்கை விமானப் படைக்கும் பாகிஸ்தான் விமானப் படைக்கும் இடையில் உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
இலங்கை விமானப் படைத் தளபதிக்கும் பாகிஸ்தான் விமானப் படைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்ததை இம்மாதம் 28 ஆம் திகதி இலங்கை விமானப் படைத் தலைமையகத்தில் நடைபெறும்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் பாகிஸ்தான் விமானப்படைத்தளபதி சந்திப்பார்.
அதன் பின்னர் இலங்கையின் முக்கிய விமானப்படைத் தளங்களை அவர் பார்வையிடுவார் என்றும் பதில் ஊடகப் பேச்சாளர் பி.என்.டி. கொஸ்தா மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கடற்படை தளபதி
முன்னாள் கடற்படை தளபதி ஜெயநாத் கொழம்பகே ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியின், கடல் மற்றும் கடற்படை தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகிந்த சிந்தனை கொள்கை அறிக்கையின் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு கொள்கை அறிக்கையில் இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாற்றும் செயற்பாடுகளில் இலங்கையின் கடல் மற்றும் கடற்படை ஆசியாவின் முக்கிய துறையாக மாற்றுவது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொழம்பகே, கடற்படை தளபதியாக பதவி வகித்த காலத்தில், இலங்கை கடற்படையை கடல்வழி மற்றும் கடற்படை மையமாக இலங்கையை மாற்றியமைக்கும் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வழிக்காட்டலோடு முன்னெடுத்திருந்தார்.
ஜெயநாத் கொழம்பகே தற்போது இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். அவர் இலங்கை கடற்படையில் 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் ஜனாதிபதிக்கு ஏற்கனவே பல துறைகளில் ஆலோசகர்கள் பலர் இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாதாந்தம் ஒரு லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுதாக கூறப்படுகிறது. அத்துடன் வாகனம் உட்பட இதர வசதிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதனால், அரசாங்கத்திற்கு மாதாந்தம் பெரும் நிதி செலவு ஏற்பட்டு வருவதாக ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் கடற்படை தளபதியும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnq0.html


பசறை கூட்டத்திற்கு வருமாறு சஜித்திற்கு அழைப்பு விடுத்த ரணில்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 11:41.34 AM GMT ]
பதுளை, பசறை நகரில் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றைய தினம் சஜித் பிரேமதாசவை கட்சியின் பிரதித் தலைவராக அறிவிக்க ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கினால், ஊவா மாகாண சபைத் தேர்தல் மட்டுமல்லாது ஏனைய தேசிய தேர்தல்களிலும் கட்சியின் வெற்றிக்கு பாரிய பலமாக அமையும் என அந்த கட்சியை சேர்ந்த கரு ஜயசூரிய உட்பட பல தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரே மேடைக்கு வருவதாக வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஹரின் பெர்ணான்டோ ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
எவ்வாறாயினும் பிரதித் தலைவர் பதவியை ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஏற்றுக்கொள்வது தொடர்பில் சஜித் பிரேமதாச இரட்டை நிலைப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாக தன்னை அழிக்க ரணில் விக்ரமசிங்க வைத்துள்ள பொறியாக இது இருக்கலாம் என சஜித் எண்ணுவதாக சஜித் தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnq1.html


விமான ஓடுதள விஸ்தரிப்புக்காக பெறப்பட்ட நிலம் அரசாங்கத்தினுடையது: இராணுவப் பேச்சாளர்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 12:19.56 PM GMT ]
முல்லைத்தீவு விமான ஓடுதள விஸ்தரிப்பு காரணமாக காணிகளை இழந்த மூன்று குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட வேறு காணிகள் வழங்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
முல்லைத்தீவு விமான ஓடுதளம் விஸ்தரிப்புக்காக மூன்று குடும்பங்கள் தமது காணிகளை இழந்துள்ளனர். 5 ஏக்கர் பரப்பளவு காணிகளையே இவர்கள் இழக்கின்றனர். இந்த காணிகள் இவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
விமான ஓடுதள விஸ்தரிப்புக்காக 250 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது.
எவருக்கும் இங்கு காணி உறுதிகளுடன் கூடிய நிலங்கள் இல்லை. எவ்வாறாயினும், மேற்படி மூன்று குடும்பங்கள் அவர்கள் விரும்பு இடத்தில் அவர்களுக்கான காணிகள் வழங்கப்படும் எனவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnq2.html


தமிழர்களுக்கு நீதி கிடைக்க மோடி நடவடிக்கையை ஆரம்பித்து விட்டார்: சம்பந்தன்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 12:37.13 PM GMT ]
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்தனர்.
அங்கு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இன்று தமிழகத்திற்கு விஜயம் செய்தனர்.
தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் சம்பந்தன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, மரியாதை கிடைக்க தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
தமிழர்கள் பெருமளவில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் இதன்போது எடுத்து கூறியுள்ளோம் என்றார்.




Geen opmerkingen:

Een reactie posten