27 Aug 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409121376&archive=&start_from=&ucat=1&
கூட்டமைப்பு எங்கு பறந்தாலும் தீர்வு இலங்கையில் அமைச்சர் மைத்திரி ( படங்கள் இணைப்பு)
|
"சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி, தமிழகம், ஜெனிவா, வாஷிங்டன் என்று உலகெங்கும் பறந்து திரிந்தாலும் இறுதியில் அவர்களுக்கு இலங்கையில் அரசால் வழங்கப்படும் உள்நாட்டுத் தீர்வுதான் கிடைக்கும். ஒருபோதும் அவர்களுக்கு சர்வதேச மத்தியஸ்தத்துடனான் தீர்வு கிடைக்கவேமாட்டாது.
" - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. "எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்பதுதான் அவர்களுக்கும், அவர்களை நம்பியிருக்கும் தமிழ் மக்களுக்கும் சிறந்த வழி" என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுடில்லிக்கு சென்றுள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்திவிட்டு தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்காக சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். கூட்டமைப்பினரின் இந்தப் பயணம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறயவை வருமாறு:- "இந்தியா என்ன, எந்த நாடும் என்ன சொன்னாலும் இறுதியில் எமது நாட்டின் தலைவர் ஜனாதிபதிதான் இலங்கைக்கான தீர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுப்பார். இதனை சம்பந்தன் குழுவினர் கவனத்தில் எடுக்கவேண்டும். வடக்கு, கிழக்கில் அனைத்துத் தமிழ் மக்களும் சுதந்திரமாகத்தான் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றனர். அங்கு அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தவாறு உள்ளன.
ஆனால், வடக்கு, கிழக்கு இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் சின்னாபின்னமாகின்றது என்று இந்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முழுப் பொய்யைக் கூறியுள்ளனர். பொய் கூறுவதற்கும் ஓர் அளவு வேண்டும். எடுத்தவுடன் எல்லாவற்றுக்கும், எல்லாரிடமும் பொய் கூறுவதைக் கூட்டமைப்பினர் நிறுத்தவேண்டும். நாட்டின் நன்மை கருதியும், தமிழ் மக்களின் எதிர்காலம் கருதியும் கூட்டமைப்பினர் அரசுடன் சேர்ந்து செயலாற்ற முன்வரவேண்டும். அத்துடன் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவிக்குழுவில் பங்குபற்றி பேச்சுக்களை மீள ஆரம்பிக்கவேண்டும்" என்றார்.

 |
27 Aug 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409125233&archive=&start_from=&ucat=1&
|
|
Geen opmerkingen:
Een reactie posten