ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு சட்டப்படி தகுதியில்லை!- முன்னாள் நீதியரசர்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 11:54.10 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மகிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார்.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாக இருந்தது.
எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச, 2010-ம் ஆண்டில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர், ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்பதற்கு வசதியாக புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார்.
ஆனால், அந்த புதிய திருத்தம் மகிந்த ராஜபக்சவுக்கு பொருந்தாது என்று, முதல் தவணையின் போது அவரை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துவைத்த முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா கூறுகின்றார்.
'அரசியலமைப்பின் பிரிவு 31 (2) இன்படி, மக்களால் 2 தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நபரும், அதன் பின்னர் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி அற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியென்றால் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே அந்த தகுதியீனமும் உருவாகி விடுகின்றது என்றார் முன்னாள் தலைமை நீதியரசர்.
'2010-இல் தகுதியை இழந்துவிட்டார்'
மகிந்த ராஜபக்ச இரண்டாவது தவணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 2010-ம் ஆண்டு ஜனவரி 27-ம் திகதியன்றே, அவர் இன்னொரு தடவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவர் என்ற நிலையை அடைந்து விட்டதாகவும் சரத் என். சில்வா வாதிட்டார்.
மகிந்த ராஜபக்ச இரண்டாவது தவணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 2010-ம் ஆண்டு ஜனவரி 27-ம் திகதியன்றே, அவர் இன்னொரு தடவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவர் என்ற நிலையை அடைந்து விட்டதாகவும் சரத் என். சில்வா வாதிட்டார்.
'18-ம் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், மூன்றாவது தடவையும் தன்னால் ஜனாதிபதியாக வரமுடியும் என்று மகிந்த ராஜபக்ச எதிர்பார்க்கிறார். ஆனால் இந்தத் திருத்தத்தின் மூலம், அவருக்கு ஏற்பட்ட அந்த தகுதியீனம் மாறப் போவதில்லை என்றார் முன்னாள் நீதியரசர்.
குறித்த அரசியலமைப்புத் திருத்தம் மகிந்த ராஜபக்சவுக்குப் பின்னர் பதவியேற்க வரும் ஜனாதிபதிகளுக்கே பொருந்தும் என்றும் என்றும் அவர் வாதிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் 6 ஆண்டுகால பதவிக்காலம் முடியும் 2016-ம் ஆண்டு நவம்பர் 19-ம் திகதிக்கு மூன்று 3 மாதங்களுக்கு முன்னரே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சரத் சில்வா விளக்கமளித்தார்.
1999-முதல் 2009 வரையான 10 ஆண்டு பதவிக் காலத்தில் சரத் என் சில்வா, அரசியல் ரீதியில் திருப்புமுனையாக அமைந்த பல்வேறு தீர்ப்புகளையும் அரசியலமைப்பு பொருள் விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.
வடக்கு கிழக்கு பிராந்தியங்கள் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை, சந்திரிகாவின் இரண்டாவது தவணை ஆட்சி ஒரு ஆண்டு முன்கூட்டியே முடிவடைந்தமை, மகிந்த ராஜபக்ச சம்பந்தப்பட்ட ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை உள்ளிட்ட தீர்ப்புகளுக்கு சரத் என் சில்வாவே காரணமாக இருந்துள்ளார்.
சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட பீ-டொம் என்கின்ற சர்வதேச சுனாமி உதவிகளை பங்கிடும் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு தாவிய போது அவர்கள் நாடாளுமன்ற பதவியை இழக்கமாட்டார்கள் என்று விளக்கம அளிக்கப்பட்டமை போன்ற தீர்ப்புகளும் சரத் சில்வாவினாலேயே அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜீ.எல். பீரிஸ் மறுப்பு
இதேவேளை, முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா வெளியிட்டுள்ள கருத்துக்களை சட்டத்துறை பேராசிரியரும், வெளியுறவு அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிப்பதில் இருந்த தடை, அரசியலமைப்பின் 18-ம் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டு விட்டதாகவும் சட்டத்துறை பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLder4.html
வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 12:19.48 AM GMT ]
கனடா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அந்தந்த நாடுகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து பாரியளவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்க்பபட்டுள்ளன.
வெளிநாடுகளில் வாழந்து வரும் புலி உறுப்பினர்கள் பகிரங்கமாக செயற்படுவதில்லை எனவும், இரகசியமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் போராட்டங்களை கூட புலி உறுப்பினர்கள் நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் விரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLder6.html
அவுஸ்திரேலியா ஆட்கடத்தல் நடவடிக்கையை, தமிழினத்தை அழிப்பதற்காக இலங்கை அரசாங்கமே செய்கின்றது
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 12:12.25 AM GMT ]
குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு சென்று, அங்கே வேலை தேடிக்கொண்டு வாழ நினைக்கும் நபர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றனர்.
இதன் காரணமாக பல விமர்சனங்களும் பல பாதகமான விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
உண்மையில் தரகர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உண்மை நிலை தெரிந்தால் அப்பாவி தமிழர்களின் உயிர்களில் விளையாட முடியாது.
எத்தனையோ படகுகள் இதுவரைக்கும் என்ன ஆனது என்பது தெரியாமல் பல உறவுகள் நடு வீதிகளில் நிற்கின்றனர்.
இலங்கையை பொறுத்த மட்டில் அரசாங்கமும் தரகர்களும் சேர்ந்து தமிழர்களை அளிப்பதற்காக இந்த கடல் பயணத்தை செய்கின்றனர்.
இது எமது தமிழனுக்கு இதுவரைக்கும் புரியாத ஒரு விடயமாக இருக்கின்றது.
சென்ற ஆண்டில் மட்டும் 7000 தமிழர்களை திட்டமிட்டு, கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய இலங்கை அரசாங்கம் ஏன் இதுவரைக்கும் ஒரு தரகரையும் கைது செய்யவில்லை.
கைது செய்ய முடியாது காரணம் இந்த கடல் பயணம் ஏற்பாடு செய்வதே இலங்கை அரசுதான்.
கடலோர பாதுகாப்பு கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் இருந்து சர்வதேச கடற்பரப்பை அடைவது என்றால் சுமார் இரு தினங்கள் எடுக்கும் என்பதற்காகத்தான் சென்ற மாதம் அவுஸ்திரேலியா அரசாங்கம் மேலும் 2 அதிவேக படகுகளை இலங்கைக்கு வழங்கி உள்ளது.
இருக்கின்ற மிகுதி தமிழர்களையும் அனுப்பி வைக்கும் பொருட்டே அவுஸ்திரேலியா அரசாங்கம் மேலும் 2 அதிவேக படகுகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த அரசாங்கத்தின் நெருங்கிய உறவு காரணமாக இரண்டு நாட்டுக்கும் நல்ல ஒரு ஒப்பந்தம் உள்ளது.
ஒன்று தமிழன் நடுக் கடலில் சங்கமமாக வேண்டும், இல்லையென்றால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும். இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு வருமானம் ஒரு பக்கம் அதிகரிக்கும், மற்றைய பக்கம் தமிழன் இலங்கை அரசாங்கம் தேடப்படுவோர் பட்டியலில் இணைப்பதற்கு இலகுவாக உள்ளது.
கடலின் ஆர்ப்பரிக்கும் பேரலைகளுக்கு இடையில் கள்ளத்தோணியில் பயணம், சரக்குப் பெட்டகத்தில் (கண்டெய்னர்) நாள் கணக்கில் அடைபட்டு கிடப்பது போன்ற ஆபத்துகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், ‘செல்வ வளம் மிக்க மேற்கத்தைய நாடுகளுக்கு சென்று விட்டால் போதும், நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம்’ என்று இவர்கள் கருதுகிறார்கள்.
இவர்களின் சட்டமீறலான ஆசையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ‘பேக்’ செய்து அனுப்புவதற்கென்றே உலகம் முழுவதிலும் சில மனித பார்சல் சர்வீஸ்கள் இயங்கி வருகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்குகளோடு, மனித உயிர்களையும் மலிவு விலை சரக்காக ஒரு கண்டெய்னரில் அடைத்து, எந்த நாட்டுக்கு அந்த சரக்கு பெட்டகம் போய் சேர்கிறதோ., அங்குள்ள துறைமுக அதிகாரிகளை சரிகட்டி, கப்பல் மூலம் இவர்களை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் கும்பல்கள், அதற்காக பயனாளிகளிடம் இருந்து மிகப்பெரியத் தொகையை கறந்து விடுகின்றன.
புதிய, வசதியான வாழ்க்கைக்கான உத்தரவாதம் இருப்பதாக நம்பி, இந்த கள்ளப்பயணத்துக்காக ஏராளமான பணத்தை கொட்டியழும் பேராசைக்கார பேர்வழிகள், ‘போய் சேரும் வரை தங்களது உயிருக்கு உத்தரவாதம் உள்ளதா..?’ என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, இலங்கைத் தமிழர்களை சென்னைக்கு வரவழைத்து, சென்னையில் இருந்து ஓங்கோலுக்கு அழைத்து வந்து, ஓங்கோல் கடற்கரைப்பகுதியில் இருந்து படகுகளின் மூலம் ஏற்றிச் சென்று, நடுக்கடலில் தயாராக காத்திருக்கும் சரக்கு கப்பல்களில் உள்ள கண்டெய்னர்களில் அவர்களை அமர வைத்து, அவுஸ்திரேலியாவுக்கு கடத்தும் தொழில் செய்து வந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது
இதற்காக ஒரு நபரிடம் 5 லட்சம் ரூபாய் வரை கமிஷன் வாங்கிய இலங்கையை சேர்ந்த ஒரு நபர், இந்தியாவை சேர்ந்த அவரது கூட்டாளிகள் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஓங்கோலுக்கு வந்த ஒருவர் என அவர்கள் அனைவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்ப்போது சில தரகர்களை கைது செய்து வருகின்றது மிகவும் பாராட்டத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmsyIRaLder5.html
Geen opmerkingen:
Een reactie posten