[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 04:22.37 PM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் நீரின்றி கஷ்டப்படும் போது ஜஸ் பக்கட் சவாலானது, நீரை விரயம் செய்கிறதென புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கை, வைரஸ் போன்று பரவியுள்ள நிலையில் அரசாங்கம் அமைதியாக இருப்பது குறித்து பத்திரன ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கில் இருதய சத்திர சிகிச்சைப்பிரிவை அமைப்பதற்கான இந்த நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே, ஆறு இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஒக்சானியா ஹாட் நிதியத்துக்கு கிடைத்துள்ளன. இன்னும் 1.4 மில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக நிதியம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLderz.html
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மருமகளுக்கு அமெரிக்கத் தூதரகத்தில் வேலைவாய்ப்பு
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 04:55.34 PM GMT ]
அமெரிக்க பிங்காம்டன் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட ஜனத்ரி நாணயக்காரவுக்கே இந்த தொழில் வாய்ப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸின் தகவல்படி ஜனத்ரி ஏற்கனவே ஐக்கிய நாடுகளில் உள்ளக கடமைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை தூதரகத்திலும் அவர் உதவிகளை செய்திருப்பதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவருக்கு இராஜதந்திர பணிகளை செய்யும் அளவுக்கு அனுபவம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஜாலிய விக்கிரமசூரிய அமெரிக்காவில் உள்ள தூதரத்தின் பொறுப்பாளராக இருந்தபோது அரசியல் ரீதியாக பணியில் அமர்த்தப்பட்டார.
இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனுபவம் இல்லாத அமைச்சர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் அங்குள்ள தூதரகத்துக்கு நியமிக்கப்படுவது பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLder0.html
சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான வழக்கு செப்டம்பர் 26ல் விசாரணைக்கு
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 05:06.35 PM GMT ]
வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சிராணி பண்டாரநாயக்க தனது சொத்து விபரத்தில் வங்கி கணக்கு விபரங்களை உள்ளடக்கத் தவறியதாகத் தெரிவித்து லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
தனியார் வங்கியினால் வழங்கப்பட்ட கணனித் தகவல்களை, சிராணியின் சார்பில் கணனி நிபுணர்கள் ஆராய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கணனி சாட்சி தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3, 4 மற்றும் 5ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய வழக்கு விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLder1.html
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி உயர்வு
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 05:13.07 PM GMT ]
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய பயிச் செய்கையில் ஈடுபட்டு வரும் உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவனற்றை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு தங்களது விளைச்சாலை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவிலிருந்து 35 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLder2.html
சர்வதேச நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தை ஏற்க இலங்கை அரசாங்கம் மறுப்பு
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 11:42.01 PM GMT ]
இந்தக் கோரிக்கையை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது.
இதற்கு முன்னரும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலானட பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையிடம் கோரப்படடிருந்தது.
இந்தப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டால் இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் தண்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் ஒருவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு குறித்த பிரதிநிதி கோருவதன் நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLder3.html
Geen opmerkingen:
Een reactie posten