[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:03.28 AM GMT ]
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரை கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை போன்று குறித்த அலுவலகத்துக்குள் சென்று அங்கு தாக்குலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின பாதுகாப்பு இணையத்தளத்தில் தமிழக முதல்வரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை கண்டித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கட்டுரையை பார்த்த பின்னர் தற்கொலைக்கு முயன்ற அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சேலம் மாவட்ட பெண்கள் அமைப்பு உறுப்பினரான விஜயலட்சுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தூக்கவில்லைகளை உண்டுகொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfs7.html
வடக்கு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என கூட்டமைப்பிடம் இந்தியா கோரவுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:05.35 AM GMT ]
வடக்கு தமிழர் பிரச்சிகைளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்வதில்லை என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பெற்றுக் கொள்ளும் முயற்சியல் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைக்கு சர்வதேச தலையீடு அவசியமற்றது என்பதே பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய பிரமுகர்களான சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டவர்கள், இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு அவசியமற்றது என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளை இந்த மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு விடயங்களை சர்வதேசமயப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfty.html
நிபுணர் குழுவின் ஆலோசனைகளை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது: மெக்ஸ்வல் பரணகம
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:08.51 AM GMT ]
காணாமல் போனவர்கள் மற்றும் போர்க் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, ஆலோசனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியினால் மூன்று பேர் அடங்கிய வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த நிபுணர் குழுவின் ஆலோசனை வழிகாட்டல்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது என பரணகம தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் நிபுணர் குழுவின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும்.
நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் குழுவின் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என மெக்ஸ்வல் பரணகம சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcftz.html
ஐ.நா விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் – காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:09.39 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க ஆயத்த நிலையில் இருப்பதாக காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிற்கு வழங்கத் தயார் என அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
தேவையான சாட்சியங்களை திரட்டும் நோக்கில் வடக்கு கிழக்கில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடொன்றில் விசாரணைக் குழுவின் பிரதிநிதிகளை சந்திக்க தாம் ஆயத்தமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்போரை தண்டிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft0.html
Geen opmerkingen:
Een reactie posten