[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:26.30 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மை மக்களின் நலன் பேணும் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள தம்பர அமில தேரர் சிங்கள மக்கள் மத்தியில் பரவலான ஆதரவுத் தளத்தையும் கொண்டுள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தேசிய பிக்குமார் முன்னணி போன்றவற்றிலும் மிக முக்கிய பொறுப்புகளைக் கொண்டுள்ளார்.
இதுவரை காலமும் அவரது செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானதாகவே இருந்து வந்தது.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தான் போட்டியிடப் போவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.
இது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பான இறுதி முடிவை தாம் இன்னும் எடுக்கவில்லை என்று தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளதால், இறுதி நேரத்தில் இந்த முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfsz.html
ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை! மக்களை ஏமாற்றும் செயல்!- சிவாஜிலிங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 12:24.24 AM GMT ]
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவானது போலியான ஓர் வெளிக்காட்டலேயாகும். கடந்த காலங்களிலும் அரசாங்கம் பல்வேறு பெயர்களில் ஆணைக்குழுக்களை உருவாக்கியிருந்தது.
எனினும், இந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் வெறும் அறிக்கைகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது. ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தியதில்லை.
அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாகவே அரசாங்கம் வடக்கு மக்களை ஏமாற்றி வருகின்றது. மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு வழிகளை அரசாங்கம் தெரிவு செய்திருந்தது.
மக்களை ஏமாற்றும் நோக்கிலான ஆணைக்குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.
இதன் காரணமாகவே ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவையின் ஆணையாளா நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஆதரவளிக்க்த் தீர்மானித்தோம்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் போலி விசாரணைக்குழுவிற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளது.
சர்வதேச நிபுணர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது.
வடக்கு மக்கள் மீது அரசாங்கத்திற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டுமென சிவாஜிலிங்கம் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfs3.html
பாதுகாப்பு இணையத்தள கட்டுரைக்காக, இலங்கை அரசாங்கத்தை குற்றம் சுமத்த முடியாது: சுப்பிரமணியன் சுவாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:03.08 AM GMT ]
மதுரையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
குறித்த மாநாட்டுக்கு இலங்கையின் இராணுவ தளபதி தம்மை அழைத்துள்ளதாக சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டுக்கு இந்திய இராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறுமலாச்சி திராவிட முன்னேற்ற கழக செயலாளர் வைகோ ஆகியோர், பிரதமரிடம் கோரியுள்ளதாகவும் இது தொடர்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பில் இலங்கை ஜனாதிபதி பங்கேற்றமையை போன்று தாம் இந்த மாநாட்டில் பங்கேற்பதாக சுவாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கட்டுரை வெளியானமை குறித்து கருத்து வெளியிட்ட சுவாமி, தனி ஒருவர் எழுதிய கட்டுரைக்காக இலங்கை அரசாங்கத்தை குற்றம் கூறமுடியாது என்று தெரிவித்தார்.
இதன் பின்னால் இலங்கை அரசாங்கம் இருப்பதாக கூறுபவர்கள், இலங்கை - இந்திய உறவை தகர்க்கும் நோக்கத்தில் செயற்படுவர்கள் என்றும் சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfs6.html
Geen opmerkingen:
Een reactie posten