[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 06:50.04 AM GMT ]
வடக்கு மாகாணத்திற்கான நிதி நியதிச்சட்டம் முதலமைச்சரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சபையில் இன்று விவாதம் நடைபெற்று வருகின்றது.
வடக்கு மாகாண சபையின் 13வது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.
ஆளுநர் சந்திரசிறியினால் அனுமதி வழங்கி அனுப்பப்பட்ட நிதி நியதிச்சட்டத்தை நிதி அமைச்சரும் முதலமைச்சருமான க.வி. விக்னேஸ்வரனால் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்போது விவாதம் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை, வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்றும் கஞ்சாக் கடத்தல்காரர்கள் எனவும் அரசாங்கம் மற்றும் அரசுடன் சார்ந்த தரப்பினராலும் குற்றம்சாட்டப்பட்டமைக்கு வடக்கு மாகாண சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அவைத் தலைவர் சிவஞானம் சபையில் தெரிவிக்கையில்,
சில நாட்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அரச தரப்பாலும் அவர்கள் சார்ந்த தரப்பினராலும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டும் கஞ்சாக் கடத்தல்காரர்கள் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் அமைப்பு வடக்கு ஊடகவியலாளர்களின் திறனை வளர்க்கும் முகமாக பயிலரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
அதனை குழப்பவும் தடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.
எனவே இந்த விடயத்திற்கு வட மாகாண சபை கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet4.html
ராஜீவ் காந்தியின் வீட்டில் புலிகளின் உளவாளி: திடுக்கிடும் தகவலுடன் ஆர்.டி.பிரதான்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 06:52.14 AM GMT ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானார்.
இந்நிலையில் அவரது முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான் 'மை இயர்ஸ் வித் ராஜீவ் அன்ட் சோனியா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலேயே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இரகசியமாக ஊடுருவி தஞ்சம் அடைந்தார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ராஜீவ் வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட போதிலும் இந்தக் கொலை தொடர்பான முழு உண்மை வெளிவராது என்று தான் நான் நினைக்கிறேன்.
பல தேசங்களில் உள்ள சக்தி வாய்ந்த நபர்களின் சதி தான் ராஜீவ் கொலை என்பது என் கருத்து. ராஜீவ் வீட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் உளவாளிக்கு ராஜீவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள் முக்கிய தகவலை அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1991ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக அமேதியில் இருந்த சோனியாவும் என்னை போன்றே நினைக்கிறார். யாரோ ஒருவர் புலிகள் தரப்புக்கு இரகசிய தகவல்கள் அளித்ததாக அவரும் கருதுகிறார்.
தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திற்கு மட்டுமே விடுதலைப் புலிகளின் சதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ராஜீவ் காந்தியை கொலை செய்ய தயாரான போது, விடுதலைப் புலிகள் தாங்கள் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம் என்று பிறரை நம்ப வைத்து விட்டனர். இறுதியில் அவர்கள் தான் வென்றார்கள்.
எனது பார்வையில் இந்திய மத்திய உளவுத் துறையான ஐ.பி மற்றும் தமிழக ஆளுநர் பீஷ்ம நராயண் சிங் ஆகியோர் இந்த விடயத்தில் மத்திய அரசுக்கு தகவல்களைத் தெரிவிப்பதில் தோல்வி அடைந்து விட்டனர் என்று அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி, இந்திய பிரதமராக இருக்கும் போது, ஆர்.டி.பிரதான், இந்திய மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.
மேலும் அவர் 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை, சோனியா காந்தியின் அலுவலக பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet5.html
Geen opmerkingen:
Een reactie posten