[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:28.36 AM GMT ]
இவ்வாண்டுக்கான ஐ.நா. சபையின் பொதுச் சபை அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 24ம் திகதி தொடங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவின் உரை ஐ.நா. பொதுச் சபையில் செப்டம்பர் 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் செப்டெம்பர் மாதம் ஊவா மாகாண சபைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் முடிந்த கையோடு ஜனாதிபதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த வருடத்துக்கான ஐ.நா. உரையில் வழமை போன்றே சர்வதேசத்தை ஏமாற்றும் திட்டங்கள், அறிவிப்புகள் சில வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் மழுப்பலான போக்கை அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என்றே தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcetz.html
சுயலாபம் கருதி செயற்படும் மகாநாயக்கர்களை விமர்சிக்கும் பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:44.50 AM GMT ]
மகாநாயக்க தேரர்கள் அண்மைக்காலமாக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் பிரதமர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
அண்மைக்காலமாக மகாநாயக்கர்கள் உள்ளிட்ட சில முக்கிய தேரர்கள் அரசுகெதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதன் காரணமாக அரசாங்கத்தின் பௌத்த இனவாத வாக்குவங்கியில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனைச் சரிக்கட்டும் விதமாக அரசாங்கமும் தற்போது மகாநாயக்கர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களை திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக மகாநாயக்கர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை விமர்சிக்கும் நிலைக்கு அரசின் முக்கியஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளின் போது மௌனம் காத்த மகாநாயக்க தேரர்கள், தமது சொகுசான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டாத நிலையில் வாயைத்திறக்க முற்பட்டுள்ளனர். இதன்மூலம் அனைத்தையும் துறந்த துறவிகளும் சொகுசு வாழ்க்கையை துறக்கத் தயாரில்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மகாநாயக்கர்களின் சொகுசு வாழ்க்கை ஆசையை சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நியாயமான விமர்சனங்களைக் கூட புறம் தள்ளும் நிலைக்கு அரசாங்கம் துணிச்சல் பெற்றுள்ளது.
இதன் ஒரு கட்டமாக அண்மையில் அஸ்கிரிய விகாரையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பிரதமர் டீ.எம். ஜயரத்தின, மகாநாயக்க தேரர்களுடன் நேருக்கு நேர் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டார்.
அதன் எதிரொலியாகவே மகாநாயக்க தேரர்களின் சுயநலம் தொடர்பான அவரது விமர்சனம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet0.html
இலங்கையில் அதிகரிக்கும் அகதிகள்! ஐ.நா. தலையிடுமாறு கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:58.06 AM GMT ]
அண்மைக்காலமாக இலங்கையில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.
இதன் காரணமாக அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இதுவரை 1970 பேர் வரையானோர் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விடயத்தில் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தலையிட வேண்டுமென்று வெளிநாட்டமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிடாத பட்சத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet2.html
Geen opmerkingen:
Een reactie posten