ஊர் திரும்பும் வெளிநாட்டுத் தமிழரை படம் எடுக்கும் CID
குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக்கின்ற வீடுகளுக்குத் தேடிச்செல்லுகின்ற புலனாய்வாளர்கள், அவர்களிடம் வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றீர்களா?, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டீர்களா?, கடந்த காலத்தில் ஏதாவது ஆயுதப்போராட்ட இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றீர்களா? போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். இதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை குடும்பமாக புகைப்படமும் எடுத்துள்ளனர். இதனால் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அச்ச உணர்வினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/78803.html
இலங்கைக்கு போர் கப்பல் விற்பனை: மத்திய அமைச்சு செயலரை விளக்கமளிக்க உத்தரவு!
“இந்நிலையில் கோவா கடற்படைத் தளத்தில் உள்ள இரண்டு போர் கப்பல்களை மத்திய அரசு, இலங்கைக்கு வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே இந்த கப்பல்களை இலங்கைக்கு விற்கத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.
http://www.jvpnews.com/srilanka/78809.html
புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மாணவன் விபரங்கள் வெளியானது…
தனக்கு லீவு எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்னடம்பனில் உள்ள எமது வீட்டில் நின்றுவிட்டு, பரீட்சை இருப்பதாகத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகம் சென்றிருந்தார். அங்கு பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பொழுது கடந்த 05.08.2014 அன்று எனது மகனை சிலர் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவலறிய நேற்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் சென்றோம். அவர்கள் தமக்கு தகவல் கிடைத்துள்ளது, எனது மகனை பலாங்கொட பொலிஸார் கைது செய்து கொழும்பில் தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனையடுத்து இன்று வியாழக்கிழமை வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தற்போது எனது மகனைத் தேடி கொழும்பு செல்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் குறித்த மாணவனின் கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற புலனாய்வு துறையினர், அவரது விவரங்களைப் பெற்றுள்ளனர். எதற்காக விவரம் எடுக்கின்றீர்கள் என கேட்ட போது “எதுவும் வேலை வந்தால் கொடுப்பதற்கு” என்று கூறினார்கள் என மாணவனின் தாயார் தெரிவித்தார்.
மேற்படி மாணவனை கைதுசெய்யும் போது நேரில் கண்ட சக மாணவன் ஒருவன் கருத்து தெரிவிக்கையில் – கடந்த 5 ஆம் திகதி அன்று பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நாங்கள் நின்றிருந்தோம். அப்போது எமது பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இந்திக்கா என்ற விரிவுரையாளர், நிரோசனின் பரீட்சை இலக்கத்தை கூறி அவரை வருமாறு அழைத்து, அங்கிருந்து கூட்டிச் சென்றார். இந்த நிலையில் பல மணி நேரங்களுக்கு பின் நிரோஜனை வளாகம் முழுவதும் தேடிய போதும் காணவில்லை. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம் ஊடாக நிரோஜனை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அறிந்துகொண்டோம் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/78812.html
Geen opmerkingen:
Een reactie posten