தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

மகிந்த அரசு மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பழிவாங்குகிறது: ரணில் விக்ரமசிங்க!!!

இறுதியுத்தத்தின் வடு: பரீட்சையின் போது மயங்கி விழுந்த கிளிநொச்சி மாணவி
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 11:43.42 AM GMT ]
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவியொருவர் இன்று பரீட்சை மண்டபத்தினுள் மயங்கி விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று காலை கணிதப் பிரிவில் எழுதிக் கொண்டிருந்த மாணவியே திடீரென மயங்கி வீழ்ந்தார்.
சம்பவத்தினையடுத்து, குறித்த மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த மாணவி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற ஷெல் வீச்சினால் படுகாயமடைந்துள்ளார்.
இதனால், வெடித்த ஷெல்லின் சன்னம் ஒன்று மாணவியின் தலைப் பகுதியில் இன்னும் இருப்பதாகவும் இதனாலே இவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று பரீட்சை எழுதும் போதும் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் முழுமையாகப் பரீட்சை எழுதமுடியாத பரிதாப நிலை எற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnuz.html
மகிந்த அரசு மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பழிவாங்குகிறது: ரணில் விக்ரமசிங்க
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 10:26.01 AM GMT ]
பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களின் கீழ் பலர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களின் முறைப்பாடுகளை பெற்று, அது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து விளக்குவதற்காக கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ அரசாங்கம் உயர்ந்த மட்டத்தில் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளது.
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு மேற்கொண்ட அரசியல் பழிவாங்கல் எதிர்காலத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் எழுதுவிளைஞருக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுமா என்பதை கூற முடியாது.
திவிநெகும சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், முன்னாள் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க பழிவாங்கப்பட்டார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிரிகள் மாத்திரமல்லாது அரசாங்கத்தில் இருக்கும், அரசாங்கத்திற்கு எதிரானவர்களும் இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவின் வாகனத்தை சில வாகனங்கள் துரத்திச் சென்றமை தொடர்பான தகவல்கள் வெளியாகின.
அந்த வாகனங்களின் இலக்கங்களை கொடுத்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தங்களை மீறி செயற்பட்ட காரணத்தினால் கிராம்பே ஆனந்த தேரரின் தியசேன்புரவில் உள்ள விகாரை தாக்குதலுக்கு உள்ளானது.
அன்றைய தினமே பொரள்ளையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
சில அடிப்படைவாத பௌத்த பிக்குகளின் செயல்களால் நாடு பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.
சட்டம் , ஒழுங்கு அமைச்சு, மற்றும் பாதுகாப்பு அமைச்சு இருக்கும் நிலையில், பிரச்சினையுடன் சம்பந்தப்படாத வெளிவிவகார அமைச்சு தலையிட்டு பதில் வழங்கும் நிலைமையை காணக்கூடியதாக உள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கம், மிருக குணம் கொண்ட அரசாங்கம். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnuy.html

Geen opmerkingen:

Een reactie posten