இலங்கைக்கு எதிராக சென்னையில் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அலுவலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களையும் எழுப்பி அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநாட்டு அரங்குக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது. 
http://www.jvpnews.com/srilanka/78815.html
அவுஸ்ரேலியா ஒப்படைத்த தமிழர்கள் மீது இலங்கையில் சித்திரவதை!
அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். “விடுதலைப் புலிகளுக்கு நீ பணம் கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா?” – என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர். இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். நெல்சன் தனது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டுக் கதவை தட்டியதாக நெல்சன் மனைவி குறிப்பிட்டார்.
காலியில் நெல்சனை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே அவர்களை இங்கு அனுப்பி இருந்தார்கள். அவ்வேளை அவர் தனது 14 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்டனர். அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்டனர். நான் தெரியாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரிவித்தான். நெல்சன் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். நெல்சனும் படகில் இருந்த ஏனைய 3 தமிழர்களும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தாங்கள் இன அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளர்களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர். நெல்சன் தான் நாடு கடத்தப்பட்ட பின்னர் தனது நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கிறார். “நான் அச்சமடைந்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார் என ‘தி கார்டியன்’ மேலும் தெரிவித்துள்ளது.
வைப்பக படம்
http://www.jvpnews.com/srilanka/78821.html
Geen opmerkingen:
Een reactie posten