சிசு விவகாரம்; இரு பெண்கள் கைது
அத்துடன், இந்தச் சிசுவை வாங்கியதாகக் கூறப்படும் பெண்ணையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/78910.html
அவுஸ்ரேலியா ஒப்படைத்த தமிழர்கள் மீது இலங்கையில் சித்திரவதை!
அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். “விடுதலைப் புலிகளுக்கு நீ பணம் கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா?” – என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர். இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். நெல்சன் தனது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டுக் கதவை தட்டியதாக நெல்சன் மனைவி குறிப்பிட்டார்.
காலியில் நெல்சனை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே அவர்களை இங்கு அனுப்பி இருந்தார்கள். அவ்வேளை அவர் தனது 14 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்டனர். அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்டனர். நான் தெரியாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரிவித்தான். நெல்சன் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். நெல்சனும் படகில் இருந்த ஏனைய 3 தமிழர்களும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தாங்கள் இன அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளர்களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர். நெல்சன் தான் நாடு கடத்தப்பட்ட பின்னர் தனது நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கிறார். “நான் அச்சமடைந்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார் என ‘தி கார்டியன்’ மேலும் தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/78913.html
கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட மகன் வீடு திரும்பவில்லை தாயார் சாட்சியம்
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பா விசாரனை செய்யும் பொது சன அமர்வு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் மனோ ராமநாதன்,எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை(8) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டது.
இதில் விடத்தல்தீவைச்சேர்ந்த டோமினிக் செல்வரானி எனும் தாய் தனது மகனைக் காணவில்லை என்ற முறைப்பாட்டை இக்குழுவின் முன்னிலையில் முன்வைத்து சாட்சியமளிக்கையிலேயே அவா அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,,,,, மன்னார் கடற்பரப்பில் எனது மகனுடன் மேலும் நான்கு பேர் விடத்தல் தீவு கடற்கரையில்; இருந்து 23-02-2007 ஆம் ஆண்டு ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இப்படகு எனது மகனுடன் சென்றவர் ஒருவருடைய படகாகும்.
இவர்கள் நாளாந்தம் வழமை போன்று இப்பகுதிக்கு மீன்பிடியில் ஈடுபட்டு வருவது வழக்கம். சம்பவ தினத்தன்று இவர் கரை வந்து சேராததினால் நாங்கள் விசாரித்த போது கடலில் வைத்து கடற்படையினர் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
தலைமன்னார் கடற்படையினரே இவர்களை அழைத்துச் சென்றதாக தலைமன்னார் பகுதி மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இது சம்பந்தமாக தலைமன்னார் கடற்படையினரிடம் விசாரித்த போது அவர்கள் குறித்த சம்பவம் பற்றி தமக்குத்தெரியது என எங்களுக்குத் தெரிவித்தனர். பின் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இடம் பெயர்ந்து சென்ற போது தலைமன்னார் கடற்படையினரின் முகாமில் எனது மகன் இருந்ததை கண்டவர்கள் தெரிவித்தனர்.
இடம் பெயர்ந்து சென்ற போது தலைமன்னார் கடற்படையினரின் முகாமில் எனது மகன் இருந்ததைக்கண்டவர்கள் எமக்கு தெரிவித்தனர். இது சம்பந்தமாக ஐ.சி.ஆர்.சி யில் நாங்கள் முறைப்பாடு செய்த போது மகனை தேடிக்கண்டுபிடித்து தருவதாக எங்களுக்கு தெரிவித்தனர். இது வரை மகனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத்தெரியாது. இதன் பின் குறிப்பிட்ட காலத்தில் தலைமன்னார் கடற்படையினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.
சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே மகனை தேடக்கூடிய நிலமை எமக்கு அப்போது இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து கடற்கரைக்கும் 10 நிமிடத்தில் நடந்து செல்ல முடியும். அப்பொழுது இக்கடற்கரைப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டியே இருந்தது. இப்பொழுது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.2009ஆம் ஆண்டிற்கு பின்னே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்ததாகும். 2007 ஆம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது நாங்கள் தேவன் பிட்டி என்ற பகுதிக்கு அகதிகளாக சென்றோம். அங்கு 6 மாதம் தங்கியிருந்தோம்.பின் இடம் பெயர்ந்து சுதந்திரபுர பகுதிக்கு கால்நடையாகவும்,வாகனத்திலும் சென்றோம்.
நாங்கள் இடம் பெயரும் போது எங்களை எவரும் தடுக்கவில்லை.உயிரை பாதுகாப்பதற்காகவே சென்றோம்.அந்த நேரத்தில் இரு தரப்பினரும் சன்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாலேயே எமது உயிரை பாதுகாக்க எமது இடத்தில் இருந்து இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
2010 ஆம் ஆண்டு நாங்கள் திரும்பி எமது விடத்தல் தீவு பகுதிக்கு மீண்டும் வந்த போது நாங்கள் தொழில் செய்யும் மீன் வாடியை இராணுவம் இப்பொழுதும் தமது கைவசத்தில் வைத்துள்ளது. 04-12-2010ஆம் திகதி நாங்கள் எமது வீட்டிற்கு வந்தபோது வீடு மட்டும் இருந்தது.பொருட்கள் எவையும் இல்லை.
அரசு எமக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை.யு.என்.எச்.சி.ஆர்.மட்டும் 25 ஆயிரம் ரூபாய் மட்டும் தந்து உதவியது. வேறு யாரும் உதவிகள் செய்யவில்லை.நாங்கள் கடன் பட்டு எங்கள் வீட்டை திருத்தி வாழ்ந்து வருகின்றோம்.
எனது கனவருக்கு வயது-61 எனது மகனையும் காணவில்லை.அதே நேரத்தில் எங்கள் வருமானமும் குடும்பத்திற்கு போதமல் இருப்பதுடன் எங்கள் சொந்த மீன் வாடியையும் இராணுவம் தங்கள் வசம் வைத்திருப்பதால் நாங்கள் பிரருடைய மீன் வாடியையே குத்தகைக்கு பெற்று எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.
இராணுவம் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் கொடுப்பதில்லை.ஆனால் நாங்கள் தொழில் மேற்கொள்ளும் எமது வாடியை தராமல் இருப்பது கவலையை தருகின்றது.மகன் காணமல் போன போது கடற்பகுதியை கடற்படையினர் கன்காணித்தார்களா என்பது எமக்குத்தெரியாது என அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/78917.html
Geen opmerkingen:
Een reactie posten