[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 09:24.42 AM GMT ]
முன்னாள் காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்து நீதிமன்றம் தண்டனை வழங்கி விட்டது. இந்த வழக்கில் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது.
அப்படிப்பட்ட நபர்களை கண்காணிக்கவும், கைது செய்யவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகையாக தாக்கல் செய்து விசாரணைக்கு உட்படத்தவும், பல்நோக்கு கண்காணிப்பு விசாரணை முகமை என்ற அமைப்பு சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை முகமை, ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை, சென்னையில் உள்ள தடா கோர்ட்டில் தங்களது விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாகி, குமரன் பத்மநாதன் என்ற கே.பி. என்பவரை சி.பி.ஐ. தேடி வந்தது.
கடந்த 2009ம் ஆண்டு மலேசியாவில் தலைமறைவாக இருந்த குமரன் பத்மநாதனை இலங்கை இராணுவம் கைது செய்தது. பின்னர், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது, இலங்கையில் அவர் வசித்து வருகிறார். எனவே, அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் அதிகாரிகள், இந்த கொலை வழக்கு குறித்து மீடியாக்களுக்கு தங்களது விருப்பம் போல் பேட்டிகளை கொடுக்கின்றனர்.
இவற்றின் அடிப்படையில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx7.html
அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுங்கள்!- ஜனாதிபதியிடம் ஞானசார தேரர் கோரிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 10:06.41 AM GMT ]
இந்த நாட்டுக்கு தற்போது தேசியத் தலைவர் ஒருவரே தேவைப்படுகிறார். தவிர பொது வேட்பாளர் இல்லை. அதனால், அரசர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை பொது பல சேனா ஆரம்பித்துள்ளது என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பௌத்தம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். நாம் இதுவரை பொறுமை காத்தது போதும். வெளியிடங்களிலிருந்து வரும் அழுத்தங்கள், நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தினாலோ அல்லது அதிகாரம் படைத்தவர்களாலேயோ பௌத்தர்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. எமது எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் என அனைத்து தரப்பினரும் பாரியதொரு ஏமாற்றத்துக்குள் சிக்கியுள்ளனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் தலையீடுகள் இன்றிய தேசிய அரசியல் கோட்பாடொன்றினூடாக நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது அரசியல், தேசிய அரசியலாகும். எமக்கு சிறந்த பொருளாதாரம் போது சிறந்த அரசியல் தலைமைத்துவமும் தேவைப்படுகிறது. அபிவிருத்தி அபிவிருத்தி என்று எவ்வளவுதான் கத்தினாலும் பல பிரிவுகளில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், கொள்ளையர்களும் சூழ்ச்சிக்காரர்களும் அதிகரித்துவிட்டனர். நாடு குறித்த எந்தவொரு உணர்வும் அற்ற சமூகமொன்றே இன்று அரசியல் நடத்துகிறது என ஞானசார தேரர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmoz.html
Geen opmerkingen:
Een reactie posten