தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு- வெளிநாட்டு தூதரகங்கள் கண்டனம்!!

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆணைக்குழு இன்னும் ஆறு மாதங்களுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இந்த ஆணைக்குழு இயங்கும்.
இந்த ஆணைக்குழு 2013 ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விசாரணைகள் தொடர்பான முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளதால் ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன் படி இந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனாவின் அட்டகாசத்திற்கு வெளிநாட்டு தூதரகங்கள் கண்டனம்
கொழும்பில் நேற்று காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்த கலந்துரையாடலை பொதுபல சேனா அமைப்பினர் குழப்பியமைக்கு பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பௌத்த துறவிகள் அடங்கிய குழு ஒன்று கத்திக் கொண்ட கலந்துரையாடல் நடைபெற்ற அறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் கருத்து மற்றும் உணவுர்களை வெளிப்படுத்தவே நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், 30க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் இருந்த போது இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இவர்களுக்கு தங்கள் உணர்வுகள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்த உரிமையளிக்க வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவர்கள் தங்கள் வட மாகாணங்களுக்கு திரும்பி செல்லும் போது பாதுகாப்பும், மற்றும் அவர்களுக்கு நம்பிக்கையும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcev2.html

Geen opmerkingen:

Een reactie posten