[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 11:18.39 AM GMT ]
கச்சதீவு விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
கச்சதீவு பகுதியில் இந்திய மீனவர்களின் உரிமை பற்றி விளக்கம் அளிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறி இருந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கச்சதீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது பற்றி பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcevz.html
வடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் நியதிச் சட்டங்களைப் பரிசோதிக்க 05.08.2014ந் திகதி காலை 9.30 மணிக்கு கைதடி வடமாகாணசபை மண்டபத்தில் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை வருமாறு:-
கச்சதீவு பகுதியில் இந்திய மீனவர்களின் உரிமை பற்றி விளக்கம் அளிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறி இருந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கச்சதீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது பற்றி பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcevz.html
வடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 11:37.56 AM GMT ]
குருர் ப்ர்ம்மா ………………..
கௌரவ தவிசாளர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, அமைச்சர்களே, என் சக உறுப்பினர்களே!
இன்று ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாம் கூடியுள்ளோம்.
நாம் மூன்று நியதிச்சட்ட வரைவுகளை உங்கள் முன் விவாதத்திற்காகச் சமர்ப்பிக்க முன் ஆளுநருக்கு அனுப்பினோம். எந்த ஒரு நிதி சம்பந்தப்பட்ட நியதிச் சட்டமும் 1987ம் ஆண்டின் 42ம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தின் பிரிவு 24(1)ன் ஏற்பாடுகளின் படி மாகாண ஆளுநரின் சிபார்சுடனேயே சபையில் விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம். அந்த விதத்திலேயே மேற்படி மூன்று வரைவுகளை சிபார்சிற்காக அனுப்பியிருந்தோம்.
அவற்றுள் ஒன்றை அவர் சிபார்சு செய்துள்ளார். மற்றொன்றை நிராகரித்துள்ளார். மூன்றாவதை திருத்தச் சொல்லியுள்ளார்.
1. சிபார்சு செய்த நியதிச் சட்டந்தான் முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம். (Transfer of Stamp Duty Statute) அதனை அங்கீகரிப்பதில் இந்த அவைக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்காது என்று நம்புகின்றேன். ஆனால் தாய்ச்சட்டமான நிதி நியதிச்சட்டத்தை (The Finance Statute) அங்கீகரிக்காமல் முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர முடியாது.
2. நிதி நியதிச்சட்டத்தைப் பொறுத்தவரை அதன் வரைவானது கூடுமானவரை 2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கிழக்கு மாகாணசபை நிதி நியதிச்சட்டத்தை அடியொற்றியே தயாரிக்கப்பட்டிருந்தது என்று கௌரவ அவைத் தவிசாளர் அவர்களால் கௌரவ ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டிருந்தது.
எனினும் ஆளுநரின் செயலாளர் ஆளுநரின் சில அவதானங்களை எடுத்தியம்பியுள்ளார். அது பற்றி குழுநிலை விவாதத்தில் விரிவாக நாம் அலசி ஆராயலாம்.
ஆயினும் ஓரிரு விடயங்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப் படவேண்டியுள்ளது.
A. எமது நிதி நியதிச் சட்டத்தின் தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது – அதாவது “A statute to provide for the imposition and collection of taxes and fees and for matters connected therewith or incidental thereto” என்று. கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரால் 2009.03.05ந் திகதியன்று சம்மதம் தெரிவிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் 2008ம் ஆண்டின் முதலாவது நிதி நியதிச்சட்டத்;தின் தலைப்பு வாசகம் அச்சொட்டாக எந்த ஒரு சொல்கூட மாற்றமில்லாமல் இவ்வாறே உள்ளது என்று தெரியவருகின்றது.
அவ்வாறிருக்க எமது நியதிச்சட்ட ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்து இவ்வாறான நியதிச்சட்டம் கையாளக் கூடிய விடயங்களைத் தெளிவாகக் குறிப்பிடும் படி கோரியுள்ளமை மயக்கத்தைத் தருகின்றது. அதுமட்டுமல்ல, நிதி நியதிச்சட்டத் தலைப்பை (Title) முகப்பு வாசகம் (Preamble) என்றும் முகப்பு வாசகத்தைத் தலைப்பு என்றும் குறிப்பிட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை.
எனினும் இப்பேர்ப்பட்ட சில்லறை மாற்றங்களைச் செய்வதால் சிக்கல்கள் எதுவும் ஏற்படாது என்பதே உண்மை. ஆனால் இவற்றைத் தூக்கிப் பிடிப்பதால் கால விரயம்தான் ஏற்படுகின்றது.
ஆனால் தலைப்புக்கும் முகப்பு வாசகத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் எவ்வெந்தச் சட்டங்களுக்கு முரணாக இந்த நியதிச்சட்டம் தயாரித்து இருக்கக் கூடும் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அதில் சான்றியல்க் கட்டளைச் சட்டம், நீதிமன்றங்கள் கட்டளைச் சட்டம் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு செய்ததன் காரணம் சட்டப்படி நாட்டின் சட்டத்துடன் தொடர்புடையதாக அல்லது முரண்பாடுடையதாக ஏதேனும் நியதிச்சட்டத்தின் ஏதேனும் ஷரத்துக்கள் அமைந்தால் அவற்றைக் குறிப்பிடவேண்டும் என்பதால். எந்த வகையில் அவ்வாறான முரண்பாடு இருக்கக் கூடும் என்பதை ஆராயாமல் அவற்றை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.
B. விற்பனைப் புரள்வு வரி தொடர்பாக 1995ஆம் ஆண்டின் 25ம் இலக்க விற்பனைப் புரள்வு வரி (கட்டுப்பாடுகளும் விதிவிலக்குகளும்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய மாற்றங்கள் செய்யக் கோரப்பட்டுள்ளது. அதாவது வரைவின் பிரிவு 3(1) விற்பனவு வரி விகிதத்தை கட்டளைகள் மூலம் அமைச்சர் நிர்ணயிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மாகாணசபைக்கு அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டாலும் மாகாணசபைச் சட்டத்தின் 24(1) பிரிவுக்கு முரணானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்திலும் கிழக்கு மாகாணசபையின் நிதி நியதிச்சட்டத்தின் பிரவு 77(1) இன் படி விதிகளைப் பிரகடணப்படுத்தும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்படியிருந்தும் எல்லா வரிவிதிப்புக்களையும் நியதிச்சட்டம் மூலம் அமுல் செய்ய வேண்டுமெனத் தெரிவிப்பது நிர்வாக தாமதங்களை ஏற்படுத்துவதுடன் நியதிச்சட்டங்களின் பெருமைகளைக் குறைத்து விடவே செய்யும்.
இவ்வாறான மாற்றங்கள் சிபார்சு செய்ப்பட்டுள்ளன. இவற்றைக் குழுநிலையில் பரிசீலனை செய்யலாம் என்று கருதுகின்றோம்.
3. மூன்றாவதாக நாங்கள் சமர்ப்பித்த நியதிச்சட்ட வரைவு வடமாகாண முதலமைச்சரின் நிதியம் பற்றியது. அதை நாங்கள் ஆளுநருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் எதுவும் இருக்கவில்லை. எனினும் நல்லாட்சிக்கான வெளிப்படைத் தன்மையை முன்னிட்டு அதையும் அனுப்பி வைத்தோம். அதைத்தான் அவர் நிராகரித்துள்ளார். அது பற்றி அவரின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றைத் திரு.திருவாகரன் அவர்கள் மூலம் அனுப்பியுள்ளேன். அது ஆங்கிலத்தில் இருக்கின்றது. அதனை வாசிக்க அனுமதி கோருகின்றேன்.
…வாசிக்கப்படுகிறது…
ஆகவே முதல் இரு நியதிச்சட்ட வரைவுகளையுங் குழு நிலையில் பரிசீலனை செய்யலாம் என்பதுடன் மேற்படி முதலமைச்சர் நிதியம் பற்றிய வரைவை இச்சபை இன்றே ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஆங்கிலத்தில் இருக்கும் அதனை சம்பிரதாய ப+ர்வமாக வாசிக்க வேண்டும் என்று சபை கருதினால் அதை வாசிப்பேன். அதன் தமிழாக்கம் என் கைவசம் இன்னும் கிடைக்கவில்லை. ஆங்கில வரைவு பின்வருமாறு –
…வாசிக்கப்படுகிறது…
நன்றி.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
http://www.tamilwin.com/show-RUmsyITZLcev0.html
கிளிநொச்சி, தர்மபுரத்தில் கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்-4ற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூஸா முகாமிலுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்- 4 வின் நேர்காணல் தொடர்பாக விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 11:41.31 AM GMT ]
தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி, கைது செய்யப்படுவதற்கு முன் பின்தொடரப்படுவதாகவும் என்றும் அச்சுறுத்தப்படுவதாகவும் பிரிட்டனின் சனல் 4 ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.
இவர் கைது செய்யப்பட்டதன் பின்பு சனல் 4 ஊடகம் அந்த நேர்காணலை வெளியிட்டிருந்தது இந்நேர்காணல் தொடர்பிலே ஜெயக்குமாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனல் 4 ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெயக்குமாரியின் வாழ்க்கை கடினமானது. அவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் போரின்போது இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இரண்டாவது மகன் இறுதிக் கட்டப் போரின் போது சாவடைந்திருந்தர். மூன்றாவது மகன் மகிந்தன் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுடன் இணைந்து போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
ஜெயக்குமாரி தனது சரணடைந்த மகனைத் தேடித்திரிந்த வேளையில் அவரது மகனின் புகைப்படம் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட புத்தகத்தில் இருந்தது.
இதன் பின்னர் அவர்கள் தமது மகனை விடுவிக்குமாறு கோரி எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஜெயக்குமாரி சனல் 4 ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கியிருந்தார் அதில் அவர் இனந்தெரியாதோரால் தான் பின்தொடரப்படுவதாகவும், அச்சமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர்கள் யாரையும் தனக்குத் தெரியாது என்றும் இந்த நேர்காணலை சனல் 4 ஊடகத்துக்கு முழு மனதுடனேயே வழங்குகின்றேன் என்று அவர் கூறியிருந்தார்.
இவரது 13 வயது மகள் விபூஷிகா தற்போது சிறுவர் இல்லம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் கைது செய்யப்பட்டதன் பின்பு சனல் 4 ஊடகம் அந்த நேர்காணலை வெளியிட்டிருந்தது இந்நேர்காணல் தொடர்பிலே ஜெயக்குமாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனல் 4 ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரண்டாவது மகன் இறுதிக் கட்டப் போரின் போது சாவடைந்திருந்தர். மூன்றாவது மகன் மகிந்தன் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுடன் இணைந்து போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
ஜெயக்குமாரி தனது சரணடைந்த மகனைத் தேடித்திரிந்த வேளையில் அவரது மகனின் புகைப்படம் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட புத்தகத்தில் இருந்தது.
இதன் பின்னர் அவர்கள் தமது மகனை விடுவிக்குமாறு கோரி எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஜெயக்குமாரி சனல் 4 ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கியிருந்தார் அதில் அவர் இனந்தெரியாதோரால் தான் பின்தொடரப்படுவதாகவும், அச்சமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர்கள் யாரையும் தனக்குத் தெரியாது என்றும் இந்த நேர்காணலை சனல் 4 ஊடகத்துக்கு முழு மனதுடனேயே வழங்குகின்றேன் என்று அவர் கூறியிருந்தார்.
இவரது 13 வயது மகள் விபூஷிகா தற்போது சிறுவர் இல்லம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten