[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 02:02.44 PM GMT ]
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளராக செயற்பட்ட கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு உள்ளதாகவும் அதனை விசாரிக்குமாறும் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் பொலிஸ் அதிகாரி மோகன்ராஜ் என்பவரே சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாபன் தற்போது இலங்கையில் உள்ளதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். கே. கவுல், நீதிபதி சத்திய நாராயணன், அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyI
சிறுபான்மை இனத்தைத் தாக்க தயாராகும் பேரினவாத சக்திகள்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 03:20.43 PM GMT ] [ valampurii.com ]
அத்தகையதொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், இலங்கையின் சமகாலப் போக்கு இனவாதப் போருக்கு வித்திடுவது போன்ற அறிகுறிகளைக் கண்டு கொள்ளலாம்.
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறை என்பது சிறுபான்மை இனத்திற்கு எதிரான கட்டவிழ்ப்பு என்றே கூறவேண்டும்.
முஸ்லிம் இனம் சார்ந்தவர்கள் இந்த நாட்டின் பொறுப்பான அமைச்சுப் பதவிகளில் இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் கட்டவிழ்ப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனில், அமைச்சுப் பதவிகளின் அதிகாரம் என்பது கூட அந்தப் பதவியை வகிப்பவரின் இனம் சார்ந்தது என்று சொல்லும் அளவிலேயே எங்கள் நாட்டின் நிலைமை உள்ளது.
தென்பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் சில பேரினவாத அமைப்புகள் சிறுபான்மை இனத்துக்கு எதிராக மிக மோசமாக நடந்து கொள்கின்றன.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற அடிப்படையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறுபான்மை இனங்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து ஓர் இன வன்முறைக்கு வித்திட சில தீய சக்திகள் முனைந்துள்ளன என்பது தெரிகின்றது.
எனவே, இத்தகைய தீய சக்திகளை வேரோடு களைகின்ற பொறுப்பு இந்த நாட்டின் அரசின் தலையாய கடமையாகும்.
2009 ம் ஆண்டு யுத்தத்திற்கு பின்பு இலங்கையில் நீடித்த அமைதி நிலைக்க வேண்டுமாயின் முதலில் இன, மத, மொழி என்பவற்றுக்கான முன்னுரிமைகள் முற்றாக நீக்கப்பட வேண்டும்.
இது எல்லோருக்கும் உரித்தான நாடு என்ற பொதுமை அரசினால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவது அவசியம். ஆனால் அவ்வாறானதொரு சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.
நேற்று முன்தினம் சப்ரகமுக பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
கூடவே, தமிழ் இனத்திற்கு எதிரான சுவரொட்டிகளும் பல்கலைக்கழக சூழலில் காணப்படுவதானது அளுத்கமவுக்கு அடுத்தபடியாக வன்முறைச் சம்பவத்தை ஏற்படுத்துகின்ற நோக்கமாக இருக்கலாம்.
எதுவாயினும் இத்தகைய வன்முறைகள் நாட்டில் இடம்பெறாது இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் அதேநேரம், சிறுபான்மை அரசியல் கட்சிகளும் வன்முறைச் சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு தயாராக வேண்டும்.
அதேசமயம் இத்தகைய அறிகுறிகள், தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனயீர்ப்புகள் அவசியமானவை என்பது மறுக்க முடியாத உண்மை.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcev4.html
Geen opmerkingen:
Een reactie posten