[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 07:38.58 AM GMT ]
அன்பே சிவம் அமைப்பின் ஊடாக ஸ்ரீ பாலமுருகன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும்,
தங்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் மிகவும் கஸ்ட நிலையில் பெண்களை தெரிவு செய்து அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் 20 பேருக்கு தலா 40000ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்வும்,
மாலைநேர இலவச வகுப்புக்களுக்கான கல்வி நிலையம் திறக்கும் நிகழ்வும் நேற்று கல்முனை விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் சிறப்பு அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் புஸ்பா பொருளாதார கல்வி, சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான செ.இராசையா, அன்பே சிவம் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு திருநாமசிவம், திருமதி திருநாமசிங்கம் செல்வேந்திரராணி, அந்த அமைப்பின் தலைவர் அ.அருளானந்தம், அனைத்து மாவட்டங்களினதும் இணைப்பாளர் கே.குமணன் மற்றும் ஆலயத்தலைவர்கள், பாடசாலை அதிபர் வரதராஜன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
இன்று எமது மக்கள் அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது இனமாகவே வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.
மூன்று இனங்கள் வாழ்ந்தாலும் தமிழர் இனத்தினை ஒதுக்குவதிலே வேற்று இனங்கள் குறியாக இருக்கின்றார்கள். எமது நியாயங்களை எங்கு சென்றும் கூறமுடியாத நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தகாலத்தில் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றம் இடம்பெற்றபோதும் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இப்படித்தான் காணப்படுகின்றது.
தங்களது இருப்பை எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அமைப்புக்கள் மூலமும் துடிப்புள்ள இளைஞர்களின் தூர சிந்தனையின் மூலம்தான் எமது இலக்கனை அடைய முடியும் இதற்கு அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.
உரிமையைப் பெற பல தசாப்தகாலமாக போராடுகிறோம்: செ.இராசையா
அன்பு என்பது அனைவரது உள்ளத்திலும் இருக்கின்றது. அந்த அன்புதான் அனைவரையும் வாழவைக்கின்றது இந்த அன்பினை அனைவரிடத்திலும் உணர்த்துவதற்காகத்தான் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், புஸ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளருமான செ.இராசையா தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் எங்களது உரிமையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று பல தசாப்தகாலமாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று இந்த நாட்டை ஆளுகின்ற அரசினால் பல ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி எங்களுடைய மொழி, கலை, கலாசாரப் பண்பாடுகள் மற்றும் ஏனைய விழுமியங்களையும் இழந்து கொண்டு இருப்பவர்களாக இன்று இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் வடமாகாணத்தினை எடுத்துக் கொண்டால் அங்கு பெரும்பான்மையாக 99 வீதமாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் கிழக்கினை
பொறுத்தவரை அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே 3 இன மக்களும் வாழ்கின்றார்கள்.
பொறுத்தவரை அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே 3 இன மக்களும் வாழ்கின்றார்கள்.
இந்த மூன்றின மக்களுடைய தனித்துவத்திற்கும் முகங்கொடுத்து வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் எங்களது மத, கலாசார விழுமியங்களை இழப்போமாக இருந்தால் நாங்கள் அடையாளம் அற்றவர்களாக வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
இந்த விடயத்தில் நாங்கள் அனைவரும் மிகுந்த சிரத்தை எடுத்து செயற்பட வேண்டும். அதனடிப்படையிலே இந்த அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் கிழக்கு மாகாணத்திலே தத்தளித்துக் கொண்டிருக்கும் எமது தமிழ் மக்களின் துன்பதுயரங்களில் பங்கெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முன்வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறான உதவிகள் ஒரு கிராமத்தினையோ அவல்லது பிரதேசத்தினையோ மையப்படுத்தி இருக்காமல் மிகவும் துன்பநிலைக்கு உள்ளாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் அனைத்து தமிழ் மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
இந்த நாட்டிலே தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்றால் எங்களுடைய விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் அறங்காவல் நிலையங்கள் செயற்படுவதன் மூலம் ஆன்மீக ஈடேற்றத்தினை பெற்று என்ன நோக்கத்திற்காக பிறந்தோமோ அந்த நோக்கத்தினை அடைய முயற்சிக்க வேண்டும்.
நாங்கள் ஆண்ட பரம்பரை யாருக்கும் சளைக்கத் தேவையில்லை பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தினை கொண்டவர்கள் முடியோடும் கொடியோடும் வாழ்ந்தவர்கள் என்பதனை நாம் அனைவரும் அறிந்து வைத்திருத்தல் மிகவும் முக்கியமான விடயமாகும். எமக்குள் எந்தவிதமான தனிப்பட்ட வேற்றுமைகள் இருந்தாலும் எங்களது இனம், மொழி, சமயம் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
இந்த வகையிலேதான் எமது உறவுகள் இன்று பல நாடுகளில் புலம்பெயர்ந்து இருந்தாலும் அவர்கள் தங்களது இனத்தில் வைத்திருக்கும் பற்றுறுதியை நான் மெச்சுகின்றேன் அந்தவகையிலே இந்த நிகழ்வு அனைவருக்கும் மனமகிழ்ச்சியைத்தரும் ஒரு நிகழ்வாகும். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns7.html
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை புதிய தூதுவர் நியமிப்பு
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 08:00.34 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் இயங்கி வருகிறது.
நியூயோர்க்கில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள ரொட்னி பெரேரா, இத்தாலி, நோர்வே, சைப்பிரஸ், மோல்டா, அல்பேனியா ஆகிய நாடுகளில் தூதுவராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன் நியூயோர்க் மற்றும் ஜெனிவா ஆகிய நகரங்களில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்திலும் கென்யாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தூதரக அதிகாரியாகவும் பெரேரா பணியாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnty.html
Geen opmerkingen:
Een reactie posten