தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை புதிய தூதுவர் நியமிப்பு
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 08:00.34 AM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரொட்னி பெரேரா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் இயங்கி வருகிறது.
நியூயோர்க்கில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள ரொட்னி பெரேரா, இத்தாலி, நோர்வே, சைப்பிரஸ், மோல்டா, அல்பேனியா ஆகிய நாடுகளில் தூதுவராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன் நியூயோர்க் மற்றும் ஜெனிவா ஆகிய நகரங்களில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்திலும் கென்யாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தூதரக அதிகாரியாகவும் பெரேரா பணியாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnty.html
அமைச்சர் ராஜிதவை கடுமையாக விமர்சிக்குமாறு பொதுபல சேனாவுக்கு ஆலோசனை வழங்கிய பாதுகாப்புச் செயலாளர்- ஞானசார தேரரிடம் 1 பில்லியன் கோரும் ராஜித
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 08:14.25 AM GMT ]
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கடுமையாக விமர்சிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொதுபல சேனாவுக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் தெரியவருகிறது.
ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களை புலனாய்வுப் பிரினரே ஞானசார தேரருக்கு வழங்கியுள்ளனர்.
குறிப்பாக ராஜித சேனாரத்னவிற்கு நெருக்கமான தமிழ் வர்த்தகர் பற்றிய விபரங்களை அரச புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவரே வழங்கியுள்ளார்.
இந்த வர்த்தகர் புலிகளின் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜிதவுக்கு நெருக்கமானவர் மூலமாகவே புலிகளின் தலைமைக்கு தென் பகுதியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் தகவல்களை அனுப்பியதாகவும் அவ்வாறு தகவல் அனுப்பியவர்களுள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஒருவர் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
குறித்த வர்த்தகர் கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ராஜித சேனாரத்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட பின்னர், இந்த வர்த்தகரை ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இறுதிக்கட்ட போருக்கு முன்னர் இவர் ஊடாகவே புலிகளின் தலைமைத்துவத்துடன் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய ராஜித சேனாரத்ன, அந்த வர்த்தகரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய அவரை இலங்கைக்கு வரவழைத்து சில தினங்களில் கைது செய்துள்ளனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, சில அமைச்சர்களுடன் இணைந்து பாதுகாப்புச் செயலாளரை விமர்சித்திருந்த காரணத்தினால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை அமைச்சருக்கு நெருக்கமான வர்த்தகர் மற்றும் மேலும் சில தமிழ் வர்த்தகர்கள் இணைந்து லண்டனில் கொள்வனவு செய்து அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பரிசாக வழங்கியுள்ள ஆடம்பர மாடி வீடு தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய அரச புலனாய்வு சேவையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை தொடர்பான விபரங்கள் கிடைத்த உடன் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த தயாராகி வருகிறார் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஞானசார தேரரிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் அமைச்சர் ராஜித
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனக்கு எதிராக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதால், ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்த போது இது பற்றி பேசினேன்.
ராஜித.. இவற்றுக்கு பதிலளிக்க வேண்டாம் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என ஜனாதிபதி கூறினார்.
இது ஒரு சதித்திட்டம் என்றும் தனது தேர்தல் செயற்பாடுகளுக்கு ஏற்கனவே இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பது முறை என்பதால்,  இவ்வாறு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
ஞானசார தேரர் எனக்கு எதிராக சுமத்தியுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்படும்.
வழக்கில் வெற்றி பெற்றால், கிடைக்கும் முழு பணத்தில் சட்டத்தரணிக்கான கட்டணத்தை செலுத்திய பின், மீதமாகும் தொகை தேசிய மீன்பிடி சம்மேளனத்திற்கு வழங்கப்படும்.
என்னிடம் எத்தனை வீடுகள் இருக்கின்றது என ஞானசார தேரர் கேட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு நிர்மாணித்த ஒரே வீடு என்னிடம் உள்ளது. இதனை தவிர மீனவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளேன்.
அண்மையில் வாகனம் ஒன்றை விற்று காணி ஒன்றை கொள்வனவு செய்தேன் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdntz.html
தமிழர்களின் தலைவிதியை மாற்றியமைக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: பா.அரியநேத்திரன்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 08:26.33 AM GMT ]
வெறுமனே அபிவிருத்திக்காகவும், சலுகைகளுக்காகவும் வாக்களிப்பவர்களாக இருப்பார்களேயானால் எங்களது உரிமையை வென்றெடுக்க முடியாது. தமிழர்களது எதிர்காலத்தினை சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கக் கூடிய த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தினால் மாத்திரமே இழந்த இழப்புக்களுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
தாந்தாமலை மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டவேளையிலேயே இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வீகிதாசாரம் 41 வீதமாகவே இருக்கின்றது. அந்த தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே சிந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் கிழக்கு மாகாணசபை த.தே.கூட்டமைப்பினர் வசம் வந்திருக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால் மாகாணசபைதான் தமிழ் மக்களுக்கான இறுதித்தீர்வு இல்லை என்பதனை கடந்த 65 வருடகாலமாகவே தமிழ் மக்களுக்காக வேண்டி தலைமைதாங்கிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.
ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் மாகாணசபை முறைதான் தமிழ் மக்களுக்கான இறுத் தீர்வு என்று, அவ்வாறு இல்லை என்பதனை முதலில் அவர்கள் புரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டதற்குக் காரணம் வட,கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை உறுதிப்படுத்தி, சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் பலம் என்ன என்பதனை பற்றுறுதி கொண்ட தமிழ்மக்கள் நிருபித்து காட்டியிருக்கின்றார்கள்.
அந்த பலத்தின் ஊடாகத்தான் இன்று வடகிழக்கு தமிழ்மக்களின் அபிலாசைகளும், அவலங்களும், மனித உரிமை மீறல்களும், வடகிழக்கிலே நடைபெறுகின்ற காணி அபகரிப்புக்களும், இராணுவ மயமாக்கங்களும் இன்று சர்வதேசத்தில் கூர்மைபெற்றுள்ளது. அதன் நிமிர்த்தமாகத்தான் சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வடகிழக்கு தமிழ்மக்களாகிய நாம் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து அமைச்சர் பதவிகளையும், முதலமைச்சர் பதவிகளையும் பெற்றிருப்பார்களேயானால் இன்று வடகிழக்கிலே எஞ்சியிருக்கும் தமிழர் தாயக நிலங்களும் வரைபடத்திலிருந்து இல்லாமல் போயிருக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் நினைக்கின்றார்கள் அரசியல் என்பது பாலம் கட்டுவதும், குளங்கள் திருத்துவதும், விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்வதும், பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதும், வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் நிதியை வைத்துக்கொண்டு தாங்கள் இவற்றையெல்லாம் செய்வதாக தம்பட்டம் அடிப்பதுந்தான் அரசியல் என்று நினைக்கின்றார்கள்.
அபிவிருத்தி அரசியல் என்பது யாரும் செய்யக்கூடியதொன்று அபிலாஷைகளுக்கான அரசியல் என்பது அரசிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருப்பவர்களால் செய்யமுடியாது. இன்று இலங்கை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் சவாலாக இருக்கும் எதிர்க்கட்சி என்றால் அது வேறெந்தக்கட்சியும் இல்லை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரந்தான்.
இதனை தமிழ்மக்கள் சார்ந்த புத்திஜீவிகள் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும்.
வெறுமனே கலை, கலாசார பண்பாடுகளை காப்பாற்றவேண்டும் என்று மேடைகளில் முழங்கினால் மாத்திரம் போதாது. அந்த கலை பண்பாடுகளை பிரதிபலிக்கும் இனத்தின் நிலத்தை தக்க வைக்கக்கூடிய அரசியல் பலமாக இருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பை பலப்படுத்த தமிழர்களாகிய புத்திஜீவிகள் த.தே.கூட்டமைப்பிற்கு வழிகாட்டிகளாக மாறவேண்டும் இதுதான் இன்றைய அரசியல் தேவை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt0.html
இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு!
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 08:32.31 AM GMT ]
இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ''இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதும், கொடூரமான முறையில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோவா கடற்படை தளத்தில் உள்ள இரண்டு போர் கப்பல்களை மத்திய அரசு, இலங்கைக்கு வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
எனவே இந்த கப்பல்களை இலங்கைக்கு விற்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதில் மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt1.html

Geen opmerkingen:

Een reactie posten