தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

மருதானையில் கூட்டத்தை குழப்பிய பிக்குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வாசுதேவ!

பிரதமர் பதவியை விட்டுச் செல்ல தயாராகவே இருக்கின்றேன்: டி.எம். ஜயரத்ன
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 06:35.32 AM GMT ]
எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் பிரதமர் பதவியையும், புத்தசாசன அமைச்சர் பதவியையும் கைவிட்டுச் செல்ல தான் தயாராக இருப்பதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், கடந்த காலங்களில் தன்னை பற்றி வெளியாகிய செய்திகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடம்பில் கொடி ஒன்றை போர்த்தி கொள்வது போலவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர் பதவியையும், புத்தசாசன அமைச்சர் பதவியையும் விட்டுச் செல்ல தயாராகவே இருக்கின்றேன்.
பிரதமர் பதவிக்கோ,  புத்தசாசன அமைச்சர் பதவிக்கோ வேறு ஒருவரை நியமிப்பது குறித்து என்னிடம் எந்த எதிர்ப்புமில்லை.
எனக்கு காது கேட்பத்தில் சிறிது குறைப்பாடு இருந்தாலும் முற்றாக காது செவிடாகவில்லை.
எனக்கு பார்வை நான்றாக தெரிவதுடன் எந்த வேலையாக இருந்தாலும் அதனை தனியே செய்து கொள்ளும் இயலுமையும் என்னிடம் இருக்கின்றது.
என் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் கொண்டுள்ள சிலர், எனது குறைபாடுகள் பற்றி பேசுகின்றனர்.
ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிரதமர் ஒருவர் சக்கர நாற்காலில் நாடாளுமன்றத்திற்கு சென்றதாகவும் அது குறித்து அந்நாட்டில் எந்த ஊடகமும் செய்திகளை வெளியிடவில்லை எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns4.html
அரசாங்கத்தை மாற்றும் தேவை எமக்கில்லை: விமல் வீரவன்ஸ
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 06:56.23 AM GMT ]
தேசிய சுதந்திர முன்னணிக்கு அரசாங்கத்தை மாற்றும் தேவையில்லை என்றாலும் அரசாங்கத்திற்கு எதிராக சமூகத்தில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை திருத்தி அரசை முன்னோக்கி கொண்டு செல்லும் தேவை இருந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பல யோசனைகள் செயற்படுத்தப்படும்.
அடுத்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்துள்ள யோசனைகள் உள்ளடக்கப்படலாம்.
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது, தேசிய உற்பத்திகளை அதிகரிப்பது, தேசிய கைத்தொழிலை ஊக்குவிப்பது உட்பட மக்களுக்கு வெற்றிகளை ஈட்டி தரும் 26 யோசனைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
நிலைமைகள் மாறும் போது அரசியல் விடயங்களும் மாறும். நாங்கள் இருளுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும் விளக்கை மாத்திரமே நாம் ஏற்றினோம். இதனடிப்படையில் எதிர்காலத்தில் மக்களுக்கு பல வெற்றிகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns5.html

மருதானையில் கூட்டத்தை குழப்பிய பிக்குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வாசுதேவ
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 07:12.58 AM GMT ]
அமைப்புகள் கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்தும் இடத்திற்குள் பலவந்தமாக எவர் நுழைய முயற்சித்தாலும் அது சட்டவிரோதமானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருதானையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பிக்குமார் சென்று தடையை ஏற்படுத்தியமை பாரதூரமான குற்றமாகும். பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களில் பொலிஸார் உரிய முறையில் செயற்படாதது குறித்து ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தடையேற்படுத்துவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு பதிலாக பொலிஸார், இடையூறுக்கு உள்ளானவர்களின் செயற்பாடுகளை நிறுத்த முயற்சித்து வருகின்றர்.
பொலிஸார் தமது பொறுப்புக்கு மாறாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பது தவறானதல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் அவர்கள் செயற்படும் போது நாட்டில் நடப்பவை மற்றும் நாட்டில் காணப்படும் தன்மைகளை அறிந்து கொள்வது அவசியமானது.
எனினும் அவர்கள் தமது வரையறையை மீறி சமூக அமைப்புகளின் பங்காளர்களாக மாறுவார்கள் எனில், அது இந்த நாட்டின் பிரச்சினைகளில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாக கருதப்பட வேண்டும்.
இலங்கையின் அரசியல் செயற்பாடுகள் அல்லது சமூக தலையீடுகளுக்குள் அவர்கள் இருக்கக் கூடாது எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns6.html

Geen opmerkingen:

Een reactie posten