தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

சண்டைக்கு ஆயத்தமாக வாள்களுடன் இருந்த 9 ரவுடிகள் சுன்னாகத்தில் கைது !

அச்செழுப் பகுதியில் பொலிசார் ஒருவரின் வீட்டில் திருட முற்பட்ட கில்லாடிக் கள்ளன் !

[ Aug 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2245 ]
யாழ். அச்செழுப் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று வியாழக்கிழமை (07) பகல் திருடுவதற்கு முயற்சித்த, பொம்மவெளிப் பகுதியைச் சேர்ந்த 24 வயது சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறுகையில்,
மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவியும் வெளியிடத்துக்குச் சென்றிருந்த வேளை, அவர்களது மகள் வீட்டில் தனியே இருந்துள்ளார்.இந்நிலையில், மேற்படி சந்தேகநபர் வீட்டின் கூரை ஓடு வழியாக உள்நுழைய முயற்சித்த வேளையில், தடுமாறிக் கீழே வீழ்ந்துள்ளார். இதனையடுத்து, வீட்டிலிருந்த மகள் கூக்குரலிடவே அங்கு கூடிய பொதுமக்கள், சந்தேகநபரைப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
http://www.athirvu.com/newsdetail/708.html

சண்டைக்கு ஆயத்தமாக வாள்களுடன் இருந்த 9 ரவுடிகள் சுன்னாகத்தில் கைது !

[ Aug 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4440 ]
வாள்களுடன் சண்டை ஒன்றுக்கு ஆயத்தமான 20 வயதுக்கு உட்பட்ட மாணவா்கள் உள்ளடங்கிய ரவுடிகளை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனா். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக வாள்களையும் வேறு ஆயுதங்களையும் வைத்திருந்த 9 பேர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பொலிஸ் குழுக்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.
வன்முறைகளில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வாள், கத்தி உட்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தவர்களே கைதாகியிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. வாள், கத்தி என்பவற்றைச் செய்யும் நபர் ஒருவர் முன்னதாக கைதானார் எனவும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பெருமளவானவர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அவர்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிவரும் மாணவர்கள் பலரும் இடம்பெற்றிருக்கின்றனர் எனவும் பரீட்சையைக் கருத்தில் கொண்டு அவர்களை பொலிஸார் தற்போது கைது செய்யாது தவிர்த்திருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது.
http://www.athirvu.com/newsdetail/709.html

Geen opmerkingen:

Een reactie posten