தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

மோடிக்கு ஜெயலலிதா தொடர்ந்தும் காதல் கடிதம்: இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் கிண்டல்

நட்வர்சிங்கின் குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபிக்கப்படும்: சோனியா காந்தி
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 03:17.10 AM GMT ]
தமது சுயசரிதை வெளியாகும் போது நட்வர்சிங்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமரும் தமது கணவருமான ராஜீவ் காந்தி, அமைச்சரவையின் அனுமதியின்றியே இந்திய அமைதிப் படைகளை இலங்கைக்கு அனுப்பினார்.
2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் அவரது மகன் ராகுல் காந்தியே தடுத்தார்.
சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்கு ஏற்பட்டதுபோல துயரமான முடிவு தனது அம்மாவுக்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம்தான் ராகுலின் எதிர்ப்புக்கு காரணமாக இருந்தது என்று நட்வர்சிங் குறிப்பிட்டிருந்தார்.
சோனியா எப்போதும் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்பட்டார் எனவும் நட்வர்சிங் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சிக்கு செவ்வியளித்து சோனியா தாம் தமது சுயசரிதையை எழுதும் போது உண்மை யாவும் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்
தமது மாமியார் குண்டுகள் துளைக்கப்பட்டு இறந்ததையும், தமது கணவர் குண்டுவெடிப்பில் இறந்ததையும் பார்த்திருப்பதாக கூறியுள்ள அவர், நட்வர்சிங் கருத்துக்கள் தம்மை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2004- 2005 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
எனினும் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வோல்கர் அறிக்கை வெளியான பிறகு, நட்வர் சிங் அவரது பதவியை துறக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நொட் இனஃப் என்ற சுயசரிதை நூல் வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கிறது. இதற்கு மத்தியில் நட்வர்சிங் வெளியிட்டுள்ள கருத்துக்கள் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgtz.html

மோடிக்கு ஜெயலலிதா தொடர்ந்தும் காதல் கடிதம்: இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் கிண்டல்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 05:48.48 AM GMT ]
“ஜெயலலிதாவின் காதல் கடிதங்கள் நரேந்திர மோடிக்கு எந்த அளவிற்கு அர்த்தமுள்ளதாய் இருக்கும்” என  இலங்கை பாதுகாப்பு துறையின் இணையத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி எழுதப்பட்டுள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதங்கள் குறித்து இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,
"சர்வதேச எல்லையை கடந்து வந்து இலங்கை எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட படகுகள் மற்றும் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததால் தமிழக கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லை தாண்டி வந்து அடுத்த நாட்டின் மீன்களை கொள்ளையடித்துச் செல்வது எந்த வகையில் நியாயமானதாகும்.
தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள் வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நலனை மட்டுமே கருதும் தமிழக மீனவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் நலனை நினைத்து பார்ப்பதில்லை.
இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
ஒருவேளை அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ? 1876ம் ஆண்டிலிருந்தே கச்சதீவு இலங்கைக்கு தான் சொந்தம். இதை ஆங்கிலேய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
இருப்பினும், 1924ம் ஆண்டு முதல் கச்சதீவு தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி தமிழக அரசு அதனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார்.
ஆனால் ஜெயலலிதாவின் தாளங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே தமது அரசு விரும்புவதாக மோடி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten