[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 02:57.29 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதுவரை மீள அழைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வருடம் மார்ச்சில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அமெரிக்க யோசனையின்போது இந்தியத் தூதுவர் திலிப் சின்ஹா மேற்கொண்ட நிலைப்பாட்டை ஆட்சேபித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவர், இந்திய நிலைப்பாட்டுக்கு எதிரான வகையிலேயே செயற்பட்டதாக மனுதாரரான பசுமை தாயகம் நிதியத்தின் கே. பாலு என்பவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டு வந்த 10 யோசனைகளுக்கு ஆதரவாக வாக்களித்த இந்திய பிரதிநிதி முழுமை வாக்களிப்பின்போது அதில் இருந்து விலகினார்.
இது முன்னுக்கு பின் முரணான விடயம் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் மனுதாரர் சின்ஹாவுக்கு எதிரான மனுவில் மத்திய அரசாங்கம் அவருக்கு எதிராக சட்டரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சாட்சியங்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணம் காட்டி நீதிபதி அதனை நிராகரித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgty.html
மனித கடத்தல்காரர்களுக்கு மாற்றுவழியாக தென்னிந்தியா அமைந்து விடக்கூடாது: அவுஸ்திரேலியா
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 03:40.04 AM GMT ]
இந்தியாவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் சக்லிங் இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மனித கடத்தல் சட்டங்களை கடுமையாக்கிய பின்னர் இலங்கையில் இருந்து குறைந்தளவான படகுகளை அவுஸ்திரேலியாவுக்கு சட்டரீதியற்ற வகையில் சென்றுள்ளன.
இந்தநிலையிலேயே மாற்றீடாக தென்னிந்தியாவை கடத்தல்காரர்கள் பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 157 அகதிகளில் நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருந்த அகதிகளை மீண்டும் பொறுப்பேற்க இந்தியா இணங்கியுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgt0.html
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யும் கோரிக்கை கைவிடப்படவில்லை: வாசுதேவ நாணயக்கார
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 05:16.44 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நிலைப்பாடாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைத் திட்டங்களை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்வைத்துள்ளார்.
இந்த யோசனைத் திட்டங்களை எங்களது கட்சியின் கொள்கைக்குள் உள்வாக்கிக் கொள்ளத் தயார்.
இந்த இரண்டு யோசனைத் திட்டங்களையும் அமுல்படுத்தக் கூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு மட்டுமே காணப்படுகின்றது.
வேறும் மாற்று வழிகளின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியாது.
கூட்டமைப்பு ஆட்சியில் கூட இந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது சவாலான விடயமாகும்.
பொதுவான ஓர் திட்டம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புகின்றோம்.
அத்துரலிய ரத்ன தேரருடன் பேச்சுவார்த்தை நடத்த கிட்டியமை மகிழ்ச்சி அளிக்கின்றது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும், அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது வாசுதேவ இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgt3.html
வடக்கு கிழக்கில் அரசு மீண்டும் மரண பயத்தை ஏற்படுத்துகிறது: சிவில் சமூக கூட்டமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 05:30.40 AM GMT ]
கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊகவியலாளர் மாநாட்டிலேயே அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
இதில் கருத்துத் தெரிவித்த அனைத்து வகையான மாறுபாடு மற்றும் இனவாதத்திற்கான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ,
வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர்.
தமது உரிமைகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தமது உரிமைகளுக்கப் போராடும் போது அரசு பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தி அடக்குகின்றது.
இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு கொடுத்த வாக்கினை மீறுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கின் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இன்று அவற்றுக்கு முரண்பட்ட வகையில் அரசே செயற்பட ஆரம்பித்து விட்டது.
நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்படுகின்றபோதும், மனித உரிமைகளுக்கு எதிராக அரசு செயற்படுகின்ற சந்தர்ப்பத்திலும் நியாயம் கேட்டுப் போராட நாங்கள் தான் உள்ளோம்.
சிவில் அமைப்புகளுக்கு பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், நாட்டின் உண்மை நிலைமையினை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் அனைத்து உரிமைகளும் உண்டு.
அதையே நாம் செய்கின்றோம். அதேபோல் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே நாம் செயற்படுகின்றோம். இந்த நாட்டின் அரசியல் யாப்பில் சிவில் சமூகம் செயற்படக்கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்தும் சிவில் சமூகத்தின் உரிமைகளுக்காக நாம் போராடுவோம்" என நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிடுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgt4.html
Geen opmerkingen:
Een reactie posten