தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

ராஜபக்சவின் மகனுடன் லைக்கா நடைபயணம்!!!

“லைகா தப்பான நிறுவனம்” இயக்குனர் முருகதாஸ் ஆவேசம்

குறித்த சந்திப்பில் மாணவர்கள் சார்பாக பிரபா, மாறன், கவுதம், விக்கி ஆகியோர் கலந்துகொண்டதோடு இயக்குனரிடம் பல கேள்விகளையும் கேட்டிருந்தனர்: அச்சந்திப்பு தொடர்பா மாணவர்கள் எழுப்பிய கேள்விகளும் முருகதாசின் பதில்களையும் இங்கே தருகிறோம்.
முருகதாஸ் : சார், நான் மற்ற இயக்குனர்கள் போல் வெறும் பணத்துக்காக படம் பண்ணுபவன் இல்லை, ஒவ்வொரு படத்திலும் ஒரு சமுதாய பிரச்னையை (issue) வைத்து தான் படம் எடுப்பேன். இந்த படத்திலும் ஒரு மெசேஜ் வெச்சிஇருக்கேன், தமிழன் என்ற உணர்வு எனக்கும் இருக்ககுறதுனால தான் சார் ஏழாம் அறிவு படம் எடுத்தேன். தணிக்கை துறை கட்டுப்பாடுகளையும் மீறி வசனங்களும் பாடல் வரிகளையும் வைத்தேன்.
தமிழர்களை இனப்படுகொலை செஞ்ச ராஜபக்சே மாதிரி ஒருத்தன் காசுல சாப்புட்ரத விட நா செத்துறலாம் சார். நடந்தது என்னனா, எனக்கு லைகா யாருனே தெரியாது , இப்போ வரைக்கும் லைகா சம்பந்தமான யாரையும் நான் பாத்ததே இல்லை. ஐங்கரன் நிறுவனத்திற்கு தான் நான் படத்த ஒப்பந்தம் செஞ்சேன். எனக்கு பணத்துக்கான காசோலை வரும்போது தான் பார்த்தன் அதுல லைகா ன்னு இருந்துச்சி, உடனே ஐங்கரன் நிறுவன நிர்வாகி கருணாவ சந்தித்து பேசினேன். ஐங்கரன்-லைகா எல்லாம் ஒன்னு தான் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னாரு. சரி பணம் வந்தா போதும் எந்த நிறுவனமா இருந்தா என்னன்னு அப்போ விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சனை எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சி.
லைகா ராஜபக்சே சொந்த காரன்னு தெரிய வந்த உடனே நான் விஜய் சார கூப்பிட்டு தயாரிப்பாளர மாத்தனும்னு சொன்னேன், பாவம் அவரும் ரொம்ப பயந்து போய் இருந்தாரு , இலங்கை பிரச்சனைல நம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படி ஒன்னும் லைகா’வுக்கு தான் படம் பண்ணனும்ன்னு ஒன்னும் இல்ல தயாரிப்பு நிருவனத்த மாத்துன்னு விஜயும் சொல்லிட்டாரு தயரிப்பாளர மாத்தலாம்ன்னு இருந்த நேரத்துல தான் நல்ல வேளை என்னோட கத்தி படத்திற்கான மேலாளரும் , லைகா நிறுவனத்தின் மேலாளரும் என்னை சமாதானம் படுத்துனாங்க ,இந்த லைகா மீதான குற்ற சாட்டுகள் அனைத்தும் சாட்சியமற்ற பொய் குற்றசாட்டுகள், இது தொழில் போட்டியால் கிளப்பிவிட பட்ட அவதூறுகள் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னப்ப கூட நா முழுசா நம்பள, அப்புறம் அவுங்க என்ன சீமான் அண்ணனிடமும், நெடுமாறன் அய்யா விடமும் பேச வைத்தார்கள். அவர்கள் இருவரும் சொன்ன பிறகு தான் லைகா தப்பான நிறுவனம் இல்லைன்னு எனக்கு நம்பிக்கையே வந்தது. என்றார் முருகதாஸ்.
மாறன் : சீமான் அண்ணனும் , நெடுமாறன் ஐயாவும் உங்களிடம் என்ன சொன்னார்கள் ?
முருகதாஸ்: சீமான் அண்ணன் தலைவரை (தலைவர்-பிரபாகரன்) சந்தித்த பொழுது தலைவரே சொன்னாராம் , புள்ளையார் படம் போட்ட கம்பனிக்கு (ஐங்கரன் கம்பனிக்கு) படம் பண்ணு அவன் நம்ப ஆளுன்னு, அதனால இதுவும் நம்ப கம்பெனி மாதிரி தான் தாராளமா படம் பண்ணு, வடநாட்டு காரனுகேல்லாம் படம் பண்றீங்க நம்ப தமிழனுக்கு படம் பண்ணா என்ன தப்புன்னு சீமான் அண்ணன் சொன்னாரு.
நெடுமாறன் ஐயாவும் லைகா க்கு படம் பண்ணு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு தான் சொன்னாரு என்றார் முருகதாஸ்
முருகதாஸ்: சார் இப்போ வரைக்கும் நான் பண்றது இனத்துக்கு எதிரான தப்பு இல்லன்னு என்ன நானே சமாதானம் பண்ணிட்டு தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க மட்டும் லைகா க்கு எதிரா வலுவான ஆதாரத்தோட என் கிட்ட வந்து லைகா தப்புன்னு சொல்லுங்க அடுத்த நிமிஷம் நான் உங்களோட சேர்ந்துகிட்டு லைகா க்கு எதிரா போராட்டம் பண்றேன்.
பிரபா: சரி சார் லைகா க்கு எதிரான வலுவான ஆதாரங்களோட உங்களை விரைவில் வந்து சந்திக்கிறோம்.
கிளம்புறதுக்கு முன்னாடி உங்க கிட்ட தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேக்கணும்.
முருகதாஸ்: கேளுங்க சார்.
பிரபா : ஏழாம் அறிவு படத்துல அந்த காண்பறன்ஸ் (conference scene) காட்சியில நம்ம நாட்ட முன்னேற்ற விடாம தடுத்து வெச்சிருக்கறது ‘Corruption, Recommendation, Reservation’ ன்னு ஒரு dialogue ஸ்ருதி ஹாசன் பேசுவாங்க. அதுல Reservation ன்ற வார்த்தை எப்படி சார் வந்துச்சி??
முருகதாஸ்: அதுல ‘Corruption, Recommendation’ மட்டும் தான் நான் சொன்னது , Reservation ஸ்ருதி ஹாசனே சேர்த்துகிட்டாங்க.. நானும் சரி நல்லா Rhyming அஹ இருக்கேன்னு விட்டுட்டேன்.
அப்போ அது எனக்கு தப்புனே தெரில அப்புறம் என் நண்பன் ஒருத்தன் வழக்கறிஞரா இருக்கான் , அவன் எனக்கு தொலைபேசி பண்ணி என்ன திட்டு திட்டுன்னு திட்டுனான், அப்புறம் தான் நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிது. உடனே அந்த வார்த்தையையும் நீக்கிட்டேன்.
பிரபா: சரி இப்போ சொல்லுங்க சார், இடஒதுக்கீட்ட பத்தி இப்போ உங்க கருத்து என்ன ?
முருகதாஸ்: இடஒதுக்கீடு இருக்கலாம் ஆனா உயிர் காக்குற படிப்பு ,மருத்துவ படிப்புல லா இட ஒதுக்கீடு இருக்க கூடாது சார்.
இந்த இடத்தில் முருகதாஸ் (Merit) தகுதி திறமையை பற்றி பேசுகிறார், முருகதாஸ் அவர்களுக்கு புரியும்படி 20 நிமிடங்கள் இடஒதுக்கீட்டை பற்றி உதாரணங்களோடு விளக்கிய பிறகு ,
முருகதாஸ்:- இப்போ தான் எனக்கு புரியுது. இந்த மாதிரி யாராவது விளக்கி சொன்னா கேட்டுப்பேன், என்னோட வட்டம் ரொம்ப சின்னது, இந்த மாதிரி சொல்றதுக்கு தான் ஆள் இல்ல. இதே மாதிரி லைகா’வ பத்தியும் முழு விவரம் ஆதரத்தோட கொண்டுவாங்க நான் உடனே தயாரிப்பாளர மாத்தி விடுகிறேன்.


பிரபா: இன்னும் மூன்று நாட்களில் லைகா க்கு எதிரான ஆதாரத்தோடு உங்களை வந்து சந்திக்கிறோம்.Murugathasvijay
http://www.jvpnews.com/srilanka/78835.html

ராஜபக்சவின் மகனுடன் லைக்கா நடைபயணம்

இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டுவதற்காக இலங்கை அரசுடன் லைக்கா ஏற்படுத்திக்கொண்ட ஏமாற்று வியாபார வியாபார நிறுவனமான ஸ்கை நெற்வேர்க் நிறுவனத்தில் கூட கங்லே தான் நிர்வாக இயக்குனர். லைக்கா பரிவாரங்களுடன் சதா வலம்வந்த கங்லே காணாமல் போனதும் ரூட்லி-Chris Tooley- இன் ரூட் கிளியராகி அவர் அதி உச்ச நிலையை அடைந்துள்ளார்.
தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் விஜய் ரீவி என்ற தமிழ் மற்றும் ஆங்கிலக் கொலைச் சாதனத்தைப் பார்த்து ஆட்கொள்ளப்பட்டதால் சோளனின் தமிழில் ஆங்கிலம் புகுந்து விளையாடுவதற்கு மன்னிக்கவும்.
கிரிஸ் ரூட்லியும் பணம் சுருட்டுவதற்காக ராஜபக்ச குடும்பம் ஆரம்பித்த ஸ்கை நெற்வேர்க்கின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து ‘பெருமைகள்’ பெற்றவர். நாமல் ராஜபக்ச என்ற கேவலமான ரவுடியுடன் இணைந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு ஆங்கிலம் கூறும் நல்லுலகத்திற்குப் ‘பெருமைகள்’ சேர்த்தவரும் இந்த ரூட்லியே! லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடந்துதிரிய ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி வகித்த் போது அந்த நிறுவனம் சார்பாகவே நடைபோட்டிருக்கிறார் ரூட்லி. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்த இந்த நடைப்ப்யணத்திற்கு பீபை பிக் வோக் என்று வேறு பேயர் சூட்டி சோளனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட்டார்கள்.
டேவிட் கமரனின் கட்சிக்கு மில்லியன்களை வாரி இறைத்து வரிகொடாமல் வயிறுவளர்த்த லைக்கா, தனது பணத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டி ராஜபக்ச குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வரும் மர்மத்தை செல்லச் சன்னிதி முருகன் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
நாமல் ராஜபக்சவுடன் நடந்து வந்து அலுவலகத்தில் குந்திய ரூட்லிக்கு வழங்கப்பட்ட பதவி தான் தலைமை நிர்வாக இயக்குனர்.
சேவை செய்கிறோம் என்ற தலைப்பில் எலும்புத் துண்டுகளை அப்பாவி மக்களுக்கு எறிந்துவிட்டு முழு மாட்டையும் சுருட்டிக்கொள்ளும் பல்தேசிய நிறுவனங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு லைக்காவின் சேவையின் தேவையைப் பற்றியும் தெரிந்திருக்கும். மல்ட்டி நாஷனல் கோப்ரட் வியாபாரிகள் என்றால் இப்படித்தான் என்று அமைதியாக இருக்கலாம். இங்கு பிரச்சனை அதுவல்ல, சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளே நுளைந்து ராஜபக்ச கிரிமினல் குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போடக் கோருவதுதான்.
இந்த சிதைப்பின் அடுத்த கட்டம்தான் கத்திக்குத்து. ஏற்கனவே அழிந்து போயிருக்கும் தமிழர் பண்பாட்டின் முன்னேறிய பகுதிகளைக் கூட அழிக்கும் தென்னிந்திய சினிமா கையப்பிடித்து லைக்கா அழைத்து வருகிறது வியப்பிற்கு உரியதல்ல.
இதெல்லாம் என்னப்பா என்று கேட்டவர்களுக்கு லைக்காவின் சினிமா மாமாவான ஐங்கரன் நிறுவனத்தின் கருணாகரமூர்த்தி விளக்கம் வேறு அளித்துள்ளார்.லைக்கா குழுமம் இலங்கை விமானப்படை விமானத்தில் உலா வந்ததை மட்டும் ‘தெளிவுபடுத்தியுள்ளார்’. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் இலங்கை சென்று அவர் படித்த முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம் என்கிறார். அதுவும் படு பிஸியாகிவிட்டதால் இலங்கை அரச ஹெலிகொப்டரில் பிரயாணம் செய்தோம் என்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்கிறோம் என்பதெல்லாம் வந்தந்தி என்கிறார். அக்கு வேறு, கறள் பிடித்த ஆணி வேறாக புட்டுப்புட்டு வைத்த பின்னரும் கருணாகர மூர்த்தி சென்னையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கத்தி படம் வந்தால் கப்சிப் ஆகிவிடுங்கள் என்று பழ.நெடுமாறனையும், சீமானையும் கேட்பதற்காக இயக்குனர் முருகதாசும், ஐங்கரன் மாமாவும் மேலுள்ள தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளனர். நடந்த பேச்சுக்களில் நீங்கள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை என லைக்காவிற்குக் கூறப்பட்டுள்ளதாக ஐங்கரன் கருணாகரமூர்த்தி செவ்வாய் மலர்ந்தருளியுள்ளார்.
ஹெலிக்கொப்டரில் போய் இறங்கியது மட்டுமா பிரச்சனை? லைக்கா இலங்கை அரசாங்கத்துடன் எப்படியெல்லாம் குத்தாட்டம் போடுகிறது என்று பல தடவை கூறப்பட்டுள்ளது. ரூட்லி விவகாரம் ‘பில் இன் த பிளாங்ஸ்’ மட்டும் தான். இனக்கொலையாளி ராஜபக்ச பிரித்தானிய எஜமானர்களால் கொமல் வெல்த் தலைவராக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு லைக்கா பணம் வழங்கியதிலிருந்து தானே பிரச்சனையே தொடங்கியது.
கத்தி வருகிறது என்று கருணாகரமூர்த்தி பேஸ் புக்கிற்கு வெளியால் ஆட்களைப் பிடித்து லைக் போட முயற்சிக்கிறார்.லைக்கிற்கு லைக், பேஸ்புக் கலாச்சாரப் பண்பு என்பதால் நெடுமாறனும்?!!! சீமானும்??!!! மறு-லைக் போட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

ஈழப் போராட்டம் லைக்காவும் இன்னோரன்ன வியாபாரிகளும் வழங்கும் பணத்தில் வீறு நடை போடுகிறது.LaikaLaika-01Laika-02
http://www.jvpnews.com/srilanka/78843.html

Geen opmerkingen:

Een reactie posten