EPDP கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்!
ஈபிடிபியின் ஏற்பாட்டில் சமுர்த்தி சங்கத்தினருடனான கூட்டம் மீசாலையில் நடைபெற்றிருந்தது. காரணமேதும் தெரிவிக்காது அழைக்கப்பட்ட மக்கள் உதவிகளை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்கள் பற்றி வருகை தந்திருந்தவர்கள் கருத்துக்களை முன்வைக்க முற்பட மக்கள் முரண்பட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையில் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபியும் காரணமென வாதிட்ட மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மரணங்கள் பற்றி பேச ஈபிடிபிக்குத் தகுதியில்லையென மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மக்கள் வெளியேறி சென்றிருந்த நிலையில் தமது ஆதரவாளர்களை வைத்து அக்கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/78764.html
சுஸ்மாவிடம் மன்டியிட்ட ஜி.எல்.பீரிஸ்
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கட்டுரையால், இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நான் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேசினேன். தவறுகள் நடந்திருக்கிறது என்றும், அதனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். இது உறவுகளை முறித்து விடாது. நாம் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.lankasri.com/ta/index.html
EPDP யோகேஸ்வரியின் அட்டகாசத்திற்கு மூடுவிழா
யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் எட்டாம் திகதி யாழ் மாநகர சபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழமக்கள் ஐனநாயககக் கட்சி தலைமையிலான முதல்வருடன் ஆட்சி அமைக்கப்பட்டது.
மாநகர சபையின் ஆட்சிக் காலம் நான்கு வருடங்கள் ஆகும். இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த ஆட்சி கடந்த வருடம் ஓகஸ்ட் எட்டாம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒரு வருட ஆட்சி நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீடிக்கப்பட்ட ஒரு வருட ஆட்சிக் காலமும் நிறைவடைய உள்ளது. அதாவது இந்த சபைக்குரிய தேர்தல் நiபெற்று நாளையுடன் நீடிக்கப்பட்ட ஒரு வருடம் உள்ளடங்கலாக ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ளது.
அதே வேளையில் வர்த்தகமாணி அறிவித்தலின் பிரகாரம் இம் மாதம் 31 ஆம் தகதி வரை சபை கலைக்கப்படாதென்றும் அது வரையில் தமது ஆட்சியே நடைபெறுமென்றும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி முடிவடைந்ததன் பின்னர் இதனைத் தொடர்ந்து வர்த்தக மாணி அறிவித்தல் வரும் வரையில் ஆனையாளரின் கீழேயே நிர்வாகம் செயற்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் இதன்;போது ஆட்யாளர்களின் விருப்பத்திற்கமைய தமக்கு வேண்டியவர்களை நியமித்து விசேட ஆணையாளரின் கீழ் மாநகர சபையை செயற்படுத்த முடியுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது
http://www.jvpnews.com/srilanka/78772.html
எதிர்கால இலங்கையின் நிலைமை கவலைக்கிடம் – ஹரிகரன் எச்சரிக்கை
புலனாய்வு சம்பந்தமான அவரது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான உறவு தற்போது மிகுந்த வளர்ச்சியுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் முதல் தடவையாக சீனாவின் ஜானதிபதி இந்த வருடமளவில் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயம் இடம்பெறும் பட்சத்தில், சீனாவை நம்பி சிறிலங்காவால் அமைக்கப்பட்டுள்ள வெளிவிவகார கொள்கை வெளிச்சத்துக்கு வரும். ஆனால் சீனாவைப் பொறுத்தவரையில் சிறிலங்காவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவம் அதிகமானதாக காணப்படுகிறது.
காரணம் சிறிலங்காவின் சந்தையை காட்டிலும், இந்தியாவின் சந்தை மிகப்பெரியது. இதற்கிடையில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடியும், சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கின்றமை வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா சிறிலங்காவின் பக்கம் அதிகமாக சாய்ந்து, இந்தியாவை பகைத்துக் கொள்ளவோ, அல்லது இந்தியாவை சீண்டவோ விரும்பாது என்று கேர்ணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78775.html
Geen opmerkingen:
Een reactie posten