தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

புலிப்பார்வை, கத்தி திரையிடப்பட்டால் திரைகள் கிழியும் மாணவர்கள் எச்சரிக்கை!

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படம் ஆகிய இரண்டும் தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் படங்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஆகிய நாம் பார்க்கிறோம். எங்கள் பிணத்தின் மீது உட்கார்ந்து பணம் சம்பாதிக்கும் வேலையாக நாம் இதனைப் பார்க்கிறோம்.

கத்தி திரைப்படத்தை நாம் எதிர்க்கிறோம் ஏனென்றால், முற்று முழுதாக இலங்கையின் உடையது என்பதற்கான ஆதாரங்கள் உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். இங்கே சம்பாதிக்கும் பணத்தை அங்கே சிங்களவனுக்குக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு தமிழினத்தை அழித்தவர்கள் அழிய வேண்டும்.
அதேமாதிரி புலிப்பார்வை திரைப்படத்தில் எங்கள் தம்பி பாலச்சந்திரனுக்கு சீருடை அணிவித்து ஒரு குழந்தையை போராளியாகக் காட்டுவது, மிக மிகக் கண்டிக்கபட வேண்டிய செயல். இது திசை திருப்பும் வேலையாகவே நாம் பார்க்கிறோம்.
இவ்விரு திரைப்படங்களும் தமிழகத்திலும், உலக அரங்கு எங்கினும் திரையிடக்கூடாது. இதை உலகத் தமிழ் மக்களும் பதிவு செய்வார்கள். தமிழக மாணவர்கள் நாங்களும் இதை திரையிட விடமாட்டோம். வெளியிடப்பட்டால், அந்த வெள்ளைத் திரைகள் கிழிக்கப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறோம்.
அவர்கள் தயார் நிலையில் இருகிறார்கள். படம் என்றைக்கு வந்தாலும் திரைகள் கிழிக்கப்படும் என்பதை நாங்கள் இங்கே பதிவு செய்கிறோம்.

Geen opmerkingen:

Een reactie posten