தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

அகதிகள் சாசனம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது: மொரிசன்!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச நிபுணர்கள் மன்னார் அமர்வை கண்காணிக்கமாட்டார்கள்!- பரணகம
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:41.52 AM GMT ]
இலங்கையில் காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான சர்வதேச நிபுணர்கள் மன்னாரில் நடைபெறும் அமர்வுகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அமர்வு எதிர்வரும் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மன்னாரில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வுக்காக சுமார் 300 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. எனினும் அமர்வின் போது சுமார் 200 முறைப்பாடுகளையே விசாரணை செய்ய முடியும் என்று பரணகம குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமது ஆணைக்குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களான சேர் டெஸ்டன் டி சில்வா, சேர் ஜியோப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் தமது அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வரவுள்ளனர்.
அவர்கள் தமது ஆணைக்குழு நடத்தும் அமர்வுகளை கண்காணிக்கவுள்ளனர். எனினும் மன்னார் அமர்வுக்கு அவர்களால் பங்கேற்க முடியாதிருக்கும்.
இருப்பினும் எதிர்க்காலத்தில் நடைபெறவுள்ள அமர்வுகளை அவர்கள் கண்காணிப்பார்கள் என்றும் பரணகம குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx7.html
இந்தியாவின் அழுத்தம்! இலங்கையிலிருந்து வெளியேறினார் பாக். அலுவலர்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:54.43 AM GMT ]
இந்தியாவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கடமையாற்றிய வீசா அலுவலர் பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தூதரகங்களை வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டார.
இந்தநிலையில் இவர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் வீசா அலுவலர் அமிர் சுபைர் சித்தீக்கின் வழிகாட்டலியே செயற்பட்டதாக இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த அலுவலர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு பிரிவுக்காக பணியாற்றுகிறார் என்றும் இந்தியா குற்றம் சுமத்தியது.
இறுதியாக 20 அம்சங்களை கோடிட்டு அது தொடர்பில் விபரங்களை தருமாறு இலங்கையிடம்  இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் தென்னிந்தியாவில் கைது செய்யப்பட்டவர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இந்தியாவுக்கு அடிக்கடி வந்துசென்றமை குறித்த தகவல்களை இந்தியா கோரியுள்ளது.
இந்தநிலையிலேயே சித்தீக், பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceoy.html
அகதிகள் சாசனம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது: மொரிசன்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 04:44.24 AM GMT ]
அகதிகள் சாசனத்தை பலரும் முறைகேடாக பயன்படுத்துவதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியுள்ளது அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 1951 ஆம் ஆண்டின் அகதிகள் பிரகடனத்தில் இருந்து வெளியேறி சட்டவிரோத அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த மேல்நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்ப்பார்ப்பதாக மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
த ஒஸ்ரேலியன் பத்திரிகைக்கு செவ்வியளித்துள்ள அவர் இதன் மூலமே சட்டவிரோத அகதிகளை கட்டுப்படுத்தமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏனைய நாடுகளில் இருந்து பொருளாதார ரீதியில் பலரும் அகதிகளாக அவுஸ்ரேலியாவுக்கு வருவதையும் தடுக்க முடியும் என்று மொரிசன் கூறியுள்ளார்.
157 இலங்கை அகதிகள் மாற்று உடை மாற்றுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை, அத்துடன் அரசியல் ரீதியாக அவுஸ்ரேலியா இந்தியாவுடன் உடன்படிக்கை செய்துக்கொண்டது போன்ற விடயங்களை அகதிகளின் சட்டத்தரணிகள் கண்டித்த நிலையிலேயே மொரிசனின் கருத்து வெளியாகியுள்ளது.
அகதிகள் சாசனத்தை கடந்த 50 வருடங்களாக சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளமையால் அதில் இருந்து உடனடியாக அவுஸ்ரேலியாவால் வெளியேற முடியாத நிலை இருப்பதாகவும் மொரிசன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceoz.html

Geen opmerkingen:

Een reactie posten