தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

இல்லாத புலிகளுக்கு விலாசமிடப்பட்ட அழைப்பாணை கடிதம்! சங்கடத்தில் இந்திய நியாயசபை!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சந்திரிகாவுக்கு சட்டச்சிக்கல்- மகிந்தவை தோற்கடிக்க முயற்சித்த சந்திரிக்கா
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:17.01 AM GMT ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு  சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வோட்டர் எட்ஜ் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றவாளியாக காணப்பட்டமையால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில் வோட்டர் எட்ஜ் ஹோட்டலுக்கு சொந்த காணியில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரிகா குமாரதுங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அதற்காக அபராதமும் செலுத்தினார்.
இந்தநிலையில் அவர் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதில் சட்டசிக்கல் உள்ளமையை அரசியல் தரப்புக்கள் கோடிட்டு காட்டியுள்ளன.
குறித்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டதன் மூலம் சந்திரிகா இலங்கையின் அரசியல் அமைப்பை மீறினார் என்ற அர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மகிந்தவை தோற்கடிக்க முயற்சித்த சந்திரிக்கா- அமைச்சர் டலஸ் அழகபெரும
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக அமைச்சர் டலஸ் அழகபெரும கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது.
கட்சியின் அன்றைய தலைவி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
இவர்களை பயன்படுத்தி இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எப்படி தோற்கடிக்க முடியும் என்று மேற்குலக நாடுகள் சிந்தித்து கொண்டிருக்கின்றன.
தமது கீழ் படியாத தலைவர்களை மாற்றும் தேவை மாத்திரமே மேற்குலக நாடுகளுக்கு உள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை மாற்றினார், நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைத்தார்.  2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாம் பேச வேண்டும்.
தேர்தல் நடைபெற்ற 21 மாவட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 10 மாவட்டங்களில் தோல்வியடைந்தார்.11 மாவட்டங்களில் மாத்திரமே வெற்றி பெற்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை விட மகிந்த ராஜபக்ஷ ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே அதிகமாக பெற்றிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அன்றைய தலைமை, சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்காக ஒரு காகித துண்டை கூட அச்சிடவில்லை எனவும் அமைச்சர் டலஸ் அழகபெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx5.html
இல்லாத புலிகளுக்கு விலாசமிடப்பட்ட அழைப்பாணை கடிதம்! சங்கடத்தில் இந்திய நியாயசபை
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:23.18 AM GMT ]
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சாட்சியமளிக்க வருமென எதிர்பார்த்து சட்டவிரோத செயற்பாட்டு (தடுப்பு) நியாயசபை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி, விசாரணையொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புலிகள் மீது இந்திய மத்திய அரசு விதித்துள்ள ஐந்து வருடத் தடையை ஏன் நீடிக்கக் கூடாதென காரணம் காட்டும் எனவும் இந்த விசாரணை மன்றம் எதிர்பார்க்கிறது.
ஆனால், இங்கு ஒரு பிரச்சினை உள்ளது. கடந்த ஜூலை 17ல் பிறப்பிக்கப்பட்ட இந்த அழைப்பாணையை யாருக்கு அனுப்புவது என எவருக்கும் தெரியவில்லை.
இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட புலிகளுக்கென ஒரு விலாசம் இல்லை. இதனால், நியாயசபையினால் பிறப்பிக்கப்பட்ட இந்த அழைப்பாணை, யாருக்கும் அனுப்பப்படாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் விலாசம் இடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இது போன்று பிரச்சினைகள் காரணமாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் காணப்படும் அமைப்புக்களின் தடைக் காலத்தை இரண்டு வருடத்திலிருந்து ஐந்து வருடமாக அதிகரிக்கும் திருத்ததை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதன் பின்னர், இந்திய அரசாங்கம், இந்த திருத்தத்தை பயன்படுத்தி புலிகள் மீது 2013ம் ஆண்டு பெப்ரவரியில் ஐந்து வருடத் தடையை விதித்தது.
ஆயினும், சட்டப்படியும் சர்வதேச நியாயப்படியும் டெல்லி மேல் நீதிமன்றம், இந்த தடையின் நியாயத்தன்மை பற்றி தீர்ப்பு கூற நீதிபதி ஜீ.பி.மித்தாவின் கீழ், ஒரு நியாயசபையை நியமித்தது.
ஆனால், மித்தாவும் நியாயசபையும் இந்த அழைப்பாணையை யாருக்கு அனுப்புவது என்று தெரியாத சங்கட நிலைக்கு முகங்கொடுத்தனர்.
இதனால், நியாயசபை, இந்த அழைப்பாணையை மத்திய உள்நாட்டு அமைச்சுக்கு அனுப்பிவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx6.html

Geen opmerkingen:

Een reactie posten