[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 05:05.19 AM GMT ]
பெண்கள் சிறையில் உள்ள பிற கைதிகள் தன்னிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதனால் தான் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்கள் சிறையில் பலரும் சிறைக் காவலாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் கைதிகள் அவதியுறுவதாகவும், இதனைக் கண்டித்தே காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக நாளினி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceo0.html
சென்னை வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு- அரசியலில் ஈடுபடப் போவதில்லை: மஹேல
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 05:27.20 AM GMT ]
சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று 4 ஆம் திகதி முதல் 7ம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் கலந்துகொள்வற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது.
அண்மையில், இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைப் பற்றி தவறாக சித்தரித்து வெளியான செய்தியால் தமிழகம் முழுவதும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு அலை எழும்பியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த குழுவினரை இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் ஈடுபடப் போவதில்லை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன
கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
டுவிட்டார் சமூக வலைத்தளத்தில் இடம்பெற்ற கருத்து பரிமாறலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஓய்வுபெற்ற பின்னர், பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கு வரும் எந்த விருப்பமும் தன்னிடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
37 வயதான ஜயவர்தன 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் 20க்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பாகிஸ்தானுடன் நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர், அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டிலும் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க, அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர்.
அர்ஜூன ரணதுங்க எதிர்க்கட்சி வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
சனத் ஜயசூரிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ஹசான் திலக்கரட்ன ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
மேல் மாகாண உறுப்பினராக பதவி வகித்து வந்த அவர், அரசியலில் இருந்து பின்னர் ஒதுங்கி கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceo1.html
Geen opmerkingen:
Een reactie posten