[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 04:04.28 PM GMT ]
அளுத்கம சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தேன்.
அளுத்கம சம்பவத்துடன் மேலும் நான்கு சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த தேர்தல் ஆணையாளரின் நிலைப்பாடு, பொலிஸார் தம்மை கண்காணித்தல், துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் வழங்காமை போன்றன தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்வதன் மூலம் சட்டத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அசாத் சாலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கோத்தா யார்? திடுக்கிடும் அந்தரங்கங்களை போட்டுடைக்கிறார்:
அசாத் சாலி இலங்கையின் அழிவுகளை ஏற்படுத்தி நாட்டை அழிக்கும் கோத்தபாய இலங்கைப் பிரஜை அல்ல, இவர் மீது அமெரிக்காவின் நடவடிக்கை மந்தம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சம்பந்தனின் காலத்தில் மோடி அரசு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தீர்வை வழங்க முன்வர வேண்டும் அல்லது நாட்டில் பாரிய ஆபத்து ஏற்படும் என தேசிய ஐக்கிய முன்னணித் தலைவரும், மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான அசாத் சாலி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcev6.html
தமிழத் தேசியத்தை குழப்பும் அரசியல்வாதிகள்: த.கலையரசன் மா.உ
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 04:37.24 PM GMT ]
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசனின் காரியாலயத்தில் புத்திஜீவிகள், த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,
“வாய்மையேவெல்லும்” என்பதற்குபதிலாக இங்கு “பொய்மையேவெல்லும்” என்பதாகதெரிகின்றது இதற்கு அண்மையில் நடைபெற்ற பல சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றது.
யாழ் காரைநகர் சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு யார் குற்றவாளி என்பது தெட்டத் தெளிவாக தெரிந்திருந்தும் ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த பிரதமர் அவர்கள் புலிக்கதை கூறி மக்களை மடையர் ஆக்குகின்றார்.
இதனை விட அண்மையில் ஒரு ஒன்றுகூடலுக்காக யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்களை அவர்கள் சென்ற வாகனத்தை சோதனையிடுவதாக கூறி உள்ளே கஞ்சாவை வைத்து கைது செய்ய திட்டம் தீட்டினார்கள். பின்னர் அது அம்பலமாகவே அதனை வேறு திசைக்குத் திருப்பி ஊடகவியலாளர்களை விசாரணை என்ற போர்வைக்குள்ளாக்கினார்கள்.
ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியே கொண்டுவரக் கூடாது என்ற நோக்கோடு பல வடிவங்களில் அவர்களுக்கான அச்சுறுத்தல்களை இந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தது. அதன் செயற்பாடுகளில் ஒன்றுதான் இந்த கஞ்சா நாடகமாகும்.
இந்தநாட்டில் தமிழர்கள் படுகின்ற துன்பவியல் வாழ்க்கையின் உண்மை நிலைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் என்பதால் கடந்த காலம் தொட்டு எமது கட்சியை ஏனைய கட்சிகளைப் போன்று பிரிப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்ட நிலையில், தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமையில் போட்டி என்ற கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். அதற்கான விடையை மிகத் தெட்டத்தெளிவாக எமது வடமாகாண முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் தொழில் வாய்ப்பு வழங்குவதில் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக முதன் முறையாக ஒத்துக் கொண்டு அறிக்கைவிட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் எதிரணியில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்ற நிலையில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சியுடன் ஒட்டிக் கொண்டும் அதுவும் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் முன்னாள் முதலமைச்சராகவும் இருக்கின்ற உங்களுக்கே இந்த விடயத்தை தட்டிக்கேட்க முடியாமல் இருக்கின்றதே நாங்கள் எதிரணியில் இருந்தாலும் அவ்வப்போது எமது மக்களுக்கு எதிரானவற்றை தட்டிக் கேட்பதோடு மட்டுமல்லாது அதற்கான நடவடிக்கைகளையும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
இந்த ஆண்டில் நியமிக்கப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் போன்றோருக்கான நியமனங்களை வழங்குவதிலும் பாராபட்சம் காட்டும் இந்த மாகாண சபை அது தொடர்பான பிரேரணையை எமது கட்சி இந்த மாகாணசபையிலே கொண்டு வந்த போது அதனை அதனை ஏற்க மறுத்து சபையினை ஒத்திவைத்த வரலாறுகளும் இந்த மாகாணசபையிலே நடைபெற்றிருக்கின்றது.
இதன் காரணமாக எமது கட்சி உயர் நீதிமண்றம் சென்று நியாயம் தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இன்றும் கிழக்குமாகாணசபையின் நிலை இப்படித் தான் இருக்கின்றது.
1987ல் எமது மக்களுக்காக கொண்டு வரப்பட்ட மாகாணசபை அதிகாரங்களை பறிப்பதற்காக திவிநெகும திட்டத்தினை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்ற கொண்டு வரப்பட்டபோது, அதனை அரசோடு இணைந்து பக்கபலமாக செயற்பட்டதை மறந்த நிலையிலா இன்று தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்.
மாகாணசபை ஒன்று இயங்குவதற்கு காரணமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை முன்னாள் முதலமைச்சர் அவர்கள் மறந்துவிடக்கூடாது. எமது மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அடக்குமுறைகளை வெளியுலகுக்கு தெளிவாக தெரியப்படுத்தியதாலேயே அண்மையில் இன்னுமொரு சிறுபாண்மை இனத்தவருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது அரசினால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியநிலை ஏற்பட்டது என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது.
தற்போது ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால் புலிக்கதைகள், பொய்யான தகவல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எதுநடந்தாலும் எமது மக்களின் நிலையான ஓரு நீதியான தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஓரணியில் செற்பட்டு எமது இனத்திற்கான தீர்வு கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டே இருக்கும். இதற்கான ஆனையை எமது மக்கள் எமக்கு வழங்கிக்கொண்டே இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcev7.html
நோக்கத்துக்கு அப்பால் ராஜதந்திரிகளின் செயற்பாடு அமைந்துள்ளன: இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:39.00 PM GMT ]
சில பிராந்தியம் மற்றும் சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம், இந்த செயற்பாடுகளை ராஜதந்திரிகள் மேற்கொள்வதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் பங்கேற்கும் போது ராஜதந்திரிகள் மிகவும் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று காணாமல் போனோரின் உறவினர்களின் சந்திப்பு ஒன்று நடைபெற்ற போது, அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்றமை தொடர்பிலேயே வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வை, அரசசார்பற்ற அமைப்பான மனித உரிமைகளுக்கான உரிமை நிலையம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்காக போரில் வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர் சிலர் வருகை தந்திருந்தனர்.
இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதும் அதில் ராஜதந்திரிகள் பங்கேற்பதும் இலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcewy.html
Geen opmerkingen:
Een reactie posten