கண்டி தலாத்துஓய பிரதேசத்தின் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்றுடன் ஒன்றிணைந்த விகாரை ஒன்றின் இளம் பௌத்த துறவி ஒருவர், கண்கவர் ஆடையில் தன்னை அலங்கரித்துக் கொண்டு இளம் யுவதியொருத்தியுடன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, விகாரையின் நிருவாகக் குழு உறுப்பினருக்கு வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். நிருவாகக் குழு உறுப்பினர் குறித்த இளம் துறவியை பிடித்துக் கொண்டுபோய் விகாரையின் தலைமைத் தேரரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த இளம் பௌத்த தேரருக்கும் யுவதிக்குமிடையே நீண்ட காலமாக காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும் அன்று, பஸ்ஸில் பயணம் செய்து பின்னர் முச்சக்கர வண்டியில் குறித்ததொரு இடத்தை நோக்கிப் பயணிக்க முனைந்தபோதே நிருவாகக் குழு உறுப்பினர் இவ்விருவரையும் இனங்கண்டுள்ளார்.
விகாரையின் தலைமை தேரரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், தலைமைத் தேரர் இருவரினதும் பெற்றோர்களை அழைத்து இருவரையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78298.html
Geen opmerkingen:
Een reactie posten