தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார!

நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழு வீசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை: இந்தியா தெரிவிப்பு
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 05:44.36 PM GMT ]
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த குழுவினர், இந்தியா வருவதற்கான வீசாவுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க மூவர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருந்தார்.
இந்தக் குழுவினர் இலங்கை வந்து விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் இருப்பதால் இந்தியாவில் வைத்து விசாரணைகளை நடத்தலாம் என்ற ஊகம் பரவலாக அடிபட்டது. எனினும் இந்தியா அதற்கான வீசா வழங்காது என்றும் ஒரு செய்தி பரவியது.
இதற்கிடையே வீசா விண்ணபத்தை இந்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் ஒரு செய்தி பரவியது. இவற்றை இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் செய்யித் அக்பர் தீன் மறுத்துள்ளார்.
மேலும் குறித்த குழுவினர் இந்தியா வருவதற்கான வீசாவுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் இந்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை குறித்து இந்திய அரசின் முன்னைய நிலைப்பாட்டில் எதுவித மாற்றங்களும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfsy.html
குமார் குணரட்னம் மீண்டும் இலங்கையில்..?
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:36.24 PM GMT ]
ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குமார் குணரட்னம் மீண்டும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
போலியான பெயர் ஒன்றைப் பயன்படுத்தி இவர் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குமார் குணரட்னம் முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக கருதப்படுகின்றார்.
குமார் குணரட்னம் கடந்த வாரம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜையான குமார் குணரட்னம் இதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட குமார் குணரட்னம் மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவுஸ்திரேலியா சென்ற அவர் தமது கடத்தலுக்கு பாதுகாப்புத் தரப்பினரே தொடர்பு என குற்றம் சுமத்தியிருந்தார்.
குமார் குணரட்னம் இரண்டு கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வருவதாகவும், இம்முறை எந்த பெயரில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfs0.html
விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 11:54.59 PM GMT ]
ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணை போகும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்ஸ்வெல் பராக்ரம பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெறுவதில் எவ்விதமான தப்பும் இல்லையென்றும் கூறினார்.
இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வதேச ரீதியில் எமது நாட்டை தனிமைப்படுத்தி நெருக்கடியில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இது இலங்கைக்கு எதிரான சதித்திட்டம். அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது.
அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது.
அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதி களின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள். அப்பட்டியலிலேயே அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இதனை கடுமையாக எதிர்க்கின்றேன்.
ஜனாதிபதியினால் உள்ளூரில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம விசாரணைக்குழுவிடம் சொல்ஹெய்ம் அல்ல எவரும் சாட்சியங்களை வழங்கலாம் இதனை எதிர்க்கவில்லை.
ஏனென்றால் இக் குழு உண்மைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நியாயமான விசாரணைகளை நடத்தும் உள்ளூர்க் குழுவாகும். இதற்கு ஆலோசனைகளை பெறுவதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டமையில் எவ்விதமான தப்பும் இல்லை.
இதன் மூலம் உள்ளூர் விசாரணைக் குழுவிற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் மேலும் வலுப்பெறும்.
இந்நிலை உருவாகும் போது எம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவின் பலம் இழக்கப்படும் நிலைமை உருவாகும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfs1.html

Geen opmerkingen:

Een reactie posten