தமிழகத்தில் ஆதரவு வீழ்ச்சி மனோ சாடல்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகவே ஊடகங்களும், பிரதான அரசியல்வாதிகளும் கருதுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிவினைவாத கோட்பாடுகளுக்கு ஆதரவளிக்க தமிழக அரசியல்வாதிகள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ரீதியில் பிரிவினைவாதத்தை கைவிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள போதிலும் இந்திய அரசியலவாதிகளுக்கு அந்த செய்தி வெளிப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழர் தொடர்பில் இந்தியாவின் தெளிவற்ற தன்மைக்கு இலங்கை அரசாங்கமும் காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இந்திய அரசியல்வாதிகளின் நிலைப்பாடும் இதுவாகவே அமைந்துள்ளது எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் தூய சிங்கள தேசமொன்றை உருவாக்க முயற்சிக்கும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகள் சர்வதேச ரீதியில் குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும், இது எவருக்கும் நன்மையை ஏற்படத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78099.html
புலிகளின் ஆயுத விபரங்களை வெளியிட வேண்டாம்: ராஜதந்திரிகள் கோரினர்
தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு ஆயுங்களைப் பயன்படுத்தியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மற்றும் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயதங்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என சில வெளிநாட்டு ராஜதந்திரிகள் கோரியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக இவ்வாறான ஆயதங்களை புலிகள் பெற்றுக்கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78102.html
Geen opmerkingen:
Een reactie posten