விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணமாகவே மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரன் காரணமாகவே அன்று மகிந்த வெற்றி பெற்றார். பிரபாகரன் ஆணையிட்டு வடக்கு, கிழக்கில் வாக்களிப்பதை நிறுத்தினார்.
வட பகுதி வாக்காளர்களின் ஐந்து லட்சம் வாக்குகளை அளிக்க விடாது பிரபாகரன் தடுத்தார். அவர்கள் வாக்களித்திருந்தால், ஒரு வாக்குக் கூட மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்திருக்காது. பிரபாகரனின் புண்ணியத்தில் மகிந்தவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள் தற்போது அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.
எமது பிரதேசத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள் மாதாந்தம் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையான சம்பளத்தை பெறுகின்றனர்.
எமது பெண்கள் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் போது அழகு நிலைங்களுக்கு சென்று சிகையலங்காரம் செய்து, முகத்திற்கு பேஷியல் செய்து கொள்கின்றனர்.
ஆடைகளை கூட அழகு நிலையங்களில் இருக்கும் பெண்களை கொண்டு அணிந்து கொள்கின்றனர். அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதனை செலுத்த பெண்களிடம் பணம் இருக்கின்றது எனவும் உயர்கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno6.html
Geen opmerkingen:
Een reactie posten