தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

நல்லூர்க்கந்தன் ஆலய வளாக விதிமுறைகளை மீறிய அமைச்சர் மேர்வின்!



தமிழர்கள் ஒருபோதும் கல்வியை இழந்துவிடக் கூடாது: த.கலையரசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 09:05.45 AM GMT ]
வடகிழக்கு தமிழர்கள் தங்களுடைய வாழ்வில் அதிகமானவற்றை இழந்திருக்கின்றார்கள் ஆனால் எதை இழந்தாலும் கல்வியை இழந்தவர்களாக தமிழர்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது என த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் 4ம் கிராமத்தில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடல் அறநெறிப் பாடசாலை அதிபர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே த. கலையரசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
நாம் பெறுகின்ற கல்வி ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாக அமைகின்றபோதுதான் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக வாழமுடியும்.
மாறாக ஒழுக்கமில்லாத கல்வியினை கற்பதனால் நாம் சமூகத்தில் இருந்து என்றோ ஒருநாள் ஒதுக்கப்பட்டுவிடுவோம்.
கலாசார சீர்கேடுகள் வடகிழக்கு மாகாணங்களில் மலிந்து கிடக்கின்றன, நாட்டிலே யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட இன்று உள்ளதனைப்போன்று கலாசார சீர்கேடுகள் இருக்கவில்லை.
தற்போதைய சமாதான காலத்தில் வடகிழக்கு மாகாணங்களில் கலாசார சீர்கேடுகள், கல்வி கற்கும் மாணவர்களினது தற்கொலைகள் என்பன மலிந்து காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
எமது இனம் எல்லா விடயங்களிலும் பாதிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் துன்பங்களையே அனுபவித்து வருகின்றது. இந்த நிலை மாறவேண்டும் எம்மிடம் இருப்பதும் எம்மால் முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவதற்குமானது கல்வி ஒன்றே.
எனவே எமது மாணவச் சிறார்கள் மதப்பற்று மொழிப்பற்றுடன் எமது கலாச்சாரத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும், என்பதோடு இதற்கு என்றும் ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள், அத்தோடு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது மட்டும் கடமையல்ல அவர்கள் நல்வழியில் செல்கின்றார்களா என்பதை அவதானிப்புடன் பார்க்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfu3.html
சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்களே மகிந்தவின் வெற்றிக்கு காரணம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 09:37.46 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்களின் பங்களிப்பே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்ட தொண்டர்களே இன்றைய அரசாங்கத்தை உருவாக்க முக்கிய காரணம் எனவும் அரசாங்கத்தின் பங்காளிகள் இதற்கு காரணம் இல்லை எனவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்கி கொள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தேர்தலில் தமது விருப்பத்திற்கு அமைய செயற்படும் சுதந்திரம் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfu5.html

நல்லூர்க்கந்தன் ஆலய வளாக விதிமுறைகளை மீறிய அமைச்சர் மேர்வின்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 09:54.06 AM GMT ]
நல்லூர் கந்தனை தரிசிக்க தென்பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா ஆலய விதிமுறையை மீறி செயற்பட்டதாக பக்தர்களினால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நல்லூரானை தரிசிக்க வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவும், அவருடைய பரிவாரங்களும் உற்சவகாலங்களில் நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்த ஆலய வளாகத்திற்குள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தியும், பாதணிகளை கழற்றாமலும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் மு.ப 12 மணியில் இருந்து பி.ப 2மணி வரைக்கும் மட்டுமே ஆலயச் சூழலில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டும் வானகனங்கள் ஆலய வீதியால் செல்ல யாழ். மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் எந்தவொரு வாகனத்திற்கும் அடியவர்கள் பிரதிட்டை செய்யும் ஆலய வளாகப் பகுதிகளில் வாகனம் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கவில்லை.
அத்துடன் பாதணிகளை அணிந்து கொண்டும் ஆலய சூழலில் செல்ல அனுமதித்து இருக்கவில்லை.
இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது பரிவாரங்களும் அனுமதிக்காத இடங்களில் வாகனங்களை நிறுத்தியும், பாதணிகளை அணிந்துகொண்டும் உட்சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொலிஸார் ஒரு சிலர் கூட தங்களுடைய பாதணிகளைக் கழற்றாது இவ்வாறு செயற்பட்டமைக்கு கந்தன் அடியார்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் யாழ். மாநகர சபை, ஆலயச்சூழலில் மகோற்சவ கால பணிமனை அமைத்திருக்கும் நிலையிலும் ஏன் இவற்றை கண்டு கொள்வதில்லை.
மக்களுக்கு ஒரு சட்டமும் இராணுவம், பொலிஸ் மற்றும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு வேறொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றனவா?
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfu6.html

Geen opmerkingen:

Een reactie posten