தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சாட்சியம்!- ஜெஹான் பெரேரா



இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் கல்லூரியில் பயிற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 10:05.14 AM GMT ]
இலங்கை படையினருக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சித் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் மனித உரிமை கவலைகளை காரணம் காட்டி பயிற்சித் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பயிற்சித் திட்டம் 2015ம் ஆண்டு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை சிரேஷ்ட கமாண்டர்கள் உட்பட 3 ஆயிரத்து 500 இலங்கை பொலிஸார் ஸ்கொட்லாந்து பொலிஸ் கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளனர்.
புதிய தலைமைத்துவ வளர்ச்சி திட்ட நிகழ்ச்சிகள் இலங்கை சிரேஷ்ட அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் அடங்குவதாக ஸ்கொட்லாந்து பொலிஸின் கல்வி மற்றும் அபிவிருத்தி பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி புரூஸ் மில்னே தெரிவித்துள்ளார்.
2015 ம் ஆண்டு வரை இலங்கை பொலிஸாருக்கு சர்வதேச தரத்திலான பொலிஸ் பயிற்சிகளை வழங்கு வெளிவிவகார அலுவலகம் நிதியுதவி வழங்கியுள்ளதை ஸ்கொட்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாயத்தின் தலைமை பதவியில் இருக்கும் நிலையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை மையப்படுத்தி மனித உரிமை தொடர்பான கவலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளின் போது நூற்றுக்கணக்கானவர்கள், ராஜபக்ஷ அரசாங்கம் செய்த குற்றங்களுக்காக விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு காரணங்களை காட்டி கிளாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பில் தயக்கம் காட்டி வரும் மகிந்த ராஜபக்ஷ, நாளை நடைபெறும் பொதுநலவாயத்தின் முதலாம் உலக போர் நினைவு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை மீது சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்ப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் தீர்மானத்தை நிராகரித்த ராஜபக்ஷ, அது நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமையும் என்று கூறினார். சர்வதேச மன்னிப்புச் சபையும் போருக்கு பின்னரான அச்சுறுத்தல்கள், இடையூறுகள் குறித்து கவலைகளை வெளியிட்டிருந்தது.
தன்னிச்சையான கைதுகள், தடுப்பு காவல், காணாமல் போக செய்தல், நீதிக்கு புறம்பான மரண தண்டனைகள், சித்திரவதைகள் போன்ற தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலரான பில் மில்லர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழர்களுக்கு எதிராக பிரித்தானியா கறைப்படிந்த போரில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்கொட்லாந்து பொலிஸ் கல்லூரியில் கட்டாயம் இலங்கை படையினருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfu7.html
சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சாட்சியம்!- ஜெஹான் பெரேரா
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 10:19.58 AM GMT ]
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவிடம் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளதாக இலங்கை சிவில் சமூக ஒன்றியத்தின் பேச்சாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நீக்கப்பட்டமை மற்றும் அவரது விலகளோடு இராணுவத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
இதனால் உருவாகிய நிலைமைகளினால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சி காரணமாக பல சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத்தில் இருந்து விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினர்.
இவர்களே சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளனர். எவ்வாறான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு தமிழ் மக்களுக்காக சர்வதேச விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாகவும் ஜெஹான் பெரேரா மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfvy.html

Geen opmerkingen:

Een reactie posten