தென் ஆபிரிக்கத் தீர்வுத் திட்டம் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில் வெள்ளை மற்றம் கறுப்பின மக்களுக்கு இடையிலான நிறவெறிப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் தென் ஆபிரிக்காவில் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. எனினும், தென் ஆபிரிக்காவின் தீர்வுத் திட்டங்கள் இலங்கைக்கு நடைமுறைச் சாத்தியமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இலங்iயை பொருத்தவரையில் அனைத்து இன மக்களும் ஒரே விதமான மரபணு மாதிரிகளைக் கொண்டவர்கள் எனவும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உரிய முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சொற்பளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதவராக வாக்களித்தால் அதிகாரப் பகிர்வு குறித்த நடவடி;ககைகளை இலகுவில் பூர்த்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்களினால் வாக்களிக்க முடியும் என்றால், இந்த தேர்தலில் ஜனாதிபதிக்கு மஹிந்தவிற்கு ஏன் வாக்களிக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழர் உரிமைகளை உறுதி செய்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தை நிறுத்தி தமிழ் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்திக்கொடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை பெரிதாக கருத வேண்டியதில்லை எனவும், சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78434.html
Geen opmerkingen:
Een reactie posten