தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

சந்திரிகா மீண்டும் மீண்டும் ஆப்பா???

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் அதில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட முன்னாள் ஜனாதிபதி எண்ணியுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.

இந்த விவகாரங்கள் குறித்து நீதித்துறையினர் மத்தியில் பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம், அவர் அந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். என சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது.
குறிப்பிட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலுக்கு துணைபோயுள்ளார் என குற்றம்சாட்டியிருந்தது.
சந்திரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தால், அவர் சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வோட்டர்ஸ் எட்ஜ் காணி கொடுக்கல் வாங்கல் வழங்கில் சந்திரிக்கா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அறிவிக்கும் திட்டமொன்றை சந்திரிக்கா முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம் சந்திரிக்காவிற்கு அபராதம் விதித்துள்ள காரணத்தினால் தேர்தலில் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்கள் எழக் கூடுமென சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிறைவேற்று அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வோட்டர்ஸ் எட்ஜ் காணி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக சந்திரிக்கா மீது குற்றம் சுமத்தி மூன்று மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அரசாங்க காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கு சந்திரிக்கா முக்கிய பங்காற்றினார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் காணிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பினை சரியாக ஆய்வு செய்ய வேண்டுமென சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட்டதா அல்லது அபராதமாக சந்திரிக்கா செலுத்தினாரா என்பதற்கு அமையவே, தேர்தலில் சந்திரிக்கா போட்டியிடுவது பற்றிய நிலைப்பாட்டை வெளியிட முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/78428.html

Geen opmerkingen:

Een reactie posten