தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த இந்திய மத்திய அரசு தீவிரம்?

பாகிஸ்தானைச் சமாதானப்படுத்த இஸ்லாமாபாத் செல்கிறார் மகிந்த

எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தாத காரணத்தினால், இந்தப் பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் பாகிஸ்தான் பயணம் தொடர்பான, ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அவர் அங்கு சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள பேச்சுக்கள் மற்றும் அவரது பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ள உடன்பாடுகள் குறித்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் . சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகின்ற போதிலும், புதுடெல்லியின் தலையீடு மற்றும் சிறிலங்காவின் நடவடிக்கைகளால் இருதரப்பு உறவுகளில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/78778.html

வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

இவ்வாறு திடீரென வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளக விசாரணைகளில் உள்வாங்கப்பட்டதன் பின்னணி தெளிவுபடுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் நடத்தும் விசாரணை சர்வதேச விசாரணையா அல்லது உள்நாட்டு விசாரணையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளக விசாரணை நடத்துமாறு ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கையிடம் கோரிக்கை விடுத்த போது விசாரணை நடத்தப்படும் உறுதியளித்திருந்தது எனவும், அந்த உறுதி மொழி இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
உள்ளக விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படாமையே சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதற்கு வழியமைத்தது எனவும், இது தொடர்பில் பல தடவைகள் பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் தாம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கம் இதுவரையில் தமது கேள்விகளுக்கு பதிலளிக்காது உதாசினமான போக்கைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78781.html

மட்டு வெல்லாவெளியில், நெஞ்சைப் பிளந்த அலவாங்கின் மனதை வருத்தும் காட்சிகள்

வேளாண்மை அறுவடை செய்யும் மெசினில் உதவியாளராக கடமைபுரியும் குறித்த நபர் அறுவடை செய்துவிட்டு மெசின் தரித்து நிற்கும்போது மெசினின் மேலிருந்து கீழே பாய்ந்து இறங்கியுள்ளார். அப்போது வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலவாங்கு இவரின் தொடைப்பகுதியில் ஏறியுள்ளது.
இச்சம்பவத்தில் அம்பாறை மாவட்டம், மத்திமுகாம் 11 ஆம் கொலனி சேர்ந்த சோமசுந்தரம்-ரநந்தன் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு அலவாங்கு ஏறியதை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனுக்கு அருகிலிருந்த விவசாயிகள் தெரியப்படுத்தியதை அடுத்து. அவ்விடத்திற்கு வைத்தியசாலையிருந்து அப்பியுலான்ஸ் வண்டியினை அனுப்பி நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கூறினார்
குறித்த நபரின் தெடடைப் பகுதிலிருந்து நெஞ்சுப் பகுதிவரை சுமார் ஒன்றரை தொடக்கம் இரண்டு அடிவரை அலவாங்கு ஏறியுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

தற்போது பாதிக்கப்பட்டவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.Batti-AlavainkuBatti-Alavainku-01Batti-Alavainku-02Batti-Alavainku-03Batti-Alavainku-04
http://www.jvpnews.com/srilanka/78783.html

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த இந்திய மத்திய அரசு தீவிரம்?

1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இந்தச் செய்திகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை.
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தமக்கு விதிக்கப்பட்டடுள்ள தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இந்த கால தாமதத்தை காரணம் காட்டி குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
அத்துடன் அவர்களை விடுவிப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில் முன்னாள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு உயர் நீதிமன்றில் உடனடியாக மனு தாக்கல் செய்து, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றது. இது தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் என்ன கொள்கை முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் ராஜீவ் கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுக்க தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார். அவர் ராஜீவ் கொலை குற்றவாளிகளை தூக்கில் போடலாம் என்று கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்தே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தூக்கில் போட பரிந்துரை செய்து மனு தயாரித்து உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யும்படி சட்ட அமைச்சிடம் உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்த 3 பேரையும் தூக்கில் போடுவதை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட சிறப்பு மனுவாக அந்த மனுவை தயாரித்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/78790.html

Geen opmerkingen:

Een reactie posten