[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 02:02.23 AM GMT ]
அரசாங்கத்தின் கீழ் மட்ட நிலை முதல் உயர்மட்ட நிலை வரையில் ஒற்றுமையில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கு இடையிலும் ஒற்றுமையில்லை.
அரசாங்கத்திற்குள் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமை புற்று நோயைப்போன்று பரவி வருகின்றது.
பிரச்சார மேடைகளில் அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கின்றனர்.
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிரச்சாரம் செய்யும் போதிலும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி என்று ஒன்றுமில்லை.
நாட்டில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திலும் 60 வீதமளவில் ஊழல் மோசடி இடம்பெறுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தொடர்பில் வெலிவேரியவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கோப் அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது
கோப் அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பாரியளவில் நட்டம் ஏற்பட்ட அரசாங்க நிறுவனங்களின் கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
47 அரச நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபா நஷ்டமடைந்துள்ளன.
ஊழல் மோசடிகள், விரயங்கள் காரணமாக இவ்வாறு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்டத்திற்கான காரணம் பற்றி விபரித்து இன்று நாடாளும்னறில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கோப் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சர் டியூ.குணசேகர அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.
இலங்கை மின்சாரசபை, பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த நிறுவனங்களில் ஏற்பட்ட நட்டம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மாலை ஊடக சந்திப்பொன்றும் நடத்தப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLces0.html
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து 95000 ரூபா பணம் மீட்பு (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 02:11.36 AM GMT ]
வெலிக்கடைச் சிறைச்சாலையின் பல்லிய வாட்டு சிறைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 95000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.
5000 ரூபா பெறுமதியான 19 நோட்டுக்களை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கொலைக் குற்றத்திற்காக பத்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளி ஒருவரிடமிருந்து பணம் மீட்கப்பட்டுள்ளது.
அண்மையில் கைதி ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட மிகக் கூடிய தொகைப் பணம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, என்ன நோக்கத்திற்காக பணம் வைத்திருந்தார் என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் காணி தொடர்பான 180, 000 பிணக்குகள் தீர்க்கப்படாத நிலையில்..!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி தொடர்பிலான 180, 000 பிணக்குகள் தீர்க்கப்படாத நிலையில் நிலுவையில் இருப்பதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிணக்குகள் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியவைகளாகும். இந்தப் பிணக்குகளில் 160899 பிணக்குகள் வடக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் ஏனையவை கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
பலவந்தமான முறையில் காணியை பிடித்துக் கொள்ளல், போலி காணி உறுதி தயாரித்தல், எல்லைப் பிரச்சினை, காணிகளின் உரிமையை உறுதி செய்ய ஆவணங்கள் இல்லாமை போன்றன பிரதான முறைப்பாடுகளாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய காணிப் பிணக்குகளை தீர்க்க திட்டமொன்று வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
காணி பிணக்குகள் பலவற்றுக்கு ஏற்கனவே தீர்வு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. நாடு முழுவதிலும் 2120 பரீட்சை நிலையங்களில் இன்று பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக் கண்காணிப்புப் பணிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களில் இடம்பெறக் கூடிய முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள 24 மணித்தியாலய சேவை மையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள் தொடர்பில் 0112784208, 0112784537 மற்றும் 1911 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும்.
இம்முறை இரண்டு லட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து முன்னூற்று பதின்மூன்று மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதில் 234, 197 மாணவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகளாகும்.
பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தல் அல்லது கூட்டங்களை நடாத்துதல் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் எம்.என். புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
உப்புல் வழக்கில் அநுர இன்று ஆஜராகிறார்
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி இன்று அநுர சேனாநாயக்க மன்றில் ஆஜராகிறார்.
தமது வாகனத்தை பின்தொடர்ந்து வரும் சிலர் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் பலமுறை முறைப்பாடுகளை செய்துள்ளார்.
எனினும் பொலிஸார் உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
இதனையடுத்து தம்மை பின்தொடர்வோரின் புகைப்படங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாரிடம் கையளித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் பிரதமர் டி.எம். ஜயரத்ன, நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது உப்புல் ஜெயசூரியவை பின்தொடரும் வாகனங்கள் பதிவு செய்யப்படாதவை என்றும் பின்தொடர்வோர் அடையாளம் தெரியாதோர் என்றும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மீனவப் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா தீவிரம்
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்ப்பதில் இந்திய அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரதீன ஜனதாக் கட்சியின் தலைவர்களை கோடிட்டு செய்தித்தாள் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி முரளிதர் ராவ் தலைமையிலான குழு நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது சுவராஜ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்தியா மீனவப் பிரச்சினை மாத்திரம் அல்லாமல் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தமது மூலவளங்களை மாத்திரம் பயன்படுத்தாமல் அனைத்து வழிகளிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக சுஸ்மா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இன்னமும் 93 தமிழக மீனவர்களும் பல படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLces1.html
அகதிகள் சமவாயத்திற்கு தவறான விளக்கம்: மொரிசன் குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 02:42.27 AM GMT ]
அகதிகள் சமவாயத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவின் மீது விதிக்கப்படும் கடப்பாடுகளை நீக்க வேண்டுமெனக் கோரி அமைச்சர் மொரிசன் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதன்போது, அடுக்கடுக்கான புதிய கடப்பாடுகளை நீதிமன்றம் விதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்கடத்தல்காரர்கள் அகதிகள் சமவாயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மரணப் பயணங்களை நடத்துகிறார்கள் என்று அவர் கூறினார்.
நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுங்கக் கப்பலில், இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேர் கடுமையாக நடத்தப்பட்டார்கள் என்று சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் குடிவரவு அமைச்சரின் கருத்து வெளியாகிறது.
தம்மை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஸ்கொட் மொரிசன் இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சமயம், தாம் நாள் முழுவதும் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இரு வார காலம் தமக்கு உடைமாற்றக் கூட அனுமதிக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது பற்றி கருத்துத் தெரிவித்த மொரிசன், இங்கு பிரச்சினையாக இருப்பது அகதிகள் சமவாயம் அல்ல. அதற்கு சட்டத்தரணிகள் பொருள்கொடுக்கும் விதம் தான் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLces2.html
Geen opmerkingen:
Een reactie posten